கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 December, 2010

தன்னியக்க வங்கி இயந்திரம் / ATM

தன்னியக்க வங்கி இயந்திரம்


தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பாப்பது பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இந்திரமாக்கி, தன்னியக்காம்மியது. பொதுவாக் இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விட்டுவர். இந்த இயந்திரம் முதலில் 1967 ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது.

கண்டுபிடித்தவர்

ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன்.
23 June 1925 – 20 May 2010
நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்றாட வாழ்வில் பெரும் பயனளிக்கக் கூடியதே 'ஏ.டி.எம்.' என்றால், அது அணுவளவும் மிகையாகாது.
   இந்த ஏ.டி.எம்.மின் பயன்பாடுகள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. நம்மில் அனைவருக்குமே கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
ஏ.டி.எம்.மை Any time money என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அவசர காலத்தில் நினைத்த மாத்திரத்தில் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்வதற்கு வசதியாக, நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே ஏ.டி.எம். மையங்கள் விரவிக் கிடப்பதை அறிவோம்.
     
    ஏ.டி.எம். உருவாவதற்கு தூண்டுகோலாக இருந்ததே ஜானின் மோசமான அனுபவம் ஒன்றுதான். ஒருநாள் அவசரத் தேவைக்காக பணம் எடுப்பதற்கு வங்கிக்குச் சென்றார், ஜான். ஆனால், வங்கியின் வேலை நேரம் முடிந்துவிட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிகழ்வுக்கு வருத்தப்பட்ட ஜானின் மூளையில் உதித்தது ஒரு யோசனை...

'சாக்லெட் வெண்டிங் மெஷினைப் போலவே பணப்பட்டுவாடாவுக்கு மெஷின் உருவாக்கினால் என்ன?' என்பதே அந்த யோசனை.
உடனடியாக செயல்படத் தொடங்கிய ஜான், முதன்முதலில் ஏ.டி.எம்.மை உருவாக்கினார். அதற்கு உரிய அங்கீகாரமும் கிடைத்தது.
      அதன்பின், முதன்முதலில் கடந்த 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
அதேபோல், ஆரம்ப காலக்கட்டத்தில் 6 இலக்க ரகசிய குறீயிட்டு எண் (PIN) தான் பயன்படுத்தப்பட்டது. அதனை தன்னுடைய மனைவியால் நினைவில்கொள்ள முடியாததை அறிந்த ஜான், நான்கு இலக்க 'பின்' நம்பரை உருவாக்கித் தந்தார் என்பதும் நினைவுகூரத்தது.

இச்சிறப்புமிக்க எந்திரத்தை முதன்முதலில் உருவாக்கியவரே ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron). உடல்நல பாதிப்பால் அவதியுற்று வந்த இவர், மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பலனின்றி 20-05-2010 மரணமடைந்ததார்.

1 comment:

  1. ஏடி எம் பத்தி எழுதியிருக்கிங்க,அதை கண்டுபிடிச்சவர் பெயர் தெரிஞ்சிகிட்டேன், எங்கயாச்சும் பயன்படும் நன்றி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...