கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label எதிர்பதிவு. Show all posts
Showing posts with label எதிர்பதிவு. Show all posts

24 September, 2013

சமூக வலைதளங்களை கண்டித்த பிரதமர்...! கொதிக்கும் வசகர்கள்..!


ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் காட்டமான கருத்தளித்த சிலவாசகர்களின் கருத்தை இங்கு பகிர்கிறேன்..!


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar சர்தார்ஜி - உங்களுக்கு அதுக்கு மேல் பேச இத்தாலியில் இருந்து உரிமை கிடைக்கவில்லை. ஏதோ வந்தோமா குடுக்குற ஏலக்காய் டீ மற்றும் மசால் வடையை சாப்பிட்டோமா என்று இருக்காமல் ஓவரா கூவகூடாது

பி.டி.முருகன் - Trichirapalli,இந்தியா
பி.டி.முருகன்    சமூகம் என்பது என்ன? மக்கள் தானே சமூகம்? மக்களின் கருத்துகளை வலை தளத்துக்கு கொண்டு செல்ல கூடாது என்று அவசர சட்டம் போடலாமா என்று பார்க்கிறாரோ? எந்த வலை தளத்தில் மத உணர்வுகளை எவர் தோண்டுகிறார் என்று பார்த்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar வெட்கம் கெட்ட மனிதர், தன் மேல் உள்ள கையாலகாத தனத்தை அடுத்தவர் மேல் போடுவதில் இவர் மௌனியாக இருந்தே சாதிப்பார். கேவலம் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மையினர் மனதில் நஞ்சை மற்றும் அச்ச உணர்வை விதைத்ததே உங்கள் அன்னையார் தான்.

செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
செல்வ.கமலகண்ணன் ஏதேதோ சொல்லி பார்த்தாங்க எதையும் சரியா மக்கள் ஆதரிக்கிற மாதிரி தெரியலை சரி எதாவது சொல்லி வைப்போம் அது எப்பயாவது உதவும் சொல்லி பார்க்கிறாங்க அதை மக்கள் ஏத்துக்கிற ஜடியாவே இல்லை என்ன சொன்ன இவங்க சந்தோஷ படுவாங்கனு இவங்க தனிப்படை வச்சு விசாரிச்சாங்க அவங்க இவங்கிட்ட சொன்னது நீங்க ஆட்சியை கலைக்க போறாம்னு சொன்னா எல்லா மக்களும் ஆதாரிப்பாங்கனு அவங்க சொல்லிட்டாங்க அதான் இப்படி பேச்சு

ஆரூர் ரங - chennai,இந்தியா
ஆரூர் ரங எதப் பத்தி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லை இவங்க காங்கிரசோ அல்லது இவர்கள் ஆதரிக்கும் சிறுபான்மை தீவீரவாத இயக்கங்களோ சமூக வலைதலங்களையா நம்பியுள்ளன ? டெல்லி வாக்காளர் பட்டியலை வைத்தே சீக்கியர் வீடுகளைக் கண்டுபிடித்து கொன்று குவித்தபோது ட்வ்விட்டரும் பேஸ் புக்கும் இல்லையே.

டாடி எனக்கு ஒரு டவுட்டு உங்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை விட சமூக வலை தளங்களில் தகவல் உடனுக்கு உடன் கிடைக்கிறது அதுவும் நேரம் நாள் கடத்தாமல்...அதனால் மக்கள், நாட்டில் நடக்கும் அவலங்கள், அக்கிரமங்களை உடனுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது...உங்களுடைய ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு உன்னத சாதனம் சமூக வலை தளங்கள் தான்...எனவே தடை செய்ய வேண்டியது உங்கள் ஆட்சியை தான்..சமூக வலை தளங்களை அல்ல...
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
Samy Chinnathambi இவரு எல்லாத்தையும் மூடிட்டு ராஜபக்சே மாதிரி அரசாங்கத்தை நடத்தலாம்னு பாக்கறாரு.......அடுத்ததா இந்த நாட்டில் குழப்பம் விளைவிப்பது ஊடகங்கள் தான் என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கும், டிவி சானல்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்பார்...அதில் காங்கிரஸ் கட்சியையோ பிரதமரையோ விமர்சிக்க கூடாது என்பார்.......கையாலாகாத பிரதமரை கைபில்லையை போன்று இருப்பவரை விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பார்கள்? 


Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani காங்கிரசின் போலி மதவாத கொள்கையினால் வந்த கேடுகள்தான் இவை. சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று காங்கிரஸ் செயல்படுவது - கிட்டத்தட்ட இந்தியாவை துண்டு போட எடுக்கும் முயற்சியே...

senthilnathan - ramanathapuram,இந்தியா
senthilnathan // சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும்// நீர் யாரை அழைக்கிறீர் . நீர் என்ன பிரதமர் தானே , தவறை கண்டுபிடித்ததே மிக தாமதம் இதில் யாரிடம் அனுமதி கேட்கிறீர் . இழுத்து மூடுங்கள்


Vettri - Coimbatore,இந்தியா
Vettri போலி மத சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் தான் மத மோதல்கள் உருவாகின்றன. சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது உத்தர் பிரதேஷ் மந்திரி ஒரு சாரரை விடுதலை செய்யுமாறு பணித்து இருக்கிறார். அவர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதை தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்? ஆட்சி, அதிகாரம், சட்டம், போலீஸ் மற்றும் ராணுவம் அனைத்தையும் கையில் வைத்துகொண்டு சமூக வலை தளங்கள் மீது பழியை போடுகின்றனர். ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்.


ரகு - chennai ,இந்தியா
ரகு புதிய கண்டு பிடிப்பு. அரசியல் வியாதிகள் தானே மத கலவரத்தை உருவாக்குகின்றது. போலி மதசார்பின்மை என்று கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்குவது தான் இத்தாலி கொள்கை. மதத்தின் அடிப்படையில் சலுகை வழங்குவது இது எல்லாம் கலவரம் வெடிக்க காரணம் என்பதை மறந்து வலைத்தளங்கள் மீது குற்றத்தை சுமத்துவது வேடிக்கை. உங்கள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்க்கு வலைத்தளங்கள் காரணம். இதை பொறுக்க முடியாமல் வலைத்தளங்கள் மீது பாய்கிண்றீர்கள்.



Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani இப்பொழுதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் சமூக வலைத்தளங்களை பழி சொல்வது ஒரு பேஷன்.

தமிழ்நிதி - chennai,இந்தியா
தமிழ்நிதி இண்டர்நெட்டை அரபு நாடுகள் போன்று நம் நாட்டில் கட்டுபடுத்த வேண்டும். பாலுணர்வுகளை தூண்டும் மற்றும் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வலை தளங்களை தடை செய்ய வேண்டும். தவறான செய்திகளை நெட்டில் பரப்புவோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மத கலவரங்களை தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிடுவோருக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
 ‌
மேலும் கருத்துகளுக்கு...
 
என்னுடைய கருத்து...!

சமூக வளைதளங்கள் பெரும்பாலும் சில சமூக பிரச்சனைகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. ஏதோ ஒருசில தரம்கெட்டவர்களை வைத்துக்கொண்டு முழு சமூக வலைதளங்களை குறைச்சொல்வது தவறே...

சமூக வலைதளங்களில் மதஉணர்வை தூண்டும் செயல்கள் மட்டும் இல்லாமல், ஏமாற்றுவேலை, பெய்யான தகவல்களை பரப்புதல், காதல் வலை வீசுதல், சமீபத்தில் ஒரு சில கொலைகள் கூட இதனால் ஏற்பட்டிருப்பது நாம் பார்க்கிறோம். இப்படி ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த சமூகம் விழையுமானால் எல்லாம் நன்றானதாகவே நடக்கும்...!

