கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 December, 2011

இந்த டாக்டர் ரொம்ப முக்கியமானவர்....ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..

அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?“தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், ஜுரம்..”


“யாருக்கு உங்களுக்கா?”


“ஊஹும். இப்படி ஏதாவது வருகிற மாதிரி மருந்து தாங்க டாக்டர். என் மாப்பிள்ளைக்குத் தர வேண்டி இருக்கு”பிச்சைக்காரன் :- டாக்டரையா..! டாக்டரையா..! நம்ப வாடிக்கை வீட்டிலெயெல்லாம் தீபாவளி ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு வயித்தை என்னமோ செய்யுதே...!

டாக்டர் : - என்ன வேணும்

பிச்சைக்காரன் :- ஏதாச்சும் மாத்திரை தர்மம் பண்ணுங்க டாக்டர்...!ஒருவர்: வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.

டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?

ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.


டாக்டர் :- தம்பி.! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது. ஏதோ குணப்படுத்தியாச்சு. இந்தாங்க “பில்”


நோயாளி:- அப்ப இந்தப் பில்லை எங்க அப்பாவுக்கு அப்படி இல்லன்னா எங்க தாத்தாவுக்கு அனுப்புங்க. “டாக்டர்..! டாக்டர்.. சீக்கிரம் வாங்க..! என் கணவருக்கு உடம்பு நெருப்பாக் கொதிக்குது...?

“எத்தனை டிகிரி”

“140*F”

“அப்ப... நீங்க கூப்பிடவேண்டியது தீயணைப்பு என்ஜினை”நண்பர்:- என்ன டாக்டர்..! ஏன் டல்லா இருக்கீங்க?

டாக்டர் : ஒண்ணுமில்லே. வயதாயிடுத்து, என் ஒடம்ப “செக் அப்” பண்ணணும்..!

நண்பர் :- நீங்களே டாக்டர் தானே..!

டாக்டர் :- தெரியும்..! ஆனால் என்னுடைய பீஸ் அதிகம்...!

தங்கள் வருகைக்கு  மிக்க நன்றி..!

27 comments:

 1. எல்லாமே சூப்பர் நண்பா.. கடைசி செம....

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை. நல்லா சிரிச்சேன்.

  ReplyDelete
 3. நகைச்சுவையும் இணைத்த படங்களும் கலக்கல்!

  ReplyDelete
 4. நகைச்சுவை நன்றாக உள்ளது...

  ReplyDelete
 5. அசத்தல் நகைச்சிவை!
  அருமையான படங்கள்
  அதிலும் செய்தித் தாள் படிக்கும்
  குழந்தை!மிகமிக அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. வயிற்று வலியை உண்டாக்கும்
  அசத்தல் நகைச் சுவைத் துணுக்குகள்
  பீஸ் தொகையை உங்களிடம்தான் வாங்கவேண்டும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 7. இந்த டாக்குடர் நகைச்சுவைகள் எப்போதும் அசத்தலாக இருக்கும்..

  அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் அருமை..

  ReplyDelete
 8. ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..

  அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?//

  ஹா ஹா ஹா ஹா சூப்பருய்யா...!!!

  ReplyDelete
 9. “தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், ஜுரம்..”


  “யாருக்கு உங்களுக்கா?”


  “ஊஹும். இப்படி ஏதாவது வருகிற மாதிரி மருந்து தாங்க டாக்டர். என் மாப்பிள்ளைக்குத் தர வேண்டி இருக்கு”//

  மாமியார் வீடே கதின்னு கிடக்கும் நம்ம வாத்திக்கும் இந்த மருந்தை பரிந்துரை செய்கிறேன் ஹி ஹி...

  ReplyDelete
 10. கவிதை வீதியில் காமெடி பயணம்..

  ReplyDelete
 11. படமும் ஜோக்கும் அருமை

  ReplyDelete
 12. ரசித்துப் படித்தேன், சிரித்தேன் செளந்தர் சார்! அதிலும் அந்த கடைசி ஜோக்கும், அணிலின் படமும் மிகமிக ரசிக்க வைத்தன. நன்றி!

  ReplyDelete
 13. படங்களும் ஜோக்சும் நல்லா இருக்கு ஐயோ பாவம் டாக்டர்கள்.

  ReplyDelete
 14. என்ன தலைவரே...நீங்களும் நம்மள கலாய்க்கிறீங்க...:(

  ReplyDelete
 15. அத்தனையும் முத்தான நகைச்சுவை துணுக்குகள்.

  ReplyDelete
 16. //////
  மயிலன் said... [Reply to comment]

  என்ன தலைவரே...நீங்களும் நம்மள கலாய்க்கிறீங்க...:(

  ////////

  தவறாக நினைச்சிக்காதீங்க தலைவரே.. எல்லாம் ஒரு நகைச்சுவைக்காதான்...

  ReplyDelete
 17. எல்லாமே சூப்பர் நகைச்சுவை!அத்தனையும் முத்து!!!!

  ReplyDelete
 18. படித்தேன்,ரசித்தேன் ,சிரித்தேன் ,அருமையான தொகுப்பு சௌந்தர் அண்ணா..

  ReplyDelete
 19. நல்ல படங்கள்.படங்களே கவிதையாய் விரிந்தது.நன்று,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. அருமை!
  பகிர்வுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 21. நகைச்சுவை மற்றும் புகைப்படங்கள் அருமை நண்பரே ,ரசித்தேன்

  அனைத்திலும் வாக்களித்தேன்

  ReplyDelete
 22. படங்களில் உள்ள நகைச்சுவை கலக்கல்

  ReplyDelete
 23. யாராச்சும் டாக்டர் பின்னூட்டம் போட்டாங்களா சௌந்தர்.அணில் படம் சூப்பர் !

  ReplyDelete
 24. எல்லாமே சுப்பரு!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...