தமிழ் சினிமா தற்போது உலக சினிமாவோடு போட்டிப்போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளது. 2011-ல் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட படங்கள் வந்து தமிழ் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
ரஜினி மற்றும் கமல் படங்களைத்தவிர மற்ற அத்தனை நட்சத்திரங்களுடைய படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன. விஜய், அஜித், மற்றும் தனுஷ், சூர்யா, விக்ரம் போன்றோர்க்கு இந்த ஆண்ட சிறப்பாகவே இருந்தது எனலாம்.
சினிமாவை ஒரு ரசிகனாய் ரசித்துபார்க்கும் ஞானம் மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த அடிப்படையில் 2011-ல் நான் பார்த்து ரசித்து பரவசப்பட்ட படங்களை இங்கு பட்டியலிட்ட இருக்கிறேன். இவை Top-10 என்ற அளவில் வரிசைப்படுத்த வில்லை. இந்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பாதித்தது எனலாம். அவைகளின் பட்டியல்.
1. ஆடுகளம்.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த இப்படம் சேவல் சண்டையை மைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. நடிப்பு இயக்கம் கலை என பல்வேறு தேசிய விருதுகளை பெற்றது. தனுஷின் நடிப்பு இதில் எல்லோராலும் பராட்டும்படி இருந்தது. இதில் நடித்த கதாநாயகி தப்ஸி மிகவும் பிரபலமாக போசப்பட்டார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடலுக்கு தனி பெயரை இப்படம் பெற்றது.
ஆத்தே.. பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
ஆத்தே.. பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
2. மங்காத்தா
அஜித்தின் அசத்தல் நடிப்பில், வெங்கட்பிரபு கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அஜித்தின் 50-வது படம் என்ற எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியது. சூதாட்ட குழுவிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு கும்பலின் கதையை மையப்படுத்தி மும்மையில் எடுக்கப்பட்ட படம். அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி ஆகியோர் நடித்து தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெறற்ப்படம்.
இந்தப்படம் இதுவரை 130 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
3. 7-ஆம் அறிவு
6-நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் என்ற மகானின் வாழ்க்கை வரலாரை மையபப்டுத்தி எடுக்கப்பட்ட படம்.
சூர்யா இந்த படத்தில் மிகவும் சிரமம்கொண்டு நடித்திருக்கிறார்.
சூர்யா இந்த படத்தில் மிகவும் சிரமம்கொண்டு நடித்திருக்கிறார்.
போதி தர்மனாக வரும் சூர்யாவின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது. தமிழரின் பெருமையை இப்படம் உலம்முழுவதும் எடுத்துச்செல்லும் என்ற ஏ.ஆர்முருகதாஸின் நம்பிக்கை இப்படம் முழுமையாக நிறைவேற்றியது.
4. எங்கேயும் எப்போதும்
இரு வேறு குணாசியங்கள் கொண்ட இரண்டு ஜோடிகளை மைப்படுத்தி எடுக்கப்பட்ட காதல் காவியம்.
கதை ஒரு பேருந்து பயண விபத்தில் தொடங்கி அதில் பயணப்பட்ட இரண்டு ஜோடிகளின் காதலை அழகுபட சொல்லி மிகப்பெரிய பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றப்படம்.
ஜெய், அஞ்சலி, சர்வானந்த் அனன்யா. என இரண்டு ஜோடிகளின் வல்லின மற்றும் மெல்லின காதலை அழகுற சொல்லியிருப்பார் இயக்குனர் சரவணன்.
இருபேருந்து மோதிக்கொள்ளும் காட்சிகள் தத்ரூபமாக காட்டி சிலிர்க்க வைத்திருப்பார். இப்படி எனக்கு மிகவும் பிடிந்திருந்தது.
இருபேருந்து மோதிக்கொள்ளும் காட்சிகள் தத்ரூபமாக காட்டி சிலிர்க்க வைத்திருப்பார். இப்படி எனக்கு மிகவும் பிடிந்திருந்தது.
5. தெய்வத்திருமகள்
இயக்குனர் விஜய்யின் படைப்பில் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இத்திரைப்படம்.