தங்களின் கருத்தையும் பதிவுசெய்யுங்கள்..!

22 December, 2012

இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...




எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று.... 

தினமும் எதிர்படும் என்னை
உதாசினப்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...

தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை 
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...

அன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...

இன்னும் எவ்வளவு நேரம் 
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...

பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு

என் கருவிழிகள் கண்டனங்கள் 
தெரிவிக்கும் முன்...

(அப்பா... ‌எப்படியோ எதிர்பதிவு என்பதால் அதிக இடத்தில் எதிர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன், கண்டனம் என்ற வார்த்தையில் கவிதை முடிகிறது..... ஏங்க இது டிஸ்கிங்க)

உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..
(மீள் பதிவு)

09 November, 2012

என்னது...! கருத்து சொன்னா போலீஸ்ல புடிக்கிறாங்களா...!


‌பேஸ்புக், டுவிட்டர், இணைய பதிவுகளில் இதுவரை என்னவேண்டுமானாலும் போடலாம்.. யாரை வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அது சமீபகாலமாக ஒரு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. தவறாக கருத்திட்டாலோ அல்லது அவதூறான கருத்துக்களையோ செய்திகளையோ பரப்பினால் கைது என்ற நிலை தற்போது நிலவுகிறது.


ஒரு தனிமனிதர் மீது, வார்த்தை வசைகள் தொடுப்பது மற்றும் அவர்கள் கருத்துக்கு மறுப்புகருத்து வெளியிடுவது என்ற எண்ணம் தற்போது குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.


தனிமனித தாக்குதல் என்பது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமி‌ர்தமும் நஞ்சுதானே... அது சரி யார் மீது தாக்குதல் இருக்க கூடாது.. எவர் ஒருவர் பொது வாழ்வில் ஈடுபடவில்லையோ அவர்கள் மீது கண்டிப்பாக அவதூறுகள் பரப்பக்கூடாது. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரைப்பற்றி கண்டிப்பாக விமர்சிக்ககூடிய உரிமை அனைவருக்கும் உண்டு.


அரசியலோ, கலைதுறையோ, அல்லது வேறு ஏதாவது முறையில் பிரபலமானவர் ஒரு கருத்தை சொல்லும் போது அதை எதிர்த்தோ மறுத்தோ கருத்துச்சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. அப்படி சொல்வது தவறு என்றால் அந்த நபர் வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது பொதுவாழ்க்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதிர்த்து வழக்கு தொடுப்பது அவர்களை கைது செய்து தன்னுடைய பலத்தை காட்டுவது இதெல்லாம் அயோக்கிய தனம் என்று தான் நான் சொல்லுவேன்.



அதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதூறு அல்லது அவமரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னாலும் அதை ஏற்க்கொள்கிற மனபக்குவம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வரவேன்டும்.


எங்க ஊர் கோயில் மரத்தடியில் உட்கார்ந்து இன்றைக்கு முதல்வர், பிரதமர், எ‌ன அத்தனை போரையும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்காக அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைத்தால் அப்படியே  இந்தியாவில் இருக்கும் அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டியிருக்கும்.


தெருவுக்கு தெரு மேடைப்போட்டு அரசியல் கட்சிகளும் அடுத்தவர் பற்றி அவதூறு செய்திகளையும் வன்மையான வார்த்தைகளையும் சொல்லி வசைப்பாடிக்கொண்டிருக்கிறது. அவர்களை பற்றி அவர்களுக்கு எதிராக என்ன செய்துவிட்டார்கள். அந்தந்த கட்சி பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் போன்றோரின் பேச்சுகளை கேட்டால் போதும் அவ்வளவுதான் நம் காதுகள் பாழாகிவிடும்.

பொது ஊடகங்களில் பொதுவாழ்வில் இருப்போர் பற்றி அவர்களின் செயல் பாடுகள் மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்கருத்தை மறுப்பு கருத்தை பதிவுசெய்யக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. கொஞ்சம் சபை நாகரீகம் கருதி செயல்பட்டால் போதும்.

என்பதிவுகளில் சிலபதிவுகளில் சில அரசியல் தலைவர்கள், சில பொது ஊடகங்களை விமர்சித்து அவர்களின் தவறை அல்லது அவர்களின் தவறாக கொள்கையை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு செயல் செய்யும் போது அதை பாராட்டினால் ஏற்றுக்கொள்பவர்கள் அதில் உள்ள குறைகளை சொல்லும்போதுமட்டும் பொங்குவது சரியல்ல.

24 August, 2012

இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்லிக்கொள்வது.. ( இது ஒரு எச்சரிக்கை பதிவு)


அன்புள்ளம் கொண்ட பதிவுல நண்பர்களுக்கு வணக்கம்...

வரும் 26-08-2012 அன்று நடைபெற இருக்கின்ற பதிவர் மாநாட்டிற்கு தங்களை மகிழன்புடன் அழைக்கிறேன்.

கடந்தவாரம் பதிவுலகில் நடந்த சிலபல சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் சங்கடப்படவும் செய்கிறேன். நாம் ஒன்றும் சாதாரண ஆட்கள் இல்லை அனைவரும் பெரிய பெரிய படிப்புகள் படித்தவர்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து உடையவர்கள். 

தங்கள் படைப்பு மற்றும் தங்களின் நல்லுள்ளத்தால் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள். அப்படியிருக்க தேவையில்லாத சில விஷயங்களை வைத்துக்கொண்டு கருத்துக்களால் போர் தொடுப்பதில் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இங்கு யாருக்கும் யாரும் சலைத்தவர்கள் இல்லை. படைப்பால் யாரும  மாமேதைகள் தான் இதை சண்டையிட்டுதான் நிறுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


அதற்காக பிரச்சனைக்குறிய பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ இருக்கூடாது என்று சொல்ல வரவில்லை அது எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 

தற்போது ஒரு பொது இடத்தில் கூடப்போகிறோம். அதுவும் இதுவரை முகம்கூட பார்க்காத பலரை அப்போதுதான் பார்க்கப்போகிறோம். அப்போது  நட்பும் பாராட்டி, அன்போடு அரவணைத்து பழகி நம்முடைய நட்பின் எல்லையை விரிவூபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நான்கு சுவற்றுக்குள், தனிமையில், சந்தர்ப்ப சூழ்நிலையில், சூரியன் அஸ்தமனத்திற்கு பின் யாரும் உத்தமர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை விட்டு வெளியில் வரும்போதும் நாம் நல்லவர்களாக ஒழுக்கம் உடையவர்களாவே காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உலகமும் அப்படித்தான் இருக்கிறது. இதில் யாரும் மாற்றுக்கருத்தை சொல்லிவிடமுடியாது.


தனிப்பட்ட ஒருவரின் மதம், பழக்கவழக்கங்கள், சொந்த விருப்பு வெருப்புகளில்  தலையிட யாருக்கும் உரிமைக்கிடையாது. நாம் கடைபிடிக்கும் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் மற்றவர்களை பாதிக்கவோ வெறுப்படைய செய்யவோ, முகம்சுளிக்க கூடிதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒரு தனிமனிதனின் கடமை. அந்த கடமையில் இருந்து எந்த ஒரு பதிவரும் விலகிவி்டகூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.


வயதில், பதிவுலக நுழைவில்,  ஆக்க சிந்தனையில், திறனில், வசதி வாய்ப்பில், வேலையில், உடல்பலத்தில் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அன்பு காட்டுவதில் அனைவரும் சமம் என்பதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.



நம் வாழ்க்கை பதிவுகள் ஒவ்வொறு மணித்துளியும் அடங்கும். அந்த மணித்துளிகள் நான் என்னவற்றை பதிவுசெய்கிறோம் என்பது மிகமுக்கியம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷயம் கலந்துவிட்டாலும் அத்தனையும் வீணே..! பலப்பேர் கூடியிருக்கும் அவையில் ஒருவரின் ஒழுங்கின்மை அந்த விழாவையே கலங்கடித்துவிடும். 

ஆகையால் முதல்முதலாக இவ்வளவு பதிவர்கள் சந்திக்கும் இந்தவிழாவில் முகம் சுளிக்கும் அளவுக்கோ அல்லது அநாகரீகமாகவோ யாரும் நடந்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது நம்முடைய முழுகடமை.

நாளைய வரலாற்றுக்கு இன்றைய சந்திப்பு ஒரு வசந்தகாலம் போன்றது. கலந்துக்கொள்ளும் நாம் யாவரும் இந்த நிகழ்வில் அன்பையே அடையாளமாக விட்டுச்செல்வோம். அப்போது தான் பிற்காலத்தில் இந்நிகழ்வு அசைப்போடதக்கதாக இருக்கும்.

இக்கருத்து என்னுடைய சொந்தக்கருத்து. இக்கருத்தில் கூட சிலருக்கு உடன்படு இல்லாமல் இருக்கலாம். அதையும் நாகரீகத்தோடு வெளிப்படுத்துங்கள்.

இன்றைய சந்திப்பை... நாளைய சரித்திரம் பேசவைப்போம்...!

பலம் அடைவோம்.. புதியஉலகின் தலைஎழுத்தை நிர்ணயிப்பவர்கள்  நாமாகக்கூட இருக்கலாம்....!


சென்னை வரும் பதிவர்களின் பெயர் பட்டியலை காண இங்கு சொடுக்கவும்.

25 November, 2011

என்ன கொடுமை இது... கொலைவெறியுடன் ஒரு பதிவு...


ரேகை சாஸ்திரி : ரொம்ப படிச்ச, மரியாதையான, அடங்கி நடப்பவளான பெண் தான் உனக்கு மனைவியா வருவா சார்..!

மற்றவர் : ஐயையோ..! அப்படியானால் இப்போதிருக்கிற மனைவிளை என்ன செய்வது..?


பிச்சைக்காரன் 1 : டாக்டர், இனிமேல் என்னை ராத்திரியிலே கண்விழிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..!

பிச்சைக்காரன் 2 : அதுக்காகவா, கவலைப்படறியா... என்ன...!

பிச்சைக்காரன் 1 : ஆமாம்!. எனக்குச் சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லே, ஆனா “ராப்பிச்சை”ன்கிற பட்டம் பறி‌போயிடுமே, அதான் எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு...!



நபர் 1 : கிளி ‌ஜோசியம் பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயே!.. வாழ்க்கை எப்படி இருக்கு..?

நபர் 2 : அதையேன் கேட்கிறே, ‌சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னை ரொம்பவும் வெறுப்பேத்துகிறாள்..!

நபர் 1 : ???????????!!!!!!!!!!!!



ரமேஷ் : உங்களுக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கிற பழக்கமே இல்லையாமே...! உண்மையா?

சுரேஷ் : நீங்க மத்தவங்க சொல்றதையெல்லாம் நம்பாதீங்க. நீங்க இப்ப எனக்கு 1000 ரூபாய் கடன் கொடுங்க அப்புறம் பாருங்க, என்னோட நாணயத்தை..!

ரமேஷ் : ...!!!!!!!????????



மனைவி : என்னங்க, நம்ம பையன் புல்லரிக்கிற மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்...!

கணவன் : வெரிகுட்..! என் பையனாச்சே, அப்படி என்ன காரியம் பண்ணியிருக்கான்..?

மனைவி : புல் தரையிலே விழுந்து புரண்டுட்டு வந்திருக்கான், இப்போ அவனோ் உடம்பு முழுக்க அரிக்குதாம்.
 

வந்தவர் : டாக்டர், போன மாதம் நீங்க எனக்கு ஆபரேஷன் செய்ததுக்கப்புறம் என்னோட வாழ்க்கையே மாறிப்பேச்சு தெரியுமா..!

டாக்டர் : வெரிகுட்..! என்னோட திறமை அப்படி..!

வந்தவர் : மண்ணாங்கட்டி, ஆபரேஷன் செய்து என்னை சாடிச்சது ஞாபகம் இல்லியா..? இப்ப நான் ஆவியா வந்திருக்கேன்..!

 
ஒருத்தி : என்னைப் பெண்பார்க்க வந்தவர்களுக்கு நானே அல்வாவும், கேசரியும் செய்து வெச்சது ரொம்பவும், நல்லதாகப் போச்சுடி..!

மற்றவள் : ஏனடி, அப்படிச் சொல்றே..!

ஒருத்தி : கல்யாணத்துக்கப்புறம் நான் சமைக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்..!

ஏன் இந்த கொலைவெறி என்று
மனோ கோவப்படுற மாதிரி தெரியுது...
கோவம் வேண்டாம்... கூல்...

17 November, 2011

புரட்சிக்காரனின் போலிமுகம்...... ஊருக்கு மட்டும்தான் உபதேசமா...?..

நாளுக்குநாள் புதுப்புது வலைப்பூக்கள் இங்கே பூத்துக்கொண்டிருக்கிறது. இதி்ல் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமானதாகவும், அந்த வித்தியாசத்தில் நிலைத்திருக்க தங்கள் பாணியில் பல்வேறு பதிவுகள் இந்த வலைப்பூவில் பூத்துக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில்.... ஒரு பதிவர் சிலருடைய குற்றங்கள் கண்டுபிடித்து  அதில் பெரிய வல்லவராகிவிடலாம் என்று வந்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை...  புரட்சிக்காரன்தான். குறைச்சொல்லும் இந்த பதிவருக்கு புரட்சிக்காரன் என்று பெயர்.

அவர் என்பதிவில் இருக்கும் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிட்டிருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காது.  (என்னுடைய ஒரு வருட பதிவுகளில் எதற்கும் அவர் வந்ததில்லை) அதைவிடுத்து அவருடைய வலைப்பூவில் தேவையில்லாமல் என்னை மிகவும் மோசமாக விமர்சித்து  ”ஐயோ.. நான் 'இதுல' பெயிலாயிட்டேன்” ”கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......”   என்ற இரண்டு பதிவுகளிட்டு என்னை வம்புக்கு இழுத்ததால் இது அவசியமாகிறது.

முதலில் தன்னிடம் அழுக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மற்றவர்களை குறைசொல்ல வேண்டும். நாம்தான் வல்லவர்கள் என்று களத்தில் குதித்தவர் மண்ணைக்கவ்விய வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல இந்த உலகில்.

எதிலும் யாரும் வல்லவர் அல்ல என்பதை எடுத்துக்காட்ட அவருடைய வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துப்பிழைகள்.



//////// எனக்கு பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும்....அதுக்கு காரரணம் கம்யூனிசமில்லை....அமெரிக்காகாரனுங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுவதால்... ///////////////




படத்தில் காட்டியுள்ள பிழைகளை கீழே சிகப்பு எழுத்துகளில்..


//////////சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது /////////

/////////////சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்////////

/////////சிறந்த தனிமனித தாக்குதல் விருது//////// 

///////// சிறந்த கானமல் போன பதிவர் விருது  //////

இவை அனைத்து ஒரே பதிவில் உள்ள பிழைகள்





////////////// மன்னிக்கவும் நன்பரே...ஒரு ஆதங்கதில் எழுதிய பதிவு.வார்த்தைகலை திருத்தி விடுவொம //////////////


இது அவரால் இடப்பட்ட பின்னூட்டம்.


இவைகள் அனைத்தும் அவருடைய ஒருசில பதிவிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துப்பிழைகள். இதை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் எழுத்துப்பிழை என்பது யாராலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை காட்டவே.

