காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறேன்
என்ன ஆச்சரியம் என்று
என்ன ஆச்சரியம் என்று
சந்தேகத்துடன் பார்க்கிறாள் என் தங்கை...
நான் பலமுறை தலை சீவுவதை
சந்தேகப்பட்டு பார்த்துவிட்டு செல்கிறான்
என் அண்ணன்...
என் ஆடை அழகேறியதில்
சந்தேகங்கள் ஊராருக்கு...
நான் எதை கிறுக்கினாலும்
கவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...
இரவில் குரல் கொடுத்து
இன்னும் தூங்கவில்லையா என்கிறார் அம்மா
நான் தூங்குவதுபோல் நடிப்பது
தெரிந்துவிட்டது என்அம்மாவுக்கு...
அப்பா குரல் கொடுத்தும் கவனிக்காமல்
விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதோ அசரீரி அழைத்ததாய் நினைத்து...
ஏதோ அசரீரி அழைத்ததாய் நினைத்து...
எதிர்படுபவர்களை கவனிக்க மறந்து
அதற்காக பலகாரணங்கள்
சொல்ல வேண்டியிருக்கிறது...
இமைகளை மூடினாலும் எட்டிப்பார்க்கிறது
கண்களுக்குள் இருக்கும் கனவுகள்...
கவிதைவீதி
நடை, உடை, பாவனை மாறிவிட்டது
இருந்தும் மாறாதது போல்
நடிக்க வேண்டியிருக்கிறது...
இனி என்ன செய்ய...
எவ்வளவு மறைத்தும் மறைக்கமுடியவில்லை
எனக்குள் வந்துவிட்ட காதலை....
கருத்திடுங்கள்... வாக்கிடுங்கள்...
கவிதை உயிர்க்கொள்ளும்....
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!
அருமை நண்பரே
ReplyDeleteகாதலை மறைக்க முடியாது என்பதை சொன்ன விதம் சூப்பர்...
அருமையான கவிதை
ReplyDelete///இமைகளை மூடினாலும் எட்டிப்பார்க்கிறது
கண்களுக்குள் இருக்கும் கனவுகள்..////
இமைய மூடினால்தானே கனவு வரனும்.. இந்தக் காதல்ல ஒன்னுமே புரியுதில்லப்பா....
நண்பரே, கவிதை மிக மிக அருமை. உங்கள் அனுமதி கிட்டுமாயின் நான் இதை தெலுங்கில் மொழிபெயர்க்கிறேன்... உங்கள் பெயருடன்.
ReplyDelete///நான் எதை கிறுக்கினாலும்
ReplyDeleteகவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...///
ம்ம்ம் என்ன பண்றது அப்படி சொல்லல என்றால் நாங்க படும் அவஸ்தை எங்களுக்கு தானே தெரியும் ஹீ ஹீ
ம்ம்ம் என்ன பண்றது அப்படி சொல்லல என்றால் நாங்க படும் அவஸ்தை எங்களுக்கு தானே தெரியும் ஹீ ஹீ>>>>
ReplyDeleteசரியா சொன்னிங்க சசி..
வித்தியாசமாக இருந்தது தொடரட்டும் தோழா
ReplyDeleteவித்தியாசமாக இருந்தது தொடரட்டும் தோழா
ReplyDelete////////
ReplyDeleteAvineni Bhaskar / అవినేని భాస్కర్ said... [Reply to comment]
நண்பரே, கவிதை மிக மிக அருமை. உங்கள் அனுமதி கிட்டுமாயின் நான் இதை தெலுங்கில் மொழிபெயர்க்கிறேன்... உங்கள் பெயருடன்.
//////////
தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்....
தமிழ் மனம் 2.....நல்லா இருக்குங்க கவிதை (மனோ அண்ணே சிரிக்கபிடாது )
ReplyDeleteநான் எதை கிறுக்கினாலும்
ReplyDeleteகவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...//
இனிமேல் திட்டுறோம்
காதலின் அறிகுறிகள் அத்துணையும் கவிதையில் காதலாய் சொல்லி அசத்தி விட்டீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteநடை, உடை, பாவனை மாறிவிட்டது
ReplyDeleteஇருந்தும் மாறாததது போல்
நடிக்க வேண்டியிருக்கிறது.//சிறப்பான வரிகள்..
அருமையான கவிதைகள்..
பாராட்டுகள்..
காதல் பிறந்த கதை...
ReplyDeleteகவிதையாய்...
