பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம். ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.
முன்பெல்லாம் பார்க், பீச்சுகளில் விளையாட மட்டுமே வந்த இந்த பள்ளிக் குழந்தைகள் இப்போது காதல், செக்ஸ் என்ற மாயவலையில் சிக்கி வருகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அதை விட ஒரு படி மேலே கருக்கலைப்புக்கு வந்து நிற்கிறார்கள் இந்த யூனிபார்ம் அம்மாக்கள்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டியில் ஒருநாளில் 2 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கும் அதே நேரத்தில் இந்த விற்பனையில் ‘சிங்காரச் சென்னை‘ நம் பர் 1 இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாணவச் சமுதாயமே என்பது கவலை தரும் அம்சம்.
இது பற்றி மனநல ஆலோசகர் டாக்டர் செலின் பேட்டி: ‘‘இந்த பருவ நிலை காதலுக்கு ஹார்மோன் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி... சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை மற்றும் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என எல்லாவற்றையும் சார்ந்தது. அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தான் இப்போது உள்ள குழந்தைகள் வளர்கிறார்கள். வேலையில் உடன் பணியாற்றும் சக ஆண் நண்பருடன் வெளியே செல்வது, போனில் பேசுவதை பார்த்து வளரும் குழந்தைகள் தடம் மாறிப்போக ஒரு காரணமாகிறது.
இப்போது பெரியவர்கள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டுள்ளது செல்போன். கேமரா, மெமரி கார்டு, ஈமெயில், படங்களை டவுண்லோட் செய்வது என பல வசதிகள் கொண்ட செல்போன் மார்க்கெட்டில் உள்ளது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது. மேலும் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் அசாத்திய மனநிலை மாற்றங்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.
குழந்தைகள் ஒரு களிமண். அதை நாம் அழகான ஒரு பொம்மையாக மாற்றி அமைக்கலாம். அதன் முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.
பெற்றோர்களே காரணம்
மனோகரன் (போலீஸ் அதிகாரி) கடந்த வாரம் ஒரு இளம் ஜோடியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். இருவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி ஸ்டேஷன் வரச் செய்தோம். அவர்கள் கூறியதை கேட்டு திடுக்கிட் டோம். ‘‘என்ன சார் இது சிம்பிள் மேட்டர். என்னமோ திருடனைப் பிடித்தது போல சொல்கிறீர்கள். இந்த பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘‘ என்று கூறியதோடு அந்த மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச் செல்லாமல் வீட்டுக்கு போங்கள், எங்களுக்கு வேலை இருக்கிறது என்று கூறி சென்றனர். பெற்றோர்கள் மனது வைத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.
மனரீதியில் பாதிப்பு...
சரஸ்வதி (அரசு பள்ளி ஆசிரியர்) பொதுவாக தனியார் பள்ளியில் இம்மாதிரி பிரச்னை அதிக அளவில் இருப்பதில்லை. அரசு பள்ளியில் மட்டுமே இந்த நிலை அதிகம் இருக்கிறது. கடந்த வாரம் எனது பள்ளி மாணவ மாணவி ஜோடி அதி காலையில் சீருடையுடன் பீச் சென்றுள்ளனர். அவர்கள் 4வது முறையாக போலீஸ் வசம் பிடிபட்டுள்ளனர். கடந்த 3 முறை பெற்றோர் இடத்தில் சொல்லி பயனில்லை என்பதால் பள்ளிக்கு தகவல் அனுப்பினர். அவர்களை பள்ளிக்கு வரச் செய்து இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். அப்போது மாணவி கூறியது கேட்டு திடுக்கிட்டேன். மாணவி கூறியதாவது:
‘‘பிழைப்பை தேடி கிராமத்திலிருந்து நாங்கள் சென்னை வந்துள்ளோம். தாய், தந்தை இருவரும் மரம் வெட்டும் வேலை செய்கின்றனர். காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்கள். நான்தான் சமையல் செய்வேன். காலையில் செய்யும் சாப்பாட்டை இரவிலும் சாப்பிடுவேன்.