இது போகட்டும்.. இதுவரை ஒரு முறைக்கூட என் கவிதைவீதிப்பக்கம் வராமல் என்னவோ நான் மிகப்பெரிய குற்றவாளி என்ற பெயரில் தொடர் பதிவுகளை பதிவிட்டுவருகிறார். அதற்கான விளக்கங்கள் நான் கொடுக்கவில்லையென்றால் நான் அவர் சாட்டும் குற்றத்திற்கு நான் பொறுப்பாகிவிடுவது‌போல் ஆகிவிடும்.

அந்தப்பதில் நான் கொடுத்த அத்தனை பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்காமல் அதிலுள்ள எழுத்துப்பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலே அந்த கருத்துக்களை நீக்க வேண்டியதாயிற்று. 

////////// நேரத்தை செலவு செய்து பதில் பின்னூட்டம் அளித்தால் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்து விட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டார். ////////////


அப்படி ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை புரட்சிக்காரன். வார்த்தை சண்டையில் நீர் வல்லவராக இருக்கலாம் உண்மையில் உள்முகத்தைக் காட்டுங்கள் யார் வீரரென்று புரியும். முகவரிகள் மறைத்தப்பின் நான் கூட வீரன்மட்டுல்ல மாவீரன்தான்.


அன்புள்ள புர‌ட்சிக்காரனுக்கு... கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......
 என்ற பதிவில் தங்களின் கீழ்த்தரமான கேள்விகளுக்கு என்பதில்.


/////////
அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட..//////////////


ஐயா...  நான் வாலியோ வைரமுத்துவோ அல்ல. அந்த எண்ணமும் என்மனதில் வந்ததில்லை. நான் கிறுக்குவது குப்பையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை..? கருப்பாக இருக்கிறது என்பதற்காக என்பிள்ளையை வெறுக்கவா சொல்கிறீர்கள். வளைந்திருந்தாலும் அவைகள் எனக்கு இனிப்புள்ள கரும்புகள்தான்.


////////////// கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.///////////


கவிதைகளை அழகுப்படுத்த நான் எதையோ செய்துவிட்டுப்போகிறேன். வேண்டுமென்றால் வாருங்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். என் சொந்த செயல்களை விமர்சிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை.



//////////////என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு../////////////

உண்மையே..! அதில் தங்களுக்கு என்ன நட்டம்... சந்தைப்படுத்தப்பட்ட என்கவிதை தோல்வி முகத்தோடு திரும்பினாலும் எனக்கு கவலையில்லை. அவைகளை ஆயுளுக்கும் தாய்பறவைப்போல் காக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. தங்களுக்கு மொக்கையாகத்தான் தெரியும். கவிதை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்குதேவையில்லை.


/////////
என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா)  நான் அதுல பாஸ்  ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா?//////////


// அதுல ///// என்பதற்கு தீய அர்த்தங்கள்  தங்களுக்கு மட்டும்தான் வரும். மனசு சுத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இது தவறான வார்த்தைதான். அப்படியிருக்க தாங்கள் அந்த வார்த்தையை தவிர்த்து தலைப்பிட்டிருக்கலாம்.



//////// இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....//////////////


மீண்டும் கேட்கிறேன். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதிக ஹிட்ஸ்க்காக என்று குற்றம் சாட்டுகிறீர்கள். ஆமாம் மறுமடியும் சொல்லுங்கள் அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதனால் தங்களுக்கு பாதிப்பு என்று சரியான காரணம் சொல்லுங்கள் நாங்கள் அதை தவிர்த்துவிடுகிறோம்.


