கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 December, 2011

ராஜபாட்டை சினிமா விமர்சனம் // Rajapattai Cinima vimarsanam


தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நிலஅபகரிப்பு விவகாரத்தை கதையின் கருவாக எடுத்துக்கொண்டு தன்னுடைய பாணியில் இருந்து விலகி மசாலா கலந்து சுசீந்திரன் தந்திருக்கும் படம் தான் ராஜபாட்டை.

சென்னையில் நிலங்களை வலைத்துப்போடுகிறது. அரசியல்வாதி அக்கா என்று அழைக்கப்படும் ரங்கநாயகி  (சில இடங்களில் அம்மா என்றே நினைக்கதோன்றுகிறது. அட நம்ம ஜெ. தாங்க) என்ற அரசியல்வாதியின் ரவுடிக்கூட்டம்.


சென்னையில் துணைநகரம் அமைக்கப்படும் என்ற அறிக்கையால் அதைச்சுற்றியுள்ள நிலத்தை வன்முறையோடு அபகரிக்க முனைகிறார்கள். அதில் ஒரு தாதாவின் நிலமும் அடங்குகிறது. அவருக்கு MLA பதவி தருவதாக ஆசைக்காட்டி அவருடைய மொத்த சொத்தையும் கேட்கிறார்கள். அவருடைய தந்தையான கே.விஸ்வதான் தன்னுடைய மனைவி பெயரில் இருக்கும் ஒரு அநாதைகள் ஆசிரமத்தை தவிர்த்து அத்தனையும் தருவதாக கூறுகிறார். ஆனால் அனைத்தும் கொடுங்கள் இல்லையோல் கொலை என்று மிரட்ட அவர்வீட்டை விட்டுவெளியேறுகிறார். அவரை கொலைசெய்ய ஆட்கள் வரும்போது விக்ரம் அவர்களை துவம்சம் செய்து அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.

விக்ரம் பாதுகாப்பில் இருக்கும் விஸ்வநாத்தை கடத்தி இந்த நிலத்தை அபகரிக்க பல்வேறு சூழ்ச்சிகள் போராட்டங்கள் நடக்கிறது. அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அந்த ஆசிரம நிலத்தை ஹீரோ காப்பாற்றினாரா  இல்லையா என்பது தான் கதை.

விக்ரமை அடிதடி ஹீரோ என்ற மிக பழைய பாணிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அனல் முருகன் என்ற பெயரில் சினிமாவில் வில்லன்களுக்கு சைடில்நிற்கும் ரவுடியாக நடிக்கிறார். ஜிம்பாய்ஸ் என்ற பெயரில் நாலைந்து ரவுடிகளை வைத்துக்கொண்டு வலம்வருகிறார். இவருடைய ஒரே ஆசை எப்படியாவது சினிமாவில் பெரிய வில்லனாக வரவேண்டும் என்பதே.

இதற்கிடையில் பெரியவர் விஸ்வநாத்தை கொள்ளவரும் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய மேன்சனில் தங்கவைக்கிறார். இடைவேளை வரை சினிமாவில் துணைநடிகராகவும், நாயகி தீக்சாசேத்யை தூரத்தில் இருந்து காதலிக்கும் ஜீம்பாயாகவும் வருகிறார் விக்ரம்.

விக்ரமை தன்னுடைய காதலை நாயகியிடம் சொல்ல விஸ்வநாத் உதவும்காட்சிகள் நகைச்சுவையை வரவைக்கிறது.

இடைவேளை முடிந்தபிறகு படம்முழுக்க அடிதடி சண்டை என படம் ஓட்டஎடுக்கிறது. நிலத்தை அபகரித்த கும்பலிடம்மிருந்து மீட்க அரசியல்வாதி  அக்காவுக்கு மறைமுகமாக உதவும் வாப்பா என்கிற முஸ்லீம் தாதாவை கடத்தி அவரிடமிருந்து உண்மையை வரவைத்து கோர்ட்டு மூலமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை உரியவரிடம் ஒப்படைப்பதுபோல் படம்முடிகிறது.

விக்ரமுக்கு நடிப்புக்கான அதிகவேலை இதில் இல்லை. சண்டைக்காட்சிகளில் மட்டும் நல்ல தன்னுடைய முழு முறுக்கேரிய உடலை காட்டி அமர்களப்படுத்துகிறார்.


சினிமாவுக்காக எடுக்கப்படும் ஒரு பாடல் காட்சியில் எல்லா ஹாலிவுட் வில்லன்கள்போல் வேடமனிந்து ஆட்டம் போடுகிறார் விக்ரம். இறுதி காட்சிகளில் வாப்பா என்ற தாதாவிடமிருந்து உண்மையை வரவைக்க பல்வேறு அதிகாரிகள் போல் வேடமிட்டு அமர்களப்படுத்துகிறார். (இதுமாதிரி 18 கெட்டப்பாம்.... இத்தனை கெட்டப்பில் ஒன்றுகூட படத்திற்கு உதவவில்லை)

நாயகி  தீக்சாசேத் அங்கிட்டு இங்கிட்டு என சில இடங்களில் நடந்துவிட்டு இரண்டு பாட்டுக்கு ஆட்டம் போட்டு விட்டுதன்வேலையை முடித்துவிட்டார்.


