கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 April, 2013

எனக்கு எதிராக சதி நடக்கிறது...! குஷ்பு ஆவேசம்..!

 
எனக்கு வேண்டாதவர்கள் என்னைப் பற்றி வதந்தி பரப்பி வருகின்றனர். நான் திமுகவில்தான் இருக்கிறேன், விலகவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 
 
நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்தபோது எந்த அளவுக்கு கிராக்கி இருந்தது தற்போது அந்த நிலை இல்லை. வேண்டாத விருந்தாளியாக பார்க்கப்படுகிறார் கட்சியினரால். 
 
இருப்பினும் அவரை கட்சியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து வைத்திருக்கிறது தலைமை. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் அளித்த பேட்டி திமுகவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் அவரது வீடு கல்வீச்சுக்குள்ளனது. அவரும் தாக்கப்பட்டார். 
 
இதை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக கண்டித்தார். உடனே இதுவும் சர்ச்சையானது. இந்த நிலையில் குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாகவும், அவர் சிரஞ்சீவியைப் பார்த்து இதுதொடர்பாக பேசியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. 
 
சிரஞ்சீவியை குஷ்பு சந்தித்ததால் எழுந்த பேச்சு இது. ஆனால் இது குஷ்பு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். 
 
தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். திமுக-வில் இருந்து பிரிக்க எனக்கு எதிராக சதி நடக்கிறது. காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அந்த வதந்திகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.

6 comments:

 1. ஆய்வுக்கு உரியது நல்ல விழிப்புணர்வு

  ReplyDelete
 2. இந்த ஆக்கங்கெட்ட கூவையை முதல்ல ஆப்கானிஸ்தான்க்கு பார்சல் பண்ணுங்கய்யா தொல்லை தாங்க முடியல...

  ReplyDelete
 3. ஆமா...இவுங்க பெரிய கப்பல் வியாபாரி? இவுங்களை சுத்தி சுத்தி டூயட்...ச்ச்சீ... சதி பன்னுராங்க.. இங்க இல்லன்னா இன்னொரு கட்சியில போயி குத்தாட்டம் அவ்வளவுதான்... வச்சவனுக்கு ஒரு கடை... வாங்குறவனுக்கு ஒன்பது கடை... ம்ம்ம்ம்ம்ம்ம்.

  ReplyDelete
 4. மேம்.. யூ ஆர் சோ கரேஜியஸ் மேம்... உங்க திறமை யாருக்கு வரும்? இ சல்யூட் யூ மேம்... யூ ஆர் கிரேட் மேம்... சிங்கத்தின் குகைக் குள்ளயே போயி அதன் பிடரியைப் பிடித்தி தொங்கிட்டீங்க மேம்... இப்புடி எல்லாம் நம்ம இனமானப் போராளிகள் இந்த குசுபூ வுக்கு டிவிட்டு போட்டு தாக்குதுங்க...பேட்டி குடுத்து சீன் போட்டஇவங்களுக்கே இவ்வளவு பாராட்டுன்னா....? அத எழுதிக் குடுத்த (அவருக்கு) எவ்வளவு பாராட்டு விழா நடத்தனும்?

  ReplyDelete
 5. நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன, தமிழ் வெளி ஒரு நல்ல பயனுள்ள வலைத்தளம் ... தமிழ் வெளி நன்றி....
  எமது வலைப்பகுதி
  தமிழ் வாழ் வலைப்பகுதி
  திருக்குறள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...