கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 December, 2011

என் காதலிக்கு கல்யாணம்....


காந்தக் கண்களால்
என் கனவுகளை கலைத்து
சிரமம் இல்லாமல்
சிறகடித்துச் சென்றவ‌ளே...

மௌனம் கொண்டு யுத்தம் செய்தவள் - நீ
காதல் கொண்டு காயம் ‌செய்தவள்...

ன் முள் கூட்டில் நான் மெத்தையா‌னேன்
வசந்தம் ‌தேடி நீ எந்த வா‌னேறினாயோ...

மாற்றிய மாலையில்
என் மனதை நசுங்கவைத்து
அம்மி மிதித்தவளே...!

நீ கனிந்த சிரிப்போடு போகிறாய்
நான் கண்களால் சிரப்பூஞ்சி ஆகி்றேன்...

னமெல்லாம் சகதியை வைத்துக்கொண்டு
குளத்து தாமரைப்‌போல் சிரித்தவ‌ளே..!

ரம் கொத்திக்கும் உனக்கும்
என்னடி வித்தியாசம்
அது மரம் கொத்திவிட்டு போகிறது...
நீ மனம் கொத்திவிட்டு போகிறாய்...

பிஞ்சி மொழிபேசி
என் பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்தவளே...

ன்று மட்டும் ஏன் 
பிரிவு என்னும் புழுதி கிளப்பி
என் நூற்றாண்டுகளை மூழ்கடிக்கிறாய்...

டும் நதி
மலர் ‌செறியும் மரங்க‌ளோடு
காதல் புரிந்துவிட்டு
கடலுக்குள் சங்கமிப்பது ‌போல்
எந்த கடலுக்குள் கரைந்துப்போனா‌யோ...!

தென்றல் வந்து
உன்னை தட்டி எழுப்பி
என் நினைவுகளை
ஞாபகம் படுத்தும் போதெல்லாம்

நீ... நிச்சயம் உணர்வாய்
நதி வழியோ
பூக்கள் சுமந்து வரும்
என் கண்கள் சிந்திய உப்பின் படிமங்களை...

(Re-Post)

20 comments:

 1. வலிகள் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது கவிதை..

  ReplyDelete
 2. இது ஒரு காப்பி செய்யப்பட்ட கவிதை


  http://kavinyanin-kaathal.blogspot.com/2011_07_03_archive.html

  இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 3. //மரம் கொத்திக்கும் உனக்கும்
  என்னடி வித்தியாசம்
  அது மரம் கொத்திவிட்டு போகிறது...
  நீ மனம் கொத்திவிட்டு போகிறாய்...
  //

  அதானே.....

  ReplyDelete
 4. /////
  யாருக்கும் பயப்படாதவன்... said... [Reply to comment]

  இது ஒரு காப்பி செய்யப்பட்ட கவிதை
  http://kavinyanin-kaathal.blogspot.com/2011_07_03_archive.html

  இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

  ///////////

  யோவ்...

  நான் கவிதை காப்பியடிக்கிறேனா...
  நல்லா செக் பண்ணி பாருங்க மிஸ்டர்

  அவன்தான் என்னுடைய கவிதையை காப்பிசெய்து போட்டிருக்கான்...

  இது என்னுடைய மீள்பதிவு...

  கவிதைவீதி பிளாக்குல இதுதான்யா முதல் பதிவு...
  நவம்பர் 12 2010-ல் பதிவிடப்பட்டது.

  அதன் லிங்க்...

  http://kavithaiveedhi.blogspot.com/2010/11/blog-post_9828.html

  அவன் போட்டிருப்பது ஜூலை 6 2011

  எதுக்குபா இந்த தேவையில்லாத குற்றசாட்டு..

  அந்த பிளாக்குல நல்லாபாருங்க என்னுடைய இன்னும் இரண்டு மூன்று கவிதைகள் கூட காபி செய்திருக்கிறார்.

  ReplyDelete
 5. நான் கண்களால் சிரபுஞ்சி ஆகி்றேன்..

  அருமை தோழர்..


  அன்போடு அழைக்கிறேன்..

  நாட்கள் போதவில்லை

  ReplyDelete
 6. ஆழ்வார் பேட்டை ஆளுடா,அறிவுரையை கேளுடா. தாவணி போனால் சல்வார் உள்ளதடா பாட்டை ரிங்க் டோனா வச்சுக்கோங்க சகோ

  ReplyDelete
 7. குட்
  அழகாய் ஒரு கண்ணீர் கவிதை

  ReplyDelete
 8. ஆகா பிரபஞ்சத்தின் மொழி பிஞ்சி மொழியோ என யோசிக்கிறேன்? நீங்களே சொல்லுங்கள் கவியே?  அழகான கவிதை.வாழ்த்துகள்

  ReplyDelete
 9. ஏமாற்றம் தரும் வேதனையும்..
  அதனால் ஏற்படும் வலிகளும்..
  காதலால் களித்திருக்கையில்
  இருந்த இன்பத்தையும்
  அருமையா சொல்லியிருகீங்க நண்பரே..

  ReplyDelete
 10. //யாருக்கும் பயப்படாதவன்... said... [Reply to comment]
  இது ஒரு காப்பி செய்யப்பட்ட கவிதை

  http://kavinyanin-kaathal.blogspot.com/2011_07_03_archive.html
  இங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.//

  சுட்டிக்காட்டுவது தப்பு இல்ல ஆனால் சொல்வதற்கு முன் சற்று தீர விசாரித்து சுட்டி காட்டலாம்...

  ReplyDelete
 11. விடு மாப்ள ஸ்வேதா இல்லைனா திவ்யா

  ReplyDelete
 12. காந்தக் கண்களால்
  என் கனவுகளை கலைத்து
  சிரமம் இல்லாமல்
  சிறகடித்துச் சென்றவ‌ளே...//

  சரி சரி விடுய்யா விடுய்யா, காவ்யா மாதவன், சோனியா அகர்வால் எல்லாம் சும்மாதான் இருக்காங்க...!!!

  ReplyDelete
 13. அழகான கவிதை பாராட்டுகள்

  ReplyDelete
 14. நல்லதொரு கவிதை, மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 15. காதற்பிரிவைப் பேசினாலும் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு சௌந்தர். கடைசி பத்தியில் நதி வழியே என்றிருக்கவேண்டுமோ?

  ReplyDelete
 16. காதல் என்றால் அத்தனையும் கனவு.கண் மூடியே வாழ்ந்திடும் வாழ்வு.....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...