மேன்ஷனில் தங்கியிருக்கும் அசிஸ்டென்ட் இயக்குராக தம்பி ராமையா தன்னுடைய பாணியில் சிரிக்க வைத்திருக்கிறார். அவரும் விஸ்வநாத் இணையும் காட்சிகள் நல்ல ரசணை.

வில்லன்கள் கூ்ட்டத்தில் இரண்டு ரவுடிகள் விக்ரமுக்கு பயந்து நடிப்பதுபோன்ற ‌காட்சிகள் நல்ல முயற்சி. இவர்கள் படம்முழுக்க சிரிக்கவைக்கிறார்கள் (அனேகமாக அந்த காட்சியில் நடித்தது அனல் அரசு என்று நினைக்கிறேன்)

யுவன்சங்கர்ராஜாவின் இசை இந்த படத்திற்கு எடுபடவில்லை. பாடல்கள் ஏதும் மனதில்நிற்கவில்லை. படம்முடிந்தது என்று எழுந்தால் ஸ்ரேயா ரீமாசென்னுடன் விக்ரம்பாட்டு வருகிறது. யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.

மற்றபடி படத்தைப்பற்றி சொல்வதற்க்கு ஏதும் இல்லை.

இந்தபடத்தில் பாராட்டுவது என்றால் கண்டிப்பாக சண்டைகாட்சிகள் அமைத்துகொடுத்த அனல் அரசை பாராட்டியே ஆகவேண்டும். அத்தனை சண்டைகாட்சிகளும் நல்லமுறையில் உறுவாக்கியிருக்கிறார். சிலசண்டைகாட்சிகளில் நகைச்சுவை உணர்வோடு கொடுத்திருப்பது பார்ப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.


 "ராஜபாட்டை"  படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் என்ற கண்ணோட்டத்தோடே இயக்கி இருக்கிறாரார் சுசீந்திரன். 

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரனிடம் இருந்து இப்படத்தை கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை.


நிறைய காட்சிகளில் ஏன் இப்படி, எதற்காக இப்படி செய்தார்கள், இப்படியா நடக்கும் என்று கேள்விகள் ஏழுகிறது. கண்டிப்பாக இயக்குனரிடம் நிறைய கேள்விகள் கேட்பார் சிபி செந்தில்குமார்.

தெய்வதிருமகள் படத்துக்கு அடுத்து விக்ரம் படத்திற்கு கிடத்த நல்ல எதிர்பார்ப்பை வீணடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 80களில் வந்த ஒரு பழைய ரஜினி கமல் படம்பார்த்த மாதிரியே இருக்கிறது.

ராஜபாட்டை-கம்பீரம் இல்லை.

32 comments:

  1. avvvvvvvvvvvv அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சேம் பிளட்

    ReplyDelete
  2. அப்ப படம் மொக்கையா சௌந்தர்? சுசீந்தரன் கூட இப்ப சொதப்ப ஆரம்பிச்சிட்டாரா?

    ReplyDelete
  3. ஸ்ரேயா, ரீமாசென் காட்சிகள் குறித்து எந்தப் பதிவர் விமர்சனத்திலும் செய்திகள் இல்லை,

    ஏன் காட்சிகள் படத்தில் வெட்டா

    ReplyDelete
  4. நிஜமாகவே படம் நல்லா இல்லையா?
    சுசீந்திரனுக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  5. //////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    avvvvvvvvvvvv அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சேம் பிளட்

    /////////

    வாய்யா வா...

    ReplyDelete
  6. //////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    அப்ப படம் மொக்கையா சௌந்தர்? சுசீந்தரன் கூட இப்ப சொதப்ப ஆரம்பிச்சிட்டாரா?

    ////////


    நல்ல கதைகளை கையாண்ட சுசீந்திரன் ஏன் தீடிரென மசாலாவிற்று வந்தார் என்றுதான் தெரியவில்லை.

    அழகர்சாமியின் குதிரை படத்தை 2ம் பகுதியை படமாக்கியிருக்கலாம்

    ReplyDelete
  7. ////
    ராம்ஜி_யாஹூ said... [Reply to comment]

    ஸ்ரேயா, ரீமாசென் காட்சிகள் குறித்து எந்தப் பதிவர் விமர்சனத்திலும் செய்திகள் இல்லை,

    ஏன் காட்சிகள் படத்தில் வெட்டா

    ////////

    படத்தில் வணக்கம் போட்ட பிறகு இந்தபாடல் வருகிறது...

    கதைப்படி வீக்ரம் சினிமாவில் பெரியவில்லன் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்.

    இறுதியில் விஸ்நாத் அவர்கள் இவரை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பதுபோல் காட்சி அதில் இந்த ஜோடியின் பாடல் காட்சி...

    ReplyDelete
  8. ////////
    Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    நிஜமாகவே படம் நல்லா இல்லையா?
    சுசீந்திரனுக்கு என்ன ஆச்சு?
    //////

    நீங்க இன்னிக்கு கிரேட் எஸ்கேப்...

    ReplyDelete
  9. //ராஜபாட்டை-கம்பீரம் இல்லை.
    //
    என் பெயரை கேடுத்துடனுங்க ...

    ReplyDelete
  10. நல்ல அலசல்! விக்ரம் படம் என்றால் விரும்பிப் பார்ப்பேன். உங்களின் விமர்சனமே போதும் என்று நினைக்கிறேன்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  11. படம் நல்லா இல்லைன்னுதான் சொல்லுறாங்க.. விமர்சனம் அசத்தலா இருக்கு பாஸ்

    ReplyDelete
  12. தப்பிச்சட்டேன் உங்களால...

    ReplyDelete
  13. /////
    "என் ராஜபாட்டை"- ராஜா said... [Reply to comment]

    //ராஜபாட்டை-கம்பீரம் இல்லை.
    //
    என் பெயரை கேடுத்துடனுங்க ...

    /////////

    உடனே பேரை மாத்திக்கப்பா...

    ReplyDelete
  14. //////
    திண்டுக்கல் தனபாலன் said...

    நல்ல அலசல்! விக்ரம் படம் என்றால் விரும்பிப் பார்ப்பேன். உங்களின் விமர்சனமே போதும் என்று நினைக்கிறேன்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    /////////

    தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  15. நண்பர் திண்டுக்கல் தனபாலனின் 'உங்களின் மந்திரச்சொல் என்ன ' பதிவைப் படித்துப் பாருங்கள்..!!! வித்தியாசமான நடையில் விரைவாக மனதில் பதியும் படைத்துள்ளார்.. !!!

    ReplyDelete
  16. நான் ஒரு மசாலா படம் எடுக்கப் போறேன்னு (அப்ப முன்னாடி எடுத்ததெல்லாம்?) சுசீந்திரன் சொல்லும்போதே நினைச்சேன்...

    புதுசா வலை ஒண்ணு;
    சோ'வென்ற மழை

    தெரிதா-சரிதா

    ReplyDelete
  17. ராஜபாட்டை-கம்பீரம் இல்லை.///

    சன் டீவி. டாப் 10 போல நறுக்குன்னு சொல்லிட்டீங்க...ஆமா, நீங்க என்ன இப்ப அடிக்கடி சினிமா பார்ப்பதுபோல் தெரிகிறது? சிபிக்கு போட்டியா?

    ReplyDelete
  18. /////
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    ராஜபாட்டை-கம்பீரம் இல்லை.///

    சன் டீவி. டாப் 10 போல நறுக்குன்னு சொல்லிட்டீங்க...ஆமா, நீங்க என்ன இப்ப அடிக்கடி சினிமா பார்ப்பதுபோல் தெரிகிறது? சிபிக்கு போட்டியா?
    /////////



    சிபி ரேஞ்சுக்கு நம்மலால முடியுமாங்க...


    ஏதோ இதுவும் நமக்கு தெரியும்ன்னு காட்டிக்கத்தான்...

    அப்படியிருந்தும் பல்பு வாங்குறேன்...

    ReplyDelete
  19. படம் பார்த்தாச்சா ... இதுக்கு மேலையும் அந்த படத்தை பார்க்கனுமா ...என்று யோசிக்கிறேன் ..
    சிறப்பான பார்வை... நன்றிங்க கவிஞரே ...

    ReplyDelete
  20. சிபி கூட செராதேன்னு சொன்னேன் கேட்டியா தம்பி, நாதாரி கூட சேர்ந்த நல்லவனும்...........!

    ReplyDelete
  21. விமர்சனம் சூப்படேய் தம்பி...!!!

    ReplyDelete
  22. விமர்சனத்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  23. 'என் ராஜபாட்டை' ராஜா நடிச்சி இருக்காரா?

    ReplyDelete
  24. பலமுக மன்னன் விக்ரம் நடிச்சிருக்கார்
    பார்க்கலாம் என்று நினைச்சிருந்தேன்...
    ம்ம்ம்
    சரி சரி...

    ReplyDelete
  25. விமரிசனப்பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. இப்போதான் சிபி சார் விமர்சனம் படிச்சேன்.. அங்கிருந்துதான் வரேன்.. உங்க விமர்சனமும் நல்லா இருக்கு.. எப்படியும் நான் படம் பார்க்க போறதில்ல...

    ReplyDelete
  27. அப்ப பார்க்கவே தேவையில்லையா?

    ReplyDelete
  28. எதேதோ சொல்றாங்க... படம் பார்த்த பின்னர் தான் நான் முடிவெடுப்பேன்
    மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )

    ReplyDelete
  29. ராஜபாட்டை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  30. படவிமர்ச்சனமே போதும்
    படம் பார்க்க வேண்டாமே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ஹ்ம்,,,அவ்ளவ் மோசமா..?! :-))

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...