கமர்சியலாக வெற்றிப்பெறா விட்டாலும் விக்ரமின் நடிப்புக்கு ஆஸ்கார்கூட கொடுக்கலாம்.
கமர்சியலாக வெற்றிப்பெறா விட்டாலும் விக்ரமின் நடிப்புக்கு ஆஸ்கார்கூட கொடுக்கலாம்.
மூளை வளர்ச்சியில் சிறியவனாக இருக்கும் ஒருவன் திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்று அந்த குழந்தை மிகுந்த பாசத்துடன் வளர்ப்பது போன்ற கதை
தன் குழந்தையை தொலைத்துவிட்டு நிலா... நிலா... என விக்ரம் தன்னுடைய குழந்தையை மீட்க போராடும் காட்சிகள் கண்ணீர் வரவைக்கூடியவை.
அனுஷ்கா, சந்தானம் கூட்டணி படத்திற்க்கு பலம்.
6. கோ
கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஜீவா நடித்து மிகப்பெரிய வெற்றிப்படம் கோ.
ஒரு போட்டாகிராப்பராக ஜீவா தன்னுடைய நண்பருக்கு அரசியலில் உதவிச்செய்வதுபோல் கதை அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு போட்டாகிராப்பராக ஜீவா தன்னுடைய நண்பருக்கு அரசியலில் உதவிச்செய்வதுபோல் கதை அமைக்கப்பட்டிருந்தது.
திரைக்கதையில் இருந்த வித்தியாசம் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
“என்னமோ ஏதோ” பாடல் தமிழ் நெஞ்சங்களை ஆட்டிவைத்தது.
7. காவலன்
விஜய் அவர்களை மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்டப்படம் காவலன்.
தன்னுடைய பாணியில் இல்லாமல் மிகவும் யதார்த்தமான ஒரு காதல் திரைப்படமாக இது அமைந்தது.
தன்னுடைய பாணியில் இல்லாமல் மிகவும் யதார்த்தமான ஒரு காதல் திரைப்படமாக இது அமைந்தது.
இதன் வெற்றிமூலம் தன்னுடைய இரண்டாது வெற்றிக்கணக்கை விஜய் துவங்கினார் என்று சொல்லாம்.
விஜய்-வடிவேலு கூட்டணி நகைச்சுவையில் அசத்தியிருந்தது.
8. எங்கேயும் காதல்
ஜெயம் ரவியும், ஹன்சிகா மோட்வானியும் இணைந்து பாரீஸில் படமாக்கப்பட்ட படம் எங்கேயும் காதல்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அமர்க்களப்பட்டது.
தன்னுடைய கமர்சியல் பாணியை மாற்றி பிரபுதேவா நல்லதொரு எதார்த்தமான காதல் கதையை இதில் பதிவு செய்தார்.
9. வானம்
வானம் சிம்புவுக்கு மீண்டும் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்த படம்.
நான்கு காதாப்பத்திரங்களை மைப்படுத்தி நான்கு விதமான திசையில் பயணித்து இறுதியில் ஒரு அச்சில் சந்திப்பதுபோன்று கதை அமைக்கபட்டிருந்தது.
நான்கு காதாப்பத்திரங்களை மைப்படுத்தி நான்கு விதமான திசையில் பயணித்து இறுதியில் ஒரு அச்சில் சந்திப்பதுபோன்று கதை அமைக்கபட்டிருந்தது.
சிம்பு, பரத், சந்தானம், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா. ஆகியோர் சிறப்புற நடித்திருப்பார்கள்.
சிம்புவின் “என்ன வாழ்க்கடா இது” என்ற வசனம் அனைத்து இளைஞர்களையும் உச்சரிக்க வைத்தது.
10. அவன்-இவன்
பாலாவின் இயக்கத்தில் விஷாலும் ஆர்யாவும் இணைந்து கலக்கிய படம். கமர்சியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நடிப்புக்கு பேசப்பட்டபடம்.
பாலாவின் வித்தியாசமான கதைக்களம் இதிலும் பளிச்சிட்டது.
பாலாவின் வித்தியாசமான கதைக்களம் இதிலும் பளிச்சிட்டது.
மேலும் இவ்வாண்டில் போராளி, மௌனகுரு, பாலை, உச்சிதனை முகர்ந்தால், யுத்தம் செய் போன்ற படங்களை நான் பார்க்கவில்லை என்பதால் அந்த படங்கள் குறித்து என்னால் விமர்சனம் செய்யமுடியவில்லை.
pakirvukkup paaraattukkaL..
ReplyDeleteஉங்கள் லிஸ்ட்டில் இருந்து என்றென்றும் காதல், அவன் இவன் படங்களை எடுத்துவிட்டு ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை ஆகியவற்றை நான் சேர்ப்பேன் சௌந்தர் ஸார்! மற்றபடி நீங்க சொல்லிய எல்லாப் படங்களும் நானும் ரசித்தவையே. அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்தும் அருமையான படங்களின் அணிவகுப்பு..
ReplyDelete////////
ReplyDeleteகணேஷ் said... [Reply to comment]
உங்கள் லிஸ்ட்டில் இருந்து என்றென்றும் காதல், அவன் இவன் படங்களை எடுத்துவிட்டு ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை ஆகியவற்றை நான் சேர்ப்பேன் சௌந்தர் ஸார்! மற்றபடி நீங்க சொல்லிய எல்லாப் படங்களும் நானும் ரசித்தவையே. அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
////////
தங்கள் குறிப்பிட்ட படங்களை நான் பார்க்க வில்லை ஆகையால் அதை நான் வரிசையில் கொண்டு வரவில்லை.
அழகர்சாமியின் குதிரை படம் சிறபபபான படம்தான்..
இந்த வரிசை பட்டியலில் நான் பார்த்த படங்களை மட்டுமே வரிசைப்படுத்தியிருக்கிறேன்
யுத்தம் செய் படம் பார்க்கலியா.. யோவ் நல்ல படத்த மிஸ் பண்ணாதா சீக்கிரம் பாரு.. இந்த வானம் ன்னு ஒரு படம் போட்டு இருக்கியே அந்த படத்தை பார்த்துட்டு எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்னைக்கேட்டால் 2011 இல் மிகவும் என்னைக்கவர்ந்த படம் ஆடுகளம்,
ReplyDeleteமங்காத்தா,வானம்,எங்கேயும் எப்போது,அழகர் சாமியின் குதிரை போன்ற ஏனைய படங்களும் 2011 இல் வெளியான படங்களில் எனக்கு பிடித்த படங்கள்
உங்கள் தொகுப்பு அருமை
மங்காத்தா 2ம் இடம், கொஞ்சம் உதைக்குது. என்றாலும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுது.
ReplyDeleteரசிக்கத்தகுந்த வரிசை நண்பரே..
ReplyDeleteஎனக்கென்னவோ தெய்வத்திருமகளை
முதலில் போட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது..
இந்த் வரிசையில் காவலன் , எங்கேயும் எப்போதும் , அவன் இவன் , வானம் இவற்றை தூக்கி விட்டு காஞ்சனா , யுத்தம் செய் , சிறுத்தை , ஆரண்ய காண்டம் இவற்றை இணைத்தால் அதுதான் என்னுடைய டாப் டென்...
ReplyDeleteசாரி எங்கேயும் எப்போதும் இல்லை , எங்கேயும் காதல் ...
ReplyDeleteஆடுகளமும், எங்கேயும் காதல் பட பாடல்கள் மட்டுமே என் நினைவில் நின்றட்வை
ReplyDeleteஎன் சாய்ஸ் ஆடுகளம், எங்கேயும் எப்போதும் and கோ
ReplyDeleteநன்றி நண்பரே!
நான் பார்த்தது எழாம் அறிவும், காவலனும் ஓகே...!!!
ReplyDeleteஇந்த ஆண்டின் திரைப்பட வரிசை அருமை சௌந்தர். பகிர்தலுக்கு நன்றி. என்னை பொறுத்தவரை இந்த ஆண்டில் தல நடித்த 'மங்காத்தா' தான் பெஸ்ட் என்று சொல்வேன்.
ReplyDelete