கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 December, 2010

அட்டகாசம் - வாரம் ஒரு தகவல்


“அட்டகாசமா இருக்கீங்க சார்..!”

“ஹி!”

“அதுக்குக் காரணம் நீங்க போட்டிருக்கிற இந்தக் கோட்டும் சூட்டும்தான்!”
 
“ஒரு ரோஜாப் பூவை வாங்கி நெஞ்சிலே குத்திக்கிட்டேன்னா இன்னும் பிரமாதமா இருக்கும்..!”
 
“பூவை சட்டையிலே வச்சிக்கிற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா..?”
 
“தெரியாதே...”
 
“விக்டோரியா ராணியை மணந்து கொண்ட ஆல்பர்ட் முதல் தடவையா பிரிட்டனுக்கு வந்தார். அப்போ ராணி அவருக்கு ஒரு பூச்செண்டைக் கொடுத்து வரவேற்றார். ஆல்பர்ட் அது‌லேயிருந்து ஒரு பூவை எடுத்துத் தன்னுடைய கோட்டு கால‌ர் மடிப்பில் ஒரு துளையிட்டு அதுலே செருகிக் கிட்டார். அவ்வளவுதான்... எல்லோரும் அப்படி வச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அதுக்கப்புறம் தையல்காரர்க‌ளே கோட்டுத் தைக்கிறப்போ ‌அதுலே ஒரு துளைவச்சிக் கொடுத்துடறது வழக்கமாகப் போச்சு..!”
 
“இந்தக் கோட்டைத் தைச்சவரும் ஒரு துளை வச்சித்தான் தச்சிருக்கார்..!”
 
“அவருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவிக்கணும்னு ஆசைப்படறேன்..!”
 
“அப்படியா...?”
 
“ஆமாம்... அதுக்கு நீங்க ஓர் உதவி செய்யமுடியுமா?”
 
“என்ன செய்யணும்ங்கறீங்க?”
 
“இந்த கோட்டைத் தைச்சவர் அட்ரஸ் எனக்கு வேணும்..!”
 
“அவரோட அட்ரஸை நான் உங்களுக்குத் தருவேன்... ஆனா நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்..!”
 
“என்ன செய்யணும் சொல்லுங்க?”

“என்னோட அட்ரஸை நீங்க அவர்கிட்டே சொல்லிடப்புடாது..!”

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...