உன் நினைவு
எப்போதெல்லாம் பொழிகிறதோ!
அப்போதெல்லாம்
முளைத்த காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!
மனதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல
நினைக்கையில்...
முடியாமல் போகிறது
முன்பே சுரந்துவிட்ட
கண்ணீரால்..!
கத்தியின்றி ரத்தமின்றி
ஒரு மரணம்..!
யுத்தமின்றி சப்தமின்றி
ஒரு வன்முறை..!
உன் மௌனத்தால்..!
காதல் தொடங்கியபோது
அரை கவிஞன் ஆனேன்..!
காதல் முடிந்த போது
முழு கவிஞனாகிவிட்டேன்..!
தமிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார் சொன்னது...
அதோ ...!
அவளை உச்சரிக்க விடுங்கள்..!
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல் போயிருக்கலாம்
ஆனால்,
காதலை யாரும்
சபித்தது கிடையாது..
எட்டவில்லையென்றாலும்
இது இனிக்கின்ற பழமே...!
சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...!
எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!
தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!
வீசிய வலையில் சிக்கிய படங்களுடன்
என் காதல் கவிதைகள்...!
என் காதல் கவிதைகள்...!
நல்ல தொகுப்பு..!
ReplyDelete:-)
ReplyDeleteநல்லதொரு வழிமுறை நண்பா..
ReplyDeleteகவிதை அருமை.
தாங்கள் கவிதை வெளியிடும் அழகே தனி..
ReplyDeleteஎல்லா வரிகளும் காதல் காதல் காதல்...
ReplyDeleteலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு
காதல் ரசம் சொட்டும் கவிதை இனிமை...
ReplyDeleteகாதல் முடிந்த போது
ReplyDeleteமுழு கவிஞனாகிவிட்டேன்..!//
சத்தியமான உண்மை...!!!
காதலாகி காதலுக்காய் எழுதப்பட்ட காதல் கவிதைகளை ரசித்துப் படித்தேன். ஆனால் படிக்க வெகுநேரமானது. நீங்கள் வைத்திருந்த படங்கள் கண்ணை இழுத்து ரசிக்க வைத்து விட்டன. நல்ல ரசனையான படங்களுக்கு நன்றி!
ReplyDeleteதமிழுக்கு அங்கீகாரம்
ReplyDeleteகிடைக்கவில்லையென்று
யார் சொன்னது...
அதோ ...!
அவளை உச்சரிக்க விடுங்கள்..!//
யோவ் நீர் கனிமொழியை சொல்கிறீரா..??? கவலை வேண்டாம், இனி மேடைகளில் வெக்கமில்லாமல் பேசுவதை கேட்க்கலாம்...!!!!
////மனதோடு புதைந்த காதலை
ReplyDeleteவிழிவழியாய் சொல்ல
நினைக்கையில்...
முடியாமல் போகிறது
முன்பே சுரந்துவிட்ட
கண்ணீரால்..!////
அருமை அருமை...காதல் மழை பொழிகின்றது...
அருமை.
ReplyDeleteஎழுதத் தெரிந்தாலும்
ReplyDeleteஎழுத முடிவதில்லை..!
உண்மைதான்..
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எல்லாமே சூப்பர்.
ReplyDeleteசந்தர்ப்ப சூழ்நிலைகளால்
ReplyDeleteபிடிக்காமல் போயிருக்கலாம்
ஆனால்,
காதலை யாரும்
சபித்தது கிடையாது..
>>
ரசித்த வரிகள். காதல் தோல்வியுற்றாலும், வெற்றி பெற்றாலும் எல்லார் மனமு காதலை கொண்டாடும். வாழ்த்துக்கள் சகோ
//சொல்லத் தெரிந்தாலும்
ReplyDeleteசொல்ல முடிவதில்லை...!
எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!
தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!
//
அருமையான வரிகள்
இன்று
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
அருமையான கவிதை நண்பா
ReplyDeleteமுதல் கவிதையிலேயே முடிந்து போனேன் நான். கவிதைகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteநானும் கவிதை எழுதுறேன்னு கடைய திறந்து மூணு மாசமாகுது...ஏன் கூட்டத்தையே காணும்ன்னு இப்பதான் புரியுது....:)
ReplyDeletehttp://cmayilan.blogspot.com/2011/10/blog-post_06.html
ReplyDeleteஇந்த விலாசத்துக்கு முடிஞ்சா வாங்க சௌந்தர்..:)
//தொண்டையில் சிக்கிய முள்போல்
ReplyDeleteஉள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!//
வாவ்! அருமை!
அருமையான படங்களுடன் அழகான கவிதை தொகுப்புகள் ரசித்தேன்
ReplyDelete’தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியைப் பின்பற்றலாம்’என்று சொல்லிவிட்டு, உறக்கத்தில் கனவு காணும் பெண்ணின் படத்தைப் போட்டிருக்கிறீர்கள்.
ReplyDelete“தமிழா, நீ ஒரு போதும் அங்கீகாரம் பெறப்போவதில்லை. அப்படிக் கனவு கண்டாவது திருப்தி பட்டுக் கொள்” என்றுதானே சொல்கிறீர்கள்?
தமிழனுக்கு உறைக்குமா நண்பரே?
காதல் சொட்டும் கவிதைகள் அசத்தல்
ReplyDeleteகாதலோ,காதல்.
ReplyDeleteகாதலோகாத......ல்
ReplyDelete//உன் நினைவு
ReplyDeleteஎப்போதெல்லாம் பொழிகிறதோ!
அப்போதெல்லாம்
முளைத்த காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!//
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கவி அருமை.
உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.
ரோஜாக்கள் என்றும் ரோஜாக்கள்தான்.
ReplyDeleteநினைவில் முளைத்த காளான்கள் சுவையாயிருந்தது.
நல்லா இருக்கு மாப்ள....
ReplyDelete//தொண்டையில் சிக்கிய முள்போல்
ReplyDeleteஉள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!//
மாதிரிக்கு ஒன்றே-இத்
மற்றவையும் நன்றே!
அருமை!அருமை!!
புலவர் சா இராமாநுசம்
அசத்தனால காதல் கவிதைகள்..
ReplyDeleteபாராட்டுகள்..
அருமையான படங்கள்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகான கவிதை வரிகள். உள்ளம் கொள்ளை போகுதே....
ReplyDeleteநம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
ஒவ்வொரு வரிகளும் அருமையானதாய் உள்ளது . சிறப்பான காதல் கவிதை
ReplyDelete