/////////தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா? நான் அப்படித்தான் என்று சொல்வது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்///////////


எத்தனை முறை என்பதிவுகளை படித்துவிட்டு குறைசொன்னீர்கள். இதுவரை எந்த பதிவுக்கு வந்ததில்லை. நேற்றுதான் முதல் முதலாக வந்துள்ளீர்கள். மாதத்திற்கு ஒரு பதிவிடும் தங்களிடமே இத்தனை பிழைகள் என்றால், தினமும் பதிவிடுங்கள்.. அப்போது தெரியும் உங்களுடைய லட்சனம்.


//////அனுதாப ஓட்டு வாங்குவதை நிறுத்துங்கள்.////////

என் நியாயங்களை நாகரீகமாக சொன்னால் அது தங்களுக்கு அனுதாப ஓட்டுக்கேட்பதுபோல் இருக்கிறதா...? அனுதாப ஓட்டுவாங்கி நான் என்ன பிரதமர் பதிவிக்கா வரப்போகிறேன். கோவப்படமாமல் அமைதியான முறையில் நாகரீகமாக கருத்திடுவது தங்களுக்கு அனுதாப ஓட்டு வாங்குவதுபோல்தான் தெரிகிறதா.

ஒரு ஆசிரியர் இப்படி எழுத்துப்பிழையோடு எழுதலாமா என்று கேட்கலாம். ஆசிரியர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை குறையே இல்லாமல் இருக்க. தாங்கள் என்னிடம் அந்த ஒரு குறைமட்டும்தானே கண்டீர் பின் ஏன் ‌இவ்வளவு கேவலமான பதிவுகளிட்டீர்.


சிறந்த பதிவுகளிட, புரட்சியான விஷயங்கள் சொல்ல, எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவரை குறைச்சொல்லி அதில் குளிர்காயும் பழக்கத்தை விடுங்கள் இதோடு.

அனைவருக்கும் ஒரு செய்தி. இந்த புரட்சிக்காரன் வேறு யாரும் இல்லை நம்போடு இருக்கும் ஒரு பிரபல பதிவர்தான். அவர் யாரென்று யோசித்ததின் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

புரட்சிக்காரனின் உண்மை முகம் எது?
புரட்சிக்காரனின் கோவம் உண்மையில் என் எழுத்துப்பிழைகள் மீது மட்டும்தானா..?
என்மீது கோவப்பட்டு இரண்டு அவதூறு பதிவுகள் போட காரணம் என்ன?
எவ்வாறு என்மீது அவர் பார்வை திரும்பியது...?
தொடர் பதிவுகளிட்டு என்ன விமர்சிக்க காரணம் என்ன..?
இன்னும்... இவருக்கு துணை நிற்கும் பிரபல பிரச்சனைக்குரிய பிண்ணனியாளர் யார்?


போன்ற விஷயங்கள் அடுத்த பதிவில் அம்பலப்படுத்த போகிறேன்.....



அன்பார்ந்த பதிவுலகமே....

என் கவிதைகள் என் சூழ்நிலையை பிரிதிபலிக்ககூடியது. அவைகளில் கவித்துவம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்மனதில் தோன்றுவதை, நான் பார்ப்பதை, எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என் படைப்புகள் ஒருசில எழுத்துப்பிழைகளை கொண்டுள்ளது என்பதற்காக  அவைகள் தரம்தாழ்ந்து விடாது. 

தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி விமர்சிக்கப்படும் போது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் கோழை அல்ல.

இவைகளை வாசிக்கும் தாங்கள் வாக்கிடவேண்டும் என்றோ, கருத்திடவேண்டும் என்றோ கட்டாயமில்லை. 

எனக்கு கருத்திட்டு வாக்களித்தால் மட்டுமே மற்றவர் பதிவை வாசிக்க நான் வருவேன் என்றில்லை. எப்போதும் போல என்னுடைய வருகைகள் இருக்கும்.  

இவ்வளவு நாகரீகமாக பதிவிட்டதைக்கூட சிலர் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டலாம். அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை நான்.....


வருத்தத்துடன்....
கவிதை வீதி சௌந்தர்...

தொடர்ந்து எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்...!

Related Posts Plugin for WordPress, Blogger...