கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 December, 2011

தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியை பின்பற்றலாம்..!

Beautiful Girl

ன் நினைவு
எப்போதெல்லாம் பொழிகிறதோ!

அப்போதெல்லாம்
முளைத்த காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!

I Love You

னதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல 
நினைக்கையில்...

முடியாமல் போகிறது
முன்பே சுரந்துவிட்ட 
கண்ணீரால்..!

I love you

த்தியின்றி ரத்தமின்றி
ஒரு மரணம்..!

யுத்தமின்றி சப்தமின்றி
ஒரு வன்முறை..!

உன் மௌனத்தால்..!

Beautiful Rose

காதல் தொடங்கியபோது
அரை கவிஞன் ஆனேன்..!

காதல் முடிந்த போது
முழு கவி‌ஞனாகிவிட்டேன்..!

A rose for you

மிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார் சொன்னது...

அதோ ...!
அவளை உச்சரிக்க விடுங்கள்..!

Pink Rose

ந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல் போயிருக்கலாம்

ஆனால், 
காதலை யாரும்
சபித்தது கிடையாது..

எட்டவில்லையென்றாலும்
இது இனிக்கின்ற பழமே...!

Heart made of pink roses

சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...!

எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!

தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!

Yellow Flowers

வீசிய வலையில் சிக்கிய படங்களுடன்
என் காதல் கவிதைகள்...!

32 comments:

  1. நல்லதொரு வழிமுறை நண்பா..

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. தாங்கள் கவிதை வெளியிடும் அழகே தனி..

    ReplyDelete
  3. காதல் ரசம் சொட்டும் கவிதை இனிமை...

    ReplyDelete
  4. காதல் முடிந்த போது
    முழு கவி‌ஞனாகிவிட்டேன்..!//

    சத்தியமான உண்மை...!!!

    ReplyDelete
  5. காதலாகி காதலுக்காய் எழுதப்பட்ட காதல் கவிதைகளை ரசித்துப் படித்தேன். ஆனால் படிக்க வெகுநேரமானது. நீங்கள் வைத்திருந்த படங்கள் கண்ணை இழுத்து ரசிக்க வைத்து விட்டன. நல்ல ரசனையான படங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. தமிழுக்கு அங்கீகாரம்
    கிடைக்கவில்லையென்று
    யார் சொன்னது...

    அதோ ...!
    அவளை உச்சரிக்க விடுங்கள்..!//

    யோவ் நீர் கனிமொழியை சொல்கிறீரா..??? கவலை வேண்டாம், இனி மேடைகளில் வெக்கமில்லாமல் பேசுவதை கேட்க்கலாம்...!!!!

    ReplyDelete
  7. ////மனதோடு புதைந்த காதலை
    விழிவழியாய் சொல்ல
    நினைக்கையில்...

    முடியாமல் போகிறது
    முன்பே சுரந்துவிட்ட
    கண்ணீரால்..!////

    அருமை அருமை...காதல் மழை பொழிகின்றது...

    ReplyDelete
  8. எழுதத் தெரிந்தாலும்
    எழுத முடிவதில்லை..!

    உண்மைதான்..

    ReplyDelete
  9. குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எல்லாமே சூப்பர்.

    ReplyDelete
  10. சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
    பிடிக்காமல் போயிருக்கலாம்

    ஆனால்,
    காதலை யாரும்
    சபித்தது கிடையாது..
    >>
    ரசித்த வரிகள். காதல் தோல்வியுற்றாலும், வெற்றி பெற்றாலும் எல்லார் மனமு காதலை கொண்டாடும். வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  11. //சொல்லத் தெரிந்தாலும்
    சொல்ல முடிவதில்லை...!

    எழுதத் தெரிந்தாலும்
    எழுத முடிவதில்லை..!

    தொண்டையில் சிக்கிய முள்போல்
    உள்ளே செல்ல முடியாமலும்
    வெளியில் வரமுடியாமலும்
    தவிக்கிறது என் காதல்..!

    //


    அருமையான வரிகள்

    இன்று

    நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

    ReplyDelete
  12. அருமையான கவிதை நண்பா

    ReplyDelete
  13. முதல் கவிதையிலேயே முடிந்து போனேன் நான். கவிதைகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  14. நானும் கவிதை எழுதுறேன்னு கடைய திறந்து மூணு மாசமாகுது...ஏன் கூட்டத்தையே காணும்ன்னு இப்பதான் புரியுது....:)

    ReplyDelete
  15. http://cmayilan.blogspot.com/2011/10/blog-post_06.html
    இந்த விலாசத்துக்கு முடிஞ்சா வாங்க சௌந்தர்..:)

    ReplyDelete
  16. //தொண்டையில் சிக்கிய முள்போல்
    உள்ளே செல்ல முடியாமலும்
    வெளியில் வரமுடியாமலும்
    தவிக்கிறது என் காதல்..!//
    வாவ்! அருமை!

    ReplyDelete
  17. அருமையான படங்களுடன் அழகான கவிதை தொகுப்புகள் ரசித்தேன்

    ReplyDelete
  18. ’தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியைப் பின்பற்றலாம்’என்று சொல்லிவிட்டு, உறக்கத்தில் கனவு காணும் பெண்ணின் படத்தைப் போட்டிருக்கிறீர்கள்.

    “தமிழா, நீ ஒரு போதும் அங்கீகாரம் பெறப்போவதில்லை. அப்படிக் கனவு கண்டாவது திருப்தி பட்டுக் கொள்” என்றுதானே சொல்கிறீர்கள்?

    தமிழனுக்கு உறைக்குமா நண்பரே?

    ReplyDelete
  19. காதல் சொட்டும் கவிதைகள் அசத்தல்

    ReplyDelete
  20. //உன் நினைவு
    எப்போதெல்லாம் பொழிகிறதோ!
    அப்போதெல்லாம்
    முளைத்த காளான்கள் தான்
    இந்தக்கவிதைகள்..!//

    உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கவி அருமை.

    உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

    ReplyDelete
  21. ரோஜாக்கள் என்றும் ரோஜாக்கள்தான்.

    நினைவில் முளைத்த காளான்கள் சுவையாயிருந்தது.

    ReplyDelete
  22. நல்லா இருக்கு மாப்ள....

    ReplyDelete
  23. //தொண்டையில் சிக்கிய முள்போல்
    உள்ளே செல்ல முடியாமலும்
    வெளியில் வரமுடியாமலும்
    தவிக்கிறது என் காதல்..!//

    மாதிரிக்கு ஒன்றே-இத்
    மற்றவையும் நன்றே!

    அருமை!அருமை!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. அசத்தனால காதல் கவிதைகள்..

    பாராட்டுகள்..

    ReplyDelete
  25. அருமையான படங்கள்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகான கவிதை வரிகள். உள்ளம் கொள்ளை போகுதே....
    நம்ம தளத்தில்:

    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  26. ஒவ்வொரு வரிகளும் அருமையானதாய் உள்ளது . சிறப்பான காதல் கவிதை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...