கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 December, 2011

MP-க்கள் அனைவரும் குண்டர், ரவுடிகளே என சாடல்..! தடம்மாறுகிறார் அன்னா ஹசாரே..


ஊழலுக்கு எதிரான தன்னுடைய அடுத்தகட்ட போராட்டத்தை மும்பையில் துவங்கிவிட்டார் அன்னா ஹசாரே அவர்கள். டில்லியில் தற்போது சீதோஸ்ன நிலை சரியில்லை. மேலும்  காவல் துறையின் கட்டுபாடுகளை காரணம் காட்டி மும்பையி்ல் தன்னுடைய உண்ணாவிரதத்தை இன்று காலை துவங்கியிருக்கிறார்.

மருத்துவர்கள் எவ்வளவு வலியுருத்தியும் அதையும் பொருட்படுத்தாமல் விஷகாய்ச்சலோடு உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள அன்னா தன்னுடைய கோவத்தை இன்று தன்னுடைய அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“விஷகாய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25- ஆண்டுகளாக நான் ஊழலுக்கு எதிராக போராடிவருகிறேன். நான் என்னுடைய மரணத்தைக்கண்டு அஞ்சவில்லை” என்று கூறியுள்ள அன்னா மேலும் கூறியதாகவது.

5 சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக இந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் பிரசாரம் செய்ய வேண்டும்.
 
நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை MP க்களும் குற்றவாளிகள்தான். தற்போதைய பாராளுமன்றத்திற்கு குண்டர்கள், மற்றும் ரவுடிகள்தான் அரசியல்வாதிகளாக வருகிறார்கள்.

நாம் தேர்ந்தெடுக்கும் MP-க்கள், MLA-க்கள் தேவை ஏற்படும் பேர்து அவர்களை வேண்டாம் என்று சொல்லி திரும்ப அழைத்துக்கொள்ளவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்..

பண திமிரால், அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது.
 
மேற்கண்ட அறிக்கைகள் அன்னா அவர்கள் இன்றைய அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுவரை அமைதிகாத்து வந்த அன்னா அவர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நம்முடைய பாராளுமன்றத்தையே குறைக்கூறி, இழிவான சொல்கொண்டு சாடியிருக்கிறார்கள். 

அன்னா ஹசாரேவின் நோக்கம் சரிதான், இவக்கு துவக்கத்தில் இருந்த ஆதரவு மற்றும் இவரது நோக்கம் தற்போது தடம் மாறுவதுபோன்று தெரிகிறது.

இன்று இவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று இவருரை கோரிக்கையை ஏற்றால் நாளை வேறு ஒருவர் ‌வேறெரு பிரச்சனையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துவிடுவார். இப்படியே போனால் நம்முடைய நாடாளுமன்றம் கையால் ஆகாததனத்துக்கு தள்ளப்படும்.

அதற்காக நான் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு துணைபோவதாக எண்ணவேண்டாம். எந்த ஒரு சட்டமும், ஒந்த ஒரு உத்தரவும் நியாயமாகவும், சரியானதாகவும், பாராளுமன்றத்தில் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

இந்த போராட்டங்களுக்கு பரதிய ஜனதா கட்சி ஆதரவு தருவது போலவும், ஆதரவு இல்லாதது போலவும் இரட்டைவேடம் போட்டுவருகிறது. இந்த ஜன்லோக்பால் வரைவு மசோதாவை இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளுமா? என்று தெரியவில்லை.

அன்னா அவர்கள் காங்கிரஸ்-க்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறேன் என்கிறார். அப்படி என்றால் இது யாருக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரியவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பி‌ஜேபி என இரண்டுகட்சிகள் மட்டுமே வலிமையாக இருக்கிறது.

அன்னா அவர்கள் தன்னுடைய கொள்கையினை வெற்றிபெறச்செய்ய தன்னுடைய போராட்டத்தையும், தன்னை நம்பி வந்தவர்களையும் வேறுபக்கம் திருப்பாமல் இருந்தால் சரி.

11 comments:

  1. அன்பின் சௌந்தர் - சிந்தனை நன்று - அன்னா அசாரே வரம்பு மீறுகிறார். திரும்ப அழைக்க உரிமை வேண்டும் - விளைவுகள் என்ன - சிந்திக்க வேண்டாமா .... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மக்கள் என்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறார்கள் தெரியுமா ? ம்ம்ம்ம் கட்டுரை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் இனியும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ...?

    ReplyDelete
  3. ////அன்னா அவர்கள் காங்கிரஸ்-க்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறேன் என்கிறார். அப்படி என்றால் இது யாருக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரியவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பி‌ஜேபி என இரண்டுகட்சிகள் மட்டுமே வலிமையாக இருக்கிறது.

    அன்னா அவர்கள் தன்னுடைய கொள்கையினை வெற்றிபெறச்செய்ய தன்னுடைய போராட்டத்தையும், தன்னை நம்பி வந்தவர்களையும் வேறுபக்கம் திருப்பாமல் இருந்தால் சரி./////

    சரியாகச் சொன்னீர்கள்.என்ன நடக்கப்போகுது என்று பார்ப்போம்

    ReplyDelete
  4. ரொம்ப குழப்புகிறார்.குழம்பியும் இருக்கிறார் போல.

    ReplyDelete
  5. அவரும் அரசியல்வாதியை பற்றி பேசி பேசி அவரும் அரசியல் வாதி போலவே மாறிட்டாரோ?

    ReplyDelete
  6. நமக்கு இப்போது தேவை bill எல்லாம் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்...
    என் பதிவிலும் எழுதி இருக்கிறேன்...படித்து பார்க்கவும்....
    http://artglaze.blogspot.com/2011/12/congress-quirks-team-anna.html

    ReplyDelete
  7. பார்ப்போம் இது எப்படி போகிறதென்று..

    ReplyDelete
  8. Wishing you a fabulous 2012
    with full of great achievements and experiences. A meaningful chapter waiting to be written HAPPY NEW YEAR!

    Greet with trees on this New Year

    ReplyDelete
  9. நாட்டுல என்ன நடக்குதுன்னே ஒன்னும் புரியல.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...