கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 December, 2011

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழகம், கைபொம்மையாக மன்மோகன் அரசு...

பழமையும், தொன்மையும் வய்ந்த இந்திய வரலாறு, சில அன்னிய மற்றும் அரசியல் சக்திகளால் தன்னுடைய புனிதத்தை இழந்து வருகிறது. 
தற்போதைய ஆட்சியை காத்துக்கொள்ளவும், எதிர்கால ஓட்டு பிச்சைக்கும் மாத்திரமே இன்றய அரசியல் அயோக்கியர்களின் செய்கைகள் இருக்கிறது. நாடு எப்படியாவது போகட்டு நாம் நலமுடன் இருந்தால் பேர்தும் என்ற சூழ்நிலை முழுமையாக நாடு முழுவதும் பரவிடுமோ என்ற பயம் துளிர்விடுகிறது.

சட்டதிட்டங்கள், ஒப்பந்தங்கள், தீர்மானங்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகள் என எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தென்னிந்தியாவில் தமிழகம் அதன் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.


முல்லைபெரியாறு அணையின் உறுதித்தன்னையினை பல்வேறு தரப்பிலும் ஆய்வு செய்து அணைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிக்கை செய்த பிறகும், அந்த தகவல்களை கேரளா காதில்போட்டுக்கொள்ளாமல் தவறான கருத்துக்குள் சொல்லி மக்களை தூண்டி விடுவது மிகவும் துரேககரமான செயல்.

நமது இந்திய ஜனநாயகத்திற்கும், அ‌தன் இறையாண்மைக்கும், இதுவரை வளர்ந்து வந்த ஒற்றுமைக்கும் உலை வைக்கும் விதமாக, "முல்லை பெரியாறு அணை' பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிட்டபிறகும், இந்த விஷயத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடும் கேரளாவை ஆளும் கட்சி என்ற கண்னோட்டத்திலும் "யார் வீட்டு எழவோ... எனக்கு என்ன வந்தது...' என்ற மனப்போக்கில், மத்திய அரசு மவுனம் சாதிப்பது சரியானதல்ல. 

கடந்த சிலகாலமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்னை, ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா பிரச்னை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயலாத்தன்மை, நேரு குடும்பத்தை திருப்திப்படுத்தும் வேலை என பல்வேறு பணிச்சுமையால், மன்மோகன் சிங், புன்னகைக்காக கூட உதட்டை பிரிக்க மறுப்பது வேதனையாக உள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் அன்னிய நாட்டு பயங்கரவாதிகளால் நாடு அழிக்கப்படுமோ, உள்நாட்டில் வளர்ந்துவரும் நக்சலைட்களால் நாடு நசுக்கப்படுமோ என்ற அச்சமெல்லாம் மலையேறி, "யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்ட கதையாக' கேரள - தமிழக சகோதரர்கள், ஆண்டுகால உறவு‌களை மறந்து விட்டு அரசியல்வாதிகளின் சூழ்ச்சி புரியாமல் பலியாகி வருவது வேதனையாக இருக்கிறது. 

இவ்வளவு பிரச்சனைகள் நடந்துமுடிந்த பிறகும்கூட முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன் என்று கொஞ்சம் கூட புரியவில்லை. நம் நாட்டுக்கே உரிதான அறவழிப் போராட்டங்கள் அழிந்துபோய், சொந்த மண்ணிலே அராஜகப் போராட்டங்கள் தலை தூக்கியிருப்பது, எப்போதும் இந்தியாவை வீழ்த்த நினைக்கும் சில அன்னிய சக்திகளுக்கு அல்வா சாப்பிட்டதை போன்ற நிலையாக உள்ளது. 

மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகளும் இதை புரிந்துகொண்டு, அளவற்ற தியாகிகளின் உடல், பொருள், உயிர் இழப்புகளால் பெற்றெடுத்த நம் சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளது. 

ஒரு குடும்பத்தில் பலபேர் சம்பாதிப்பது, அந்த பணத்தை செலவு செய்வது, அதில் கொஞ்சம் சேமிப்பது உள்ளிட்ட பணிகள் தாய், தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு பொதுவானதாக இருந்தாலும், சாப்பிட வரும்போது, பரிமாறும் பொறுப்பு தாய்க்கு மட்டுமே உண்டு. அந்த தாய்மை உள்ளத்தோடு, மத்திய அரசானது, ஆறுகளையும், அணைக்கட்டுகளையும், தேசிய சொத்தாக பாதுகாத்து, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மாநில தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அப்போது தான் இந்திய சகோதரர்கள், தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் நிலை வராது. 

