கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 May, 2013

இது கள்ளக் காதலைவி்ட மோசமானதாக இருக்குதே..!


உன்னை  மறந்து 
விழிகள் தூங்கினாலும்...
இதயமொன்னவோ
விழித்துக் கொண்டுதான் இருக்கிறது...

######################################################


எனக்குத் தெரியாமலே 
ஏதேதோ நடந்து விடுகிறது...
காதல் உள்பட... 

######################################################


வார்த்தை வசமிருந்தும் 
“கவிதை“ எழுதவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்காதாம்...

####################################################


 உன்னிடம் 
நிறைய பேச வேண்டும்
ஒரே வார்த்தையில்....

#################################################

 
 
எவ்வளவு நேரம்
என்றாலும்
உனக்காக காத்திருப்புகள்
எனக்குள் சுகமானவை...

############################################################ 

 

பயமில்லை...!
வலிக்கு பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 

பயந்திருக்க வேண்டும்..

############################################################


காதல் மென்மையானது
ஒரு துளி கண்ணீர் கூட
அதற்கு சுமைதான்...
###########################################################

படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..
கவிதை என்னுடைய காதல் கவிதைகள்....
படங்கள் நாட்டுக்கு கேடான சங்கதிகள்...

இந்தமாதிரியான காதலை ‌என்னவென்று சொல்வது....
(Re-Post)

5 comments:

 1. வரிகள் அருமை...

  படங்கள் கொடுமை...

  ReplyDelete
 2. அடப்பாவிகளா.....

  சௌந்தர்... உங்களின் அழகான கவிதைகளை இந்த மாதிரிப் படங்களுடன் போட்டதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

  ReplyDelete
 3. உன்னிடம் நிறைய.....
  கவிதை மிக அருமையான வரிகள்...

  ReplyDelete
 4. படங்களும் கவிதைகளும் ,இதுதான் முரண்சுவையோ

  ReplyDelete
 5. இப்போது இதுவும் சரியோ? மனம் இல்லா மனிதப் பிறவிகள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...