கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 December, 2013

இந்த சம்பவம் கூட எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்ததுதான்..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11 மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்

" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
 
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி, " டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு " சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அடிவிழும். மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான்.

தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார். எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்டபாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும். ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. "அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே." என்றார்.

எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் "டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார், நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும் நினைவில் இல்லை. இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே. வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன், என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே" என்று கேட்டுக்கொண்டார்.
 
"சரி போய் வேலையை செய். திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது" - தலைவர் உத்தரவிட்டுவிட்டார். மணிக்கு ஏக சந்தோஷம்

மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம். மணி வெளியே அனுப்பிவிட்டு, தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர், "அந்த சமையல்காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன். அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு" என்று உத்தரவிடுகிறார்.

அதன்படி தான் மணியும் நின்றார். தலைவர் காரில் புறப்படும்போது, மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார். உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம். இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம், மனிதநேயம் என்றே கணிக்க முடியவில்லை. இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம் . (எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்புகளிலிருந்து)

***********************
அது எப்படி...
இன்று வரை நீ
ஏழைகளின் தலைவனாகவே
இருக்கிறாய்...
தலைவா...!

19 comments:

  1. வித்தியாசமான அறியாத தகவலுடன் கூடிய
    அருமையான சிறப்புப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  2. வணக்கம்
    அறியமுடியாத அற்புதமான தகவல் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்

    த.ம3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அது எப்படி...
    இன்று வரை நீ
    ஏழைகளின் தலைவனாகவே
    இருக்கிறாய்...
    தலைவா...!\\அது ஒன்றுமில்லை, ஏழைகளை ஏழைகளாகவே வைத்து முன்னேறவிடாமல் தடுத்திருப்பது தான் ரகசியம் தொண்டா..............

    ReplyDelete
    Replies
    1. அவராவது ஏழைகளை ஏழகைளாக வைத்திருந்தார்
      தற்போது உள்ளவர்கள் ஏழைகளை அழித்து விட்டுதான் தான் வாழ்கிறார்கள்...!

      Delete
  5. தெரிந்த தகவல். ஆனா, அவரின் நினைவு நாளின்போது மீண்டும் படித்தது சந்தோசம்!!

    ReplyDelete
    Replies
    1. இவரின் வாழ்க்கை தமிழ் மக்களுக்குஅத்துபடி...

      எல்லாத்தகவல்களும் அனைவருக்கும் அறிந்ததுதான்..
      அவரது நினைவு நாளில் அவற்றை நினைவு கூர்வது நம்முடைய கடமை...

      Delete
  6. புரட்சித் தலைவரின் புகழ் இவ்வுலகெங்கும் ஓங்குக...

    ReplyDelete
  7. அதனால் தான் அவர் இன்றும் மக்கள் மனதில் தெய்வமாக தலைவனாக.

    ReplyDelete
  8. அதனால் தான் அவர் இறந்தும் வாழ்கிறார்

    ReplyDelete
    Replies
    1. அவர் இறந்தபிறகும் நிறைய கிராம மக்கள் அவர் இறந்துவிட்டதாக நம்பவேயில்லையாம்

      Delete
  9. 'மணி'யான தகவல்தான் !
    +1

    ReplyDelete
  10. [[அது எப்படி...
    இன்று வரை நீ
    ஏழைகளின் தலைவனாகவே
    இருக்கிறாய்...
    தலைவா...!\\அது ஒன்றுமில்லை, ஏழைகளை ஏழைகளாகவே வைத்து முன்னேறவிடாமல் தடுத்திருப்பது தான் ரகசியம் தொண்டா.....]]]

    good sense of humor!

    சில உண்மைகள் இருந்தாலும் ஊடகங்கள் ஏழைகளை முட்டளாக்க எழுதியவை பல. முக -வை அழிக்க எடுத்த ஆயுதம்; அதுவும் காமாராஜ் இறப்பிற்கு அப்புறம் அதிகம் -நிறய syndicated propaganda! அவர் கொடுத்தது அவர் வீட்டு சமையல் காரனுக்கு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!


    ReplyDelete
  11. பொன்மனச் செம்மல் செம்மல் என்றால் அது எம்.ஜி.ஆர்தான்
    த.ம.18

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...