கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 April, 2013

இதைப்பத்தி யாரும் பீல் பண்ணக்கூடாது...!




ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,

''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''

குரு சிரித்துக் கொண்டே, ''அது அவரவர் விருப்பம்,''என்றார்.

பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,

''பால், சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''

இந்த உலகத்தில் நல்லது கெட்டது இரண்டும் நிறைந்திருக்கிறது. நல்லதை மட்டுமே அதிகம் விரும்பப்படுவதால் தான் இந்த உலகம் இன்றும் நிலையாக இருக்கிறது...

*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*

கூடுதலா ஒரு நகைச்சுவை...




''ரொம்ப கோபமா இருக்கீங்க,ஒரு டீ சாப்பிடுங்க முதலில்.''

'அதெல்லாம் வேண்டாம், முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு.'

''ரொம்ப சூடா இருக்கீங்க, கூலா ஏதாவது சாப்பிடுங்க.''

"சரி, சரிகொடு.''

'இந்தாப்பா, அந்த டீயை ஜில்லுன்னு ஆத்திக்கொடு.'

"!!!??
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*


இந்த படத்துக்கு
வார்த்தைகளை அடுக்கி
கவிதை எழுதி  

உண்மையான வறுமையை
கலங்கப்படுத்த விரும்பவில்லை....

*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*
கண்ணீர் அஞ்சலி...
+*********************************+
அனைவருக்கும் நன்றி!

8 comments:

  1. அனைத்தும் அருமை...

    கண்ணீர் அஞ்சலி செம...

    ReplyDelete
  2. நல்ல கதை..நகைச்சுவை!

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் சிறப்பு.

    ReplyDelete
  4. எல்லாம் நல்ல இருக்கு காலனி நெகிழ்வைத்தன

    ReplyDelete
  5. இந்தப் படத்திற்கு வார்த்தைகளை அடுக்கி உண்மையான வறுமையை காயப்படுத்த விரும்பவில்லை//நன்று

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை..இந்தக் கண்ணீர் அஞ்சலி மாறி, ஊதுபத்தி வேறு இடம் செல்ல நேரம் வந்தால் நன்றாக இருக்கும்..காலனி மனதைக் கலக்குகிறது..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...