தன்னுடைய மன வேதனைகளை மறக்க, மாலையணிந்து மணிகண்டனை தரிசிக்க சபரிமலைக்கு சென்றால், வழியில் மரணம் நின்று கொண்டு விரட்டுவது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. கேரளாவின் அய்யப்பா, ஆந்திராவின் வெங்கடாஜலபதியே, நீங்களாவது பாழாய்ப்போன அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லித் தரக்கூடாதா? 

இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள். 

25 comments:

  1. பயனுள்ள செயல்
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு!
    இன்று, நானும் கவிதை
    ஒன்று எழுதியுள்ளேன்!
    காண்க!

    த ம ஓ 2

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. ஆஹா அரசியல்வியாதிகளை போட்டு தள்ளிட்டீங்க மக்கா நன்றி பகிர்வுக்கு...!!!

    ReplyDelete
  5. நீங்க லிங்க் கொடுத்த தளத்திற்கு போய் என் ஆதரவையும் பதிஞ்சுடுறேன் சகோ1

    ReplyDelete
  6. அவசியம் சொல்ல வேண்டிய கருத்து. நன்றி பகிர்விற்கு!

    ReplyDelete
  7. நல்ல விசயம் அந்த இணைப்பில் செல்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  8. நான் முன்பே இணைந்து விட்டேன் நண்பரே! (சசி தளத்தில்)

    ReplyDelete
  9. //கேரள - தமிழக சகோதரர்கள், ஆண்டுகால உறவு‌களை மறந்து விட்டு அரசியல்வாதிகளின் சூழ்ச்சி புரியாமல் பலியாகி வருவது வேதனையாக இருக்கிறது. //

    கசப்பான உண்மை..
    :(:(

    ReplyDelete
  10. ..குறும்(பு)படம்...என் தளத்தில் உங்கள் பார்வைக்கு..

    ReplyDelete
  11. இந்த பிரச்சனைக்கான முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக நமக்கு தண்ணீர் வந்தே தீரும். நம்புவோம்.

    ReplyDelete
  12. கேரளாவின் அய்யப்பா, ஆந்திராவின் வெங்கடாஜலபதியே, நீங்களாவது பாழாய்ப்போன அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லித் தரக்கூடாதா?

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு சௌந்தர்..

    இதில் யாரும் முடிவு எடுத்து விட முடியாது என்பதே நிதர்சனம்..

    அணை உடையாது என்று நாம் உறுதியாய் கூறவும் முடியாது அவர்கள் அவர்கள் இடத்தில் அணை கட்டுவதை தடுக்கவும் நமக்கு உரிமை இல்லையே !!? நதி நீர் ஆணையம் அமைப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது..

    ReplyDelete
  14. சிந்தனை பதிவு நண்பரே

    ReplyDelete
  15. ஓட்டு போட்டு விட்டேன் தோழரே...

    ReplyDelete
  16. முல்லை பெரியாறு விஷயத்தில் நம் உரிமையை நிலைநாட்டுவோம்..

    ReplyDelete
  17. உணர்வுள்ள மிகவும் சிறப்பான ஆக்கத்தை பதிவேற்றியுள்ளீர்கள் உண்மையில் தமிழனாக நாம் எல்லோரும் இணைய வேண்டிய சூழல் இது மிகவும் பாராட்டுகள் ஒன்றிணைவோம் ...

    ReplyDelete
  18. நல்ல சிந்தனைப்பதிவு பலரை சென்று சேரவேண்டும்

    ReplyDelete
  19. வணக்கம் கவிஞரே ...
    நல்ல பகிர்வுக்கு மற்றும் தெளிவான விளக்கத்திற்கு நன்றி ..
    இந்த மண்ணு மோகன் இருப்பதற்கு இல்லாமல் கூட இருக்கலாம் பிரதமராக ...
    இந்த பொழப்பு அரசியலுக்கு இவர்கள் வேறு ஏதாவது பண்ணி தொலைக்கலாம் ...

    ReplyDelete
  20. தமிழன் என்றோர் இனமுண்டு அவனுக்கு .........என்றோர் பெயருண்டு என அல்லாரும் நினைத்திருக்கிறார்கள்!

    ReplyDelete
  21. உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. என்னுடைய தளமும் இப்படித் தான் ஆனது. அதற்குக் காரணம் (Ulavu Vote Button) தற்சமயம் (மூன்று நாளாக) வேலை செய்யவில்லை. கவனிக்கவும்.
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...