கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 December, 2011

ரசிகர்களை ஏமாற்றிய 2011 -ன் டாப் 10 மொக்கைப் படங்கள் / Top 10 Mokkai Tamil Movies in 2011


2011-ல் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. (2011-ல் வெளிவந்த படங்களை பார்க்க) அவைகளில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியடைவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுகிற படங்கள் தோல்வியை தழுவும்போது எல்லாதரப்பிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அப்படிபட்ட கதை, இப்படிப்பட்ட கதை, இது தமிழ்சினிமாவில் புதுசு என்றெல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு படத்தை வெளியிடுவார்கள். அப்படி வரும் படங்களை பார்க்கும்போது இது வெறும் வெத்துவேட்டு என்று ரசிகர்களால் ஓரம் கட்டப்படும். அப்படி ஓரம்கட்டப்பட்ட ஐ-பட்ஜெட் படங்களைத்தான் டாப் 10 மொக்கைப்படங்கள் என்று இங்கு வெளியிட்டுள்ளேன்.

அவைகள்...

1. வெடி
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் அதிரடியாக நடித்தபடம்.
சண்டை, ஹீரோயிஷம் என பழயை பல்லவியையே பாட...
போட்ட பணத்தைகூட எடுத்தார்களா என்று தெரியவில்லை.

கவிதைவீதி பஞ்ச் : வெடி - புஸ்வானம்

2. ராஜபாட்டை
இந்த படத்தில் மிகப்பெரிய பலமாக இவர்கள் சொல்வது விக்ரம் 18 கெட்டப்பில் வருகிறார் என்பதே...

அதை நிறுத்தியிருந்தாலே போதும் காசாவது கொஞ்சம் மிச்சமாயிருக்கும்.
ஸ்ரேயா-ரீமாசென்னை நம்பியதற்க்கு பதிலாக நல்ல கதையை நம்பியிருக்கலாம் இயக்குனர் சுசிந்திரன்.
 
கவிதை வீதி பஞ்ச் : ராஜபாட்டை : கம்பீரம் இல்லை

 பழைய மலையூர் மம்பட்டியானை வைத்து பிரசாந்த் நடித்த படம்.
புதிய ‌ட்ரெண்டுக்கு ஏற்ப மாற்றமுடியாத பழைய கதை ஆகையால் இது எடுபடவில்லை.

கவிதைவீதி பஞ்ச் : மம்பட்டியான் - பழைய பல்லவி

4. 180
 தெலுங்கில் கலக்கும் சித்தார்த் ஏன்னென்று தெரியவில்லை தமிழுக்கு ஒத்துவரவில்லை.
 
கவிதைவீதி பஞ்ச் : 180 - ரூல்ஸே வேண்டாம்.

5. ஒஸ்தி
இருப்பதில் இதுதான் செம மொக்கை.
தரணியின் அதிரடி படவரிசையில் இப்படம் இடம் பெறாது.
 
கவிதைவீதி பஞ்ச் : ஒஸ்தி - படு நாஸ்தி

6. மாப்பிள்ளை
ரஜினியின் படத்தை ரீமேக் செய்ய, அப்படியே கவுத்துக்கிச்சி இந்தப்படம்
 
கவிதைவீதி பஞ்ச் : மாப்பிள்ளை- எடுப்பில்லை

7. நடுநிசி நாய்கள்
கௌதம் மேனன் தயாரிப்பில் வந்தப்படம்.
மிகுந்த எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கதையில் இருந்த கொடுமையால் இப்படம் ஓடவில்லை.

கவிதைவீதி : நாடுநிசி நாய்கள் - பயம் இல்லை

8. வேங்கை
 ஹரியின் அதிரடியில் எடுக்கப்பட்ட படம் ஆனால் தனுஷிக்கு எடுபடவில்லை
 
கவிதைவீதி பஞ்ச் : வேங்கை - சீற்றம் இல்லை

9. மயக்கம் என்ன

செல்வராகவன்-தனுஷ் கூட்டணி மிகப்பபெரிய வெற்றிப்படம் என கதைவிட்டார்கள். ஆனால் கண்டுக்கொள்ளபடவில்லை.

கவிதைவீதி பஞ்ச்: மயக்கம் என்ன - தெளியவே இல்லை

10. வந்தான் வென்றான்
 
கோ   படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட படம்
ஆனால் எடுபடவில்லை.
 
கவிதைவீதி பஞ்ச் : வந்தான் - தோற்றான்.

அவ்வளவுதான் மக்களே.
இதைவிட ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது
வரும் 30-ந்தேதி கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகிறது. அவற்றை அடுத்த ஆண்டு பட்டியலில் சேர்த்து விடலாம்.

14 comments:

  1. அவன் இவன், மொக்கை லிஸ்டில் வரலையே, அந்த படம் அவ்வளவு நல்லாவா இருந்த்ச்சு.

    ReplyDelete
  2. கவிதை வீதி பஞ்ச் அருமை..

    ReplyDelete
  3. இரண்டு இரண்டு வரி என்றாலும் விமர்சனம் வீச்சு :)

    ReplyDelete
  4. PLZ REMOVE THAT BIRD FLYING HERE AND THERE. REALLY DISGUSTING

    ReplyDelete
  5. //////
    Raja said... [Reply to comment]

    PLZ REMOVE THAT BIRD FLYING HERE AND THERE. REALLY DISGUSTING

    //////

    போட்டுடேன் எப்படி எடுக்கிறதுன்னு தெரியல.. கூடிய சீக்கிறம் எடுத்துடுறேன் ராஜா

    ReplyDelete
  6. கவிதை வீதி சௌந்தர் சார் கவிதையில தான் கலக்குவருனு பார்த்தா பஞ்ச் ல பின்றாரே...

    தனுஷ் நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்.......


    இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

    ReplyDelete
  7. ரொம்ப சரி எல்லாமே மொக்கை படங்கள்தான்.

    ReplyDelete
  8. நல்லாவே தொகுத்திருக்கீங்க. கவிதை வீதி பஞ்ச்கள் அருமை!

    ReplyDelete
  9. மொக்கைகளை இனம் கண்டு சொன்னது சரிதான்..


    அன்போடு அழைக்கிறேன்..

    வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  10. வந்ததுக்கு அடையாளமா ஓட்டும் போட்டாச்சு !

    ReplyDelete
  11. அழகாய் தொகுத்து தந்துள்ளீர்கள் நண்பரே

    த.ம 6





    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  12. ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...