கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 December, 2011

கொள்ளைக்காரனாக மாறாமல் தடுத்தார்கள்.. (இதற்கும் பிலசபி பிரபாகரனுக்கும் எந்தசம்மந்தமும் இல்லை)


ராஜஸ்தானின் ஒரு பகுதியில் ஒருசமயம் விநோபாஜி கிராம மக்களிடம் கல்வி நிதி வசூலிக்கச் சென்றார்.

அப்பொழுது கிராம மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு ராத்திரிதான் இலட்சக்கணக்கில் கொள்ளையர்களுக்கு பணத்தை பறிகொடுத்திருக்கிறோம். ‌அதற்குள் விநோபாஜி வந்து நிதி கேட்கிறாரே..! வந்ததே வந்துவிட்டார். எல்லோருமாகச் சேர்ந்து ஓர் ஆயிரமோ அல்லது இரண்டு ஆயிரமோ கொடுத்து அனுப்பி விடுவோம் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்து அதை விநோபாஜியிடமும் சொன்னார்கள்.

போனால் போகிறதென்று ஒரு சிறு தொகையைக் கொடுக்க முன் வந்துள்ளீர்கள். இதிலிருந்து எனக்குப் புரிவது என்னவென்றால் நான் அன்பளிப்பாக கேட்டதினால்தான் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் இரவு நேரங்களில் வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினால் இலட்சம் இலட்சமாக வாரிக் கொடுப்பீர்கள் அப்படித்தானே..? என்று கிராம மக்களிடம் கேள்வி எழுப்பினார். விநோபாஜி.

அதைகேட்ட மக்கள் வெட்கத்தால் தலைகுனிந்து ஒரு கணிசமான தொகையை வசூலித்து விநோபாஜியிடம் கொடுத்தார்கள். நிதியை பெற்றுக்கொண்ட விநோபாஜி, நள்ளவேளை, என்னை ஒரு கொள்ளைக்காரனாக மாறவிடாமல் நிதியைக் கொடுத்துவிட்டீர்கள். என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
 
(நான் மறுபடியும் சொல்றேன். ‌ இந்த பதிவுக்கு பிலசபி பிரபாகரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை)

10 comments:

 1. நல்லாயிருக்கு தோழர்..

  ReplyDelete
 2. உண்மையிலேயே இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லையே தல...

  ReplyDelete
 3. //////
  Philosophy Prabhakaran said... [Reply to comment]

  உண்மையிலேயே இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லையே தல...

  //////////

  இததான்யா நானும் சொல்றேன்....

  இப்படியெல்லாம் போட்டாதான் இந்தபக்கம் வருவீங்க போல...

  தேங்ஸ் மச்சி...

  ReplyDelete
 4. எப்பிடி எல்லாம் கதை சொல்லி வர வைக்கிறாங்கப்பா...

  ReplyDelete
 5. கதை நல்லாத்தான் இருக்கு ஆனா என்ன சொல்ல வாறீங்க என்றுதான் புரியலை?

  ReplyDelete
 6. ஒண்ணுமே புரியலை தம்பி ஹி ஹி...

  ReplyDelete
 7. ஆமா, இந்த பதிவுக்கும் பிலாசபி பிரபாகரனுக்கும் சம்பந்தமில்லை..

  ReplyDelete
 8. தூண்டில் போட்டு இழுக்கிறிங்க...

  ReplyDelete
 9. எப்படில்லாம் யோசிக்கிறாங்க தலைப்புல

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...