மதியம் பள்ளியில் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பதால் ஆதரவின்றி இருப்பதாக உணருகிறேன். உடல் நிலை சரியாக இல்லாத நேரத்திலும் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மனரீதியாக பாதிப்படைகிறேன். சக மாணவர் என்மீது அதிக அக்கறை செலுத்துவதால் அவன் மீது பாசம் வைத்துள்ளேன். பீச் செல்வது தவறு என்று தெரிந்தும் என்னால் அவனுடன் செல்வதை தவிர்க்க முடியவில்லை” என்றாள். (நன்றி தினகரன்)
எனவே, இந்த பிரச்னைக்கு காரணம் பெற்றோர்களே. தனியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகள் குறி த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. மதிய உணவுக்காக பிள்ளைகளை படிக்க வைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான செய்கின்றனர். அந்த நிலை மாறினால் மட் டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும்.
மனதைக் கனக்கச் செய்யும் பகிர்வு... முழுக்க முழுக்க தவறு பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது...
ReplyDeleteகண்கலங்கும் அதிர்ச்சி
ReplyDeleteமுதல் வடை, கடைசி வடை எல்லாம் தாண்டி நிற்கிறது உங்கள் பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள். வாழ்த்துங்கள் ...
இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது.//
ReplyDeleteஅதிர்ச்சியளிக்கும் பகிர்வு.
பெற்றோர் கவனிப்பு அவசியம்.
நண்பர் தின வாழ்த்துக்கள்.
அன்பை பகிர்ந்து கொள்வதில்
ReplyDeleteகாலத்துக்கேற்ற மாறுதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன....
இன்றைய சமூகம் சற்று படித்த சமூகம்..
நேற்றைய சமூகம் இதைவிட படிக்காத சமூகமே......
இன்று குற்றங்கள் மலிந்திருக்க காரணம் என்ன
ஏன் நம்மினப் பிள்ளைகளுக்கு ஹார்மோன்கள் தூண்டப்பட்டு
கிடக்கின்றன????
பெற்றோர்கள் வளர்ப்பு முறை ஒரு பக்கம் இருந்தாலும்
இன்று பூதாகரமாக வளர்ந்து இருக்கும் பன்முக அறிவியல்
சாதனங்களின் விபரீதங்களும் ஒரு காரணம்...
மாற்றங்கள் நிகழ வேண்டும் தான்
மாற்றங்கள் நம் சிந்தனைகளைத்தான் மாற்ற வேண்டுமே ஒழிய
நம் அடிப்படை குணங்களை அல்ல
எம் இனப் பெண்டிரே....
எம் குல இளைஞர்களே.....
சிந்தியுங்கள்
செயல்படுங்கள்...
நாளை உங்கள் சந்ததிகள்
உன்பெயரும்
நம் மொழிப் பெயரும் சொல்ல வேண்டும்....
மடமையுடன் புழுதி புரண்டு
சேற்றில் விழாதீர்.......
அன்பன்
மகேந்திரன்.
வருத்தமான விஷயம்.......
ReplyDeleteஉடல் நடுங்கிறது...
ReplyDeleteசீர்கேடுகள் நிறைந்து எல்லாமே இப்போ தலைகீழாகத்தான் நடக்கிறது,,,
தமிழர் பண்பாடுகள் மறைந்துகொண்டுபோகிறது,.....,.....
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...
//////
ReplyDelete'பரிவை' சே.குமார் said... [Reply to comment]
மனதைக் கனக்கச் செய்யும் பகிர்வு... முழுக்க முழுக்க தவறு பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது...
//////
உண்மைதான் குமார்...
பெற்றோர்களின் கணிவு, கவணிப்பு இல்லையென்றால் எதிர் காலம் கேள்விகுறிதான்...
////////
ReplyDeleteகவி அழகன் said...
கண்கலங்கும் அதிர்ச்சி
////////
நாங்கள் ஆசிரியர் என்ற முறையில் மிகவும் கவலைப்பட்டக்கிடக்கிறோம்...
அப்படி மாணவிகளை அழைத்து அதை ஆசிரியர்கள் மீது திரித்துவிடுவது இன்னும் மோசம்...
அழைத்து அறிவுரை சொல்லக்கூடாது தற்ப்போது பயமாக இருக்கிறது...
என்ன செய்ய....
நான் பன்னி -ஐ வழி மொழிகிறேன்
ReplyDelete///////
ReplyDeleteEnayam Thahir said...
முதல் வடை, கடைசி வடை எல்லாம் தாண்டி நிற்கிறது உங்கள் பதிவு.
வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள் ...
///////
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..!
பெற்றோர்கள் உணரவேண்டும் ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
ReplyDelete/////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது.//
அதிர்ச்சியளிக்கும் பகிர்வு.
பெற்றோர் கவனிப்பு அவசியம்.
நண்பர் தின வாழ்த்துக்கள்.
////////////
வளர்ந்து வரும் நாகரீக மாற்றமே இப்பிரச்சனைக்கு காரணம்...
கைபேசியை தவிர்த்தால் மாணவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது...
தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
யூனிபார்ம் அம்மாக்கள்.//
ReplyDeleteஇந்த வார்த்தையே உலுக்குகிறது.
அதிர்ச்சிஅளிக்கும் தகவல்.
விழிப்புணர்வு வேண்டும்.
//////
ReplyDeleteமகேந்திரன் said...
அன்பை பகிர்ந்து கொள்வதில்
காலத்துக்கேற்ற மாறுதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன....
இன்றைய சமூகம் சற்று படித்த சமூகம்..
நேற்றைய சமூகம் இதைவிட படிக்காத சமூகமே......
இன்று குற்றங்கள் மலிந்திருக்க காரணம் என்ன
ஏன் நம்மினப் பிள்ளைகளுக்கு ஹார்மோன்கள் தூண்டப்பட்டு
கிடக்கின்றன????
பெற்றோர்கள் வளர்ப்பு முறை ஒரு பக்கம் இருந்தாலும்
இன்று பூதாகரமாக வளர்ந்து இருக்கும் பன்முக அறிவியல்
சாதனங்களின் விபரீதங்களும் ஒரு காரணம்...
மாற்றங்கள் நிகழ வேண்டும் தான்
மாற்றங்கள் நம் சிந்தனைகளைத்தான் மாற்ற வேண்டுமே ஒழிய
நம் அடிப்படை குணங்களை அல்ல
எம் இனப் பெண்டிரே....
எம் குல இளைஞர்களே.....
சிந்தியுங்கள்
செயல்படுங்கள்...
நாளை உங்கள் சந்ததிகள்
உன்பெயரும்
நம் மொழிப் பெயரும் சொல்ல வேண்டும்....
மடமையுடன் புழுதி புரண்டு
சேற்றில் விழாதீர்.......
அன்பன்
மகேந்திரன்.
////////
தங்களின் தெளிவான விளக்கம் அருமை...
இன்றைய மாணவர்கள் கண்டிபப்பாக உணர வேண்டும்...
கொடுமை கொடுமை .....
ReplyDeleteஉங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDelete//////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
வருத்தமான விஷயம்.......
//////////
உண்மைதான் கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...
/////
ReplyDeletevidivelli said...
உடல் நடுங்கிறது...
சீர்கேடுகள் நிறைந்து எல்லாமே இப்போ தலைகீழாகத்தான் நடக்கிறது,,,
தமிழர் பண்பாடுகள் மறைந்துகொண்டுபோகிறது,.....,.....
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...
///////
தங்கள் கருத்தை நான் வரவேற்க்கிறேன்....
இதில் மாணவர்களை குற்றம் சொல்வதை விட பெற்றோரையும் சூழ்நிலையயுமே குற்றம் சொல்ல வேண்டியிருக்கிறது, கத்திமேல் நடக்கும் பருவத்தில் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் மிக அவசியம், சதா பணம் பணம் என அலையும் இயந்திர வாழ்க்கையால் குழந்தைகளை கண்காணிக்காமலோ கண்டுகொள்ளாமலோ விடுவதே இவை நிகழக் காரணம். பெற்றோர்களே இனியாவது விழித்திடுங்கள்.
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு பதிவு, தங்களின் பணி பாராட்டுக்குரியது. நன்றி
சினிமா, சீரியல் இவைகளே காரணம்.
ReplyDeleteவணக்கம் தோழா அற்புதமான படைப்பு
ReplyDelete//////
ReplyDeleteNAAI-NAKKS said... [Reply to comment]
நான் பன்னி -ஐ வழி மொழிகிறேன்
////////
தங்க்ள் வருகைக்கு மிக்க நன்றி
//
ReplyDeletekoodal bala said... [Reply to comment]
பெற்றோர்கள் உணரவேண்டும் ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
///////////
பெற்றோர் தரப்பில் இருந்தும் நிறைய தவறுகள் இருக்கின்றன...
உங்கள் பகிர்வு முற்றிலும் உண்மை தான் நண்பரே... பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பொருள் சேர்பதில் தான் இன்றைய நிலையில் முக்கியமாக கருதுகிறார்கள்... ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ... தாய் தந்தையரின் அரவணைப்பும் கண்டிப்பும் அன்பும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் இது போன்ற நிலை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்... பெற்றவர்கள் கவனம் பிள்ளைகளின் பக்கம் திரும்பாத வரையில் இவற்றை குறைக்க வழி இல்லை என்பது என் கருத்து...
ReplyDeleteஉங்கள் பகிர்வு முற்றிலும் உண்மை தான் நண்பரே... பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பொருள் சேர்பதில் தான் இன்றைய நிலையில் முக்கியமாக கருதுகிறார்கள்... ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ... தாய் தந்தையரின் அரவணைப்பும் கண்டிப்பும் அன்பும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் இது போன்ற நிலை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்... பெற்றவர்கள் கவனம் பிள்ளைகளின் பக்கம் திரும்பாத வரையில் இவற்றை குறைக்க வழி இல்லை என்பது என் கருத்து...
ReplyDelete////////
ReplyDeleteகோகுல் said...
யூனிபார்ம் அம்மாக்கள்.//
இந்த வார்த்தையே உலுக்குகிறது.
அதிர்ச்சிஅளிக்கும் தகவல்.
விழிப்புணர்வு வேண்டும்.///////
கண்டிப்பாக....
விழிப்புணர்வு இருந்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கிடைக்கும்...
///////
ReplyDeleteரியாஸ் அஹமது said...
கொடுமை கொடுமை .....
////////
இந்த கொடுமைக்கு ஒரு தீர்வு வேண்டும்...
///////
ReplyDeleteரியாஸ் அஹமது said...
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
////////
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
ரியாஸ்...
சொல்ல மறந்துவிட்டேன்,
ReplyDeleteபதிவுலகில்
கிடைத்த
முதல்
நட்புக்கு
என்னை
ஊக்கப்படுத்திய
உயர்ந்த
உள்ளத்துக்கு
என் உள்ளம்
கனிந்த
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!!!
இரு இதயங்கள் உரசிக்கொள்ளும் போது குபீர் என பற்றிக்கொள்கிற தீ தான் காதல்!
ReplyDeleteஆண் - பெண்ணின் உணர்வுகளுக்கு உரமூட்டுகிற இந்த காதல் எல்லை மீறி போகும் தருவாயில்தான் பல
பிரச்சினைகள்.
சாதரணமாக ஒரு கொசு வந்து நம் மேனியை ஒரு துளி ரத்தம் எடுப்பதற்கு அனுமதி அளிக்காத நாம்...
ஒரு சிசு வந்து நம் எதிர் காலத்தையே கேள்விக் குறியாக்கப் போகிறதே என்று காதலிக்கும் பெண்கள் புறிந்து கொள்ளுவதில்லை.
படிக்கும் பிள்ளைகள் படிப்பிலேதான் கவனம் செலுத்த வேண்டும்.
அருமையான ஒரு பகிர்வு வாழ்த்துக்கள் சகோ
அன்பின் சௌந்தர் - பிரச்னையின் தீவிரம் புரிகிறது. ஆனால் இப்பிரசனைக்கு பெற்றோரை மட்டுமே குற்றவாளி ஆக்காதீர்கள். பெற்ரோர் கவனமாக இருக்க வேண்டும் என்பது சரியான வாதம். ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியும், இளம் தலைமுறைக்குக் கிடைக்கும் சுதந்திரமும் தான் முக்கியக் காரணங்கள். அதே போல் பெற்ரோரில் வேலைக்குச் செல்லும் தாய் அலௌவலக்ப் பணிதின் நிமித்தம் சக ஊழியருடன் வெளியில் செல்வது - அலை பேசியில் பேசுவது எல்லாம் பிள்ளைகள் கெட்டுப் போவதற்குக் காரணம் என்பது சரியான கருத்து அல்ல. இன்றைய கால கட்டத்தில் இவை எல்லாம் ஒரு காரணமாக யாருமே பேச மாட்டார்கள். எனினும் ஆதங்கம் புரிகிறது - பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்பது தவறுதான்.
ReplyDeleteஅதிர்ச்சியளிக்கும் பகிர்வு..
ReplyDeleteயார் என்ன காரணம் சொன்னாலும்...முதல் காரணம் மனக்கட்டுப்பாடின்மைதான்.
ReplyDeleteஅதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.
தனிமை..என்பது அவற்றுக்கு தூண்டுகோளாக அமைந்து விடுகிறது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் என்றில்லை இயன்ற அளவு பிள்ளைகளை பெற்றோர் அல்லது குடும்பத்தார் பார்வைக்குள் கொண்டுவர முயற்சித்தால்....
நிச்சயம்...
மானவர்களை மாணவரகளாகவே பார்க்கக்கூடிய வாய்ப்புக்கிட்டும்
நல்ல தகவல்....
பகிர்வுக்கு நன்றி
மனசுக்கு வேதனையாதான் இருக்கு....!!!
ReplyDeleteபட்டணம் முதலாக பட்டிக்காடு
ReplyDeleteவரை இந்த நிலைதான்
ஆண்டவன் கூட இதை நீக்க
இயலாது!
புலவர் சா இராமாநுசம்
வருந்தத்தக்க விஷயம்.பிரச்சனை எல்லா இடங்களிலும் தான் உள்ளது.அரசுப் பள்ளியில் என்பது சரியானதாகத் தெரியவில்லை.
ReplyDeleteஅதிர்ச்சி அதிர்ச்சி தான் மொபைல் போனில் இன்டர்நெட் இது தான் முற்றும் சிறு வயதில் கேட்டு போக காரணம் பல பெற்றோர்களுக்கு மொபைல் கம்ப்யூட்டர் பயன் படுத்த தெரியாது ஆனால் பிள்ளைகள் எதற்காக உபயோகபடுதுகிரர்கள் என்று பார்க்க தவறி விடுகிறார்கள் பெற்றோர்களின் அருகாமை பிள்ளைகளுக்கு முக்கியம் இதை பெற்றோர்கள் உணர வேண்டும் நல்ல பதிவு
ReplyDeleteஎங்கே போய் முடியும் இந்த விஷயம் என்று கவலையாய் இருக்கிறது.
ReplyDelete//பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பொருள் சேர்பதில் தான் இன்றைய நிலையில் முக்கியமாக கருதுகிறார்கள்...//
ReplyDeleteஉண்மைதான். முதலில் விட்டு விட்டு பின்னர் கதறுகிறார்கள்.
அதிர்ச்சியளிக்கும் பகிர்வு..
ReplyDeleteஎன் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
நவீன தொழில் நுட்பத்தின் பிரதிபலன் தான் இது என்று நொந்து கொள்ள முடிகிறதேயன்றி, எம்மால் எதனையும் செய்ய முடியாத நிலமை.
ReplyDeleteஇது பற்றி நான் இரண்டு பதிவுகள் மூலம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.
ஆனாலும் இந்தச் சமூகம், தவறிழைக்கும் இளம் சமூகம் உணர்ந்து திருந்துமா என்பது சந்தேகமே.
நாகரீகம் என்ற பெயரில் ஆடும் நாடக கூத்தே இதற்கெல்லாம் காரணம்... எதை தொட்டாலும் ஆபாசத்தின் சீண்டல் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒவ்வொருவரின் பார்வையிலும் பட்டுக்கொண்டிருக்கிறது... அதன்பால் ஈர்க்கப்படுபவர் சீரழிவை நோக்கிச்சென்றுக்கொண்டிருக்கிறார்... சமூகமும் துணைப்போய்க்கொண்டிருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஉண்மைதான் அன்பு பொய்யா உண்மையா என்று தெரியாமல் ஏமாறும் நிலை இது.
ReplyDeleteவிழிப்புணர்வுப்பதிவுக்கு கூட மைனஸ் ஓட்டுப்போடராங்களே?
ReplyDeleteடைட்டிலில் ஒரு கரெக்ஷன்.. பதற --- நாட் பதர
ReplyDelete//னியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.//
ReplyDeleteஅதென்னவோ உண்மை தான். இருபாலர் படிக்க கூடிய பள்ளிகளில் கூட பேச கூடாது, பழக கூடாது என ஆயிரத்தெட்டு கண்டிஷன் இருக்கும். ஆனா பணக்கார பெற்றோர்கள் அதிகமா இருக்குறதுனால விபரீதம் அதிகமா இருக்கும்ங்குறது மறுக்க முடியாத உண்மை.
எவ்வளவோ தியாங்கங்கள் செய்யும் பெற்றோர்கள் சிறிது நேரம் தியாகம் பண்ணி மனம் விட்டு பேசினால பல பிரச்சனைகள் ஓயும்.
இதெல்லாம் சர்வ சாதாரண விஷயம்,சிம்பிள் மேட்டர்ன்னு சொல்ற நாய்கள நடு நோட்லையே வெட்டி போடணும்
தலைமுறை இடைவெளி என்பதையும் தாண்டி பெற்றோர்கள் தோழமையுடன் பழக வேண்டும்.
ReplyDelete