நோயாளியின் அறைக்குச் சென்ற டாக்டர் சிறிது நேரத்தில் வெளியே வந்து ”கொரடா இருக்குமா?” என்று கேட்டார்.
அதைப் பெற்றுக்கொண்டு கதவைச் சார்த்தி விட்டு உள்ளே சென்றார்.
மீண்டும் வெளியே வந்து அவர் ”திருப்புலி இருக்குமா?” என்று கேட்டார். அதையும் பெற்றுக் கொண்ட அவர் உள்ளே சென்றார்.
வெளியே காத்திருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று தவித்தனர்.
மீண்டும் வெளியே வந்த டாக்டர். ”உளியும் சுத்தியலும் வேண்டுமே” என்றார்
“டாக்டர்! உண்மையைச் சொல்லுங்க. எங்க அப்பாவுக்கு என்ன? என்னென்னவோ கேட்கிறீங்களே..!” என்று அலறினான் மகன்.
“நான் கொண்டுவந்த பெட்டியைத் திறக்க முடியலே. அதைத்திறக்கத்தான் எல்லாப் பொருட்களையும் கேட்டேன். இன்னும் நோயாளியை நான் சோதிக்கவே இல்லை” என்று பதில் சொன்னார் டாக்டர்...
***************************************************************
போலீஸ்காரரைப் பார்த்த ஒருவர், “சார்! இங்கே காரை நிறுத்தலாமா?” என்று பேட்டார்.
“நிறுத்தக் கூடாது” என்றார் போலீஸ்காரர்.
“இங்கே பல கார்கள் நிற்கிறதே. அது எப்படி?” என்று கேட்டார் அவர்.
“அவர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை” என்று பதில் தந்தார் போலீஸ்காரர்.
***********************************************************
வழுக்கைத் தலையர் ஒருவர் முடி வெட்டும் நிலையத்திற்குள் நுழைந்தார். “முடி வெட்ட எவ்வளவு கட்டணம்?” என்று கேட்டார்.
“பத்து ரூபாய்” என்று பதில் வந்தது.
“சில முடிகளை வெட்டுவதற்குப் பத்து ரூபாயா?” என்று கேட்டார் அவர்.
“கட்டணம் முடி வெட்டுவதற்கு அல்ல. முடியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு” என்று உடனே பதில் வந்தது.
****************************
நன்றி..!
நன்றி..!
3வது ஜோக் புதுசா இருக்கு. எங்கே இருந்து சுட்டீங்க? எஸ்.எம்.எஸ்லயா?!
ReplyDeleteகடைசி ஜோக் சூப்பர்
ReplyDeleteஹிஹிஹி
ReplyDeleteமூன்றுமே செம.. குறிப்பாக மூன்றாவது செம! :D
ReplyDeleteஹா..ஹா...
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஅதிலும் குறிப்பாக முதலும் முடிவும்
எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteSUPER JOKES ANNAA
ReplyDeleteமூன்றுமே அருமையான ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
நல்ல இருக்குயா சிப்பு சிப்பு போங்க
ReplyDeleteஹா... ஹா... 1 & 3 - கலக்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி...
ReplyDeleteபடித்தது மூன்று
பிடித்தது நன்று!
:)))
ReplyDeleteகடைசி சூப்பர்..
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அத்தனையும் அருமை - சிரித்துச் சிரித்து மகிழ்ந்தேன் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபோலீஸ் ஜோக் சூப்பர்
ReplyDeleteஅனைத்தும் அருமை !
ReplyDelete