இன்னும் கூட செதுக்கலாம்... வார்த்தைகளை
கவிதை மெருகேரும்...
வாழ்த்துக்கள்
கவிதை சொன்ன விதம் வித்தியாசமாக இருக்கிறது
ReplyDeleteஅருமை.
காதல் வந்தால் ......
ReplyDeleteகாதல் செய்பவர்களின் உணர்வை பிரதிபலிக்கும் கவிதை .
காதலித்துப் பார்த்தால்
ReplyDeleteகவிதை இன்னும் தெளிவாக
புரியும்!
புலவர் சா இராமாநுசம்
பத்துவருடங்கள் பின்னோக்கி செலிகிறேன் உங்கள் கவிதையை படித்த பிறகு.
ReplyDeleteகாதலிப்பவர்களின் செயல்பாடுகளை கவிதையில் வார்த்துள்ளீர்கள். சிறப்பாய் உள்ளது.
ReplyDeleteகாதலிப்ப்வர்களுக்குத் தான் தெரியும்
ReplyDeleteகாதலின் அருமை.
இமைகள் மூடினாலும் எட்டிப்பார்க்கிறது,
கண்களுக்குள் இருக்கும் கவிதை.super.
எழிலன்
இந்த காதல் வரும் காலத்தில்..ஹி.ஹி.ஹி நான் கூட இப்படி படிக்கும் காலத்தில் திக்கு முக்காடியுள்ளேன்.அருமையான கவி பாஸ்
ReplyDeleteகாதல் கவிதை அருமை...அது மல்லிகை...எப்படி மறைப்பீர்கள்....
ReplyDeleteயானையைப் பிடித்து ஒரு பானைக்குள் கூட
ReplyDeleteஅடைத்துவிட முடியும்
காதல் உணர்வை மறைத்தல் என்பது
மிக மிகக் கடினமே
அதை மிக அழகாகச் சொல்லிப்போகுது
உங்கள் படைப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க
மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா.
ReplyDeleteஆஹா, காதலாம் படும் பாட்டை அருமையா சொல்லி இருக்கீங்க.......
ReplyDeleteஓ தெய்வமே! பல பேரு ரகசியமா செய்யறதா நினைச்சி உண்மையிலேயே எல்லாருக்கும் தெரியற மாதிரி இருக்குறத, அதாவது புரிஞ்சும் புரியாம, தெரிஞ்சும் தெரியாம, அறிஞ்சும் அறியாம இருக்குறத, போட்டு இப்படி உடைச்சிட்டீங்களே? இது நியாயமா? உங்களால எத்தனை பேரு தூக்கம் போய்டுச்சு தெரியுமா? ஏன் இப்படி எல்லாத்தையும் எல்லாருக்கும் சொன்னீங்க?
ReplyDelete//யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் கூட
அடைத்துவிட முடியும்
காதல் உணர்வை மறைத்தல் என்பது
மிக மிகக் கடினமே// ரமணி அண்ணா! ஏன்?
போங்க போங்க, இளைய தலைமுறைய இப்படி காட்டி கொடுத்துட்டீங்களே!!! :)
சௌந்தர் சார்! உணர்வுகள் அழகு! காதல் அழகு! காதல் உணர்வுகள் அழகு! உங்கள் கவிதை அழகோ அழகு!
--
Lali
http://karadipommai.blogspot.com/
இமைகளை மூடினாலும் எட்டிப்பார்க்கிறது
ReplyDeleteகண்களுக்குள் இருக்கும் கனவுகள்...
அருமையான வரிகள் நண்பரே
எப்படி இப்படி கவிதை ஊற்றாய் பிறக்கிறது எனக்கும் கொஞ்சம் சொல்லு நண்பா
ReplyDeleteஇது எல்லாம் விட ஒரு proud peacock நடை வரும் கவனித்து பாருங்க. ஒரு ஆணோ பெண்ணோ நம்மை விரும்புகிறார்கள் எனும் எண்ணம் கொடுக்கும் அழகு தான் உலகிலேயே சிறந்த அழகு
ReplyDeleteSuperph....!!! Beautiful.
ReplyDeleteகவிதை நன்றாய் இருக்கிறது்
ReplyDeleteயதார்த்தத்தை கவிதைக்குள் அற்புதமாய் திணித்திருக்கிறீங்கள்
காதல்????காதல்????????
ReplyDeleteஅடச்சீ காதல் ??
ஆமா காதல்!!
வணக்கம் சகோதரா,
ReplyDeleteமறைத்து வைக்க முடியாத காதலின் உணