வெயில் தனிந்த ஒரு
கோடைக்கால இரவு...!
கோடைக்கால இரவு...!
உயிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம்
மூச்சை நிறுத்திக் கொண்டது..
வீடெல்லாம் இருட்டு...
வீதியெல்லாம் கருமை...
நிஜம் தந்த இருட்டை யாவரும்
விளக்கு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர்...
அதோ... இருட்டில் தான்
முழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...
விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..
பசும்மரங்கள் பூக்களையும்சேர்த்து
வண்ணங்களை இழந்து காட்சி அளிக்கிறது..
தென்னையும் பனையும்
விண்வெளியில் வரைந்த ஓவியங்களாய்..
ஜாதிகளையும்.. மதங்களையும்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..
ஆதாம் ஏவாளுக்கு பிறகு
அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...
எலலோரும் விளக்கைத் தேடுகிறார்கள்
வெளிச்சம் பெற..
நான் இருட்டைத் தேடுகிறேன்
மோட்சம் பெற...
எண்ணெய் குடித்து
உயிர் துடிக்கிறது விளக்கு...
தற்போது
போலிகளாயின நிஜங்கள்...
(மீள் பதிவு)
வடை
ReplyDeleteமாப்ள என்னே ஒரு உவமானம்.....அடடடா கலக்கறே கவிஞ்சா!
ReplyDeleteரெம்ப கலக்கலான கவிதை
ReplyDeleteகோர்த்த வரிகளும்
சொல்லாக்கமும் அற்புதம்
கவிஞரே கவிதை ம்ம்ம்ம்.....
ஜாதிகளையும்.. மதங்களையும்..
ReplyDeleteஉயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
//
சூப்பர்!
வேண்டாம் வெளிச்சம் என்றாலும்-
ReplyDeleteகவிதை
வீதியில் விளக்கு நின்றாலும்
தூண்டா விளக்காம் உம்கவிதை-
மேலும்
தூண்டும் எழுத நற்கவிதை
ஈண்டார் படித்திடுன் புகழ்வாரே-
மனதில்
எண்ணி எண்ணி மகிழ்வாரே
சான்றாம் என்றே இக்கவிதை-
இங்கே
சௌந்தர் நீங்கள் தந்தீராம்
புலவர் சா இராமாநுசம்
கவிஞர் சவுந்தர்...
ReplyDeleteகலக்கல்.... கவிதை....
அருமை.
ReplyDeleteபோலிகளாகும் நிஜங்கள் தொடரும் நிழல்கள்
ReplyDelete//ஆதாம் ஏவாளுக்கு பிறகு
ReplyDeleteஅனைவரும் இருட்டின் உற்பத்திகளே...//
கவி அழகுக்காக சேர்க்கப் பட்டாலும் இந்த வரிகளில் பொய் இருக்கிறது... பிற அனைத்தும் அருமையான சொல்லாடல்..
ரசிக்கும்படியான கவிதை வரிகள், அருமை
ReplyDeleteஅடடா என்ன ஒரு கற்பனை .....கருத்தும் அருமை !
ReplyDelete//ஜாதிகளையும்.. மதங்களையும்..
ReplyDeleteஉயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..//
அருமையான வரிகள் மாப்ஸ்....
வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
ReplyDeleteஇருட்டு ஒன்றினைக்கிறது..
நல்ல கவிதை
நல்ல கவிதை.
ReplyDeleteஉயிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம்
ReplyDeleteமூச்சை நிறுத்திக் கொண்டது..
மூச்சை நிறுத்திக் கொள்ளவில்லை சகா, நிறுத்திட்டாங்க. . .
இருளில் உங்கள் தேடல் அருமை.......
கவிதை கலக்கல்
ReplyDeleteஆஹா கலக்கல் கவிதைய்யா வாழ்த்துக்கள்...!!
ReplyDeleteஇருட்டையும் மனிதனையும் வகுத்த விதம் சூப்பர்ப்...!!!
ReplyDeleteகவிதைஅருமை.:)
ReplyDeleteசூப்பர்.,
ReplyDeleteஅதோ... இருட்டில் தான்
ReplyDeleteமுழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...
விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..
-அருமையான வரிகள். நல்ல கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சௌந்தர் சார்!
கலக்குறீங்க கவிஞரே அருமை
ReplyDeleteவிளக்குகள் இல்லாத இரவில்
ReplyDeleteவிளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்../
nice..
கலக்குறீங்க பாஸ் சூப்பர்
ReplyDeleteவரிகள் எளிமை
ReplyDeleteபடித்திட இனிமை
கவிதை அருமை...
இருட்டானாலும், இனிய கவிதை.கலக்குங்கள் கவிநரே.
ReplyDeleteகவித.... கவித...
ReplyDelete//ஜாதிகளையும்.. மதங்களையும்..
ReplyDeleteஉயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..//
படித்த வரிகள் மனதை விட்டுச் செல்ல மறுக்கிறது நண்பரே..
அருமை.தொடருங்கள்
தோலை கிழித்தால் ரத்தத்தின் நிறம் சிவப்பு போல்
ReplyDeleteஇருட்டில் மானிடர்கள் அனைவரும் உருவமே என
சொன்ன உங்கள் கவிதை
சமூகத்தில் தனிப்பங்கு வகிக்கிறது..
போலிகள் உண்மையாய் மாறுகையில்
உண்மைகள் போலியாய் மாறுவதில்
உள்ள சிந்தனையை அழகுற சொல்லியிருக்கிறீர்கள்..
அருமையான கவிதை..
இருளை... வெளிச்சம் போட்டு காட்டியிருக்கீர்கள்...மெய்சிலிர்க்க வைத்த கவிதை...
ReplyDeleteநிலவொளியை முழுதாய் அனுபவிக்கவும், நட்சத்திரங்களைக் காணவும் மின்சாரமில்லா இருளில்தானே முடிகிறது. கிராமத்து வயல்வெளிகளில் மின்மினிப் பூச்சிகளைக் கண்ணுற்ற கணங்கள் நினவிலாடுகின்றன. அழகிய கவிதை.
ReplyDelete//ஆதாம் ஏவாளுக்கு பிறகு
ReplyDeleteஅனைவரும் இருட்டின் உற்பத்திகளே...//
அழகான கோர்ப்பு...
விளக்குகள் இல்லாத இரவில்
ReplyDeleteவிளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..
வரிகள் பிடித்திருக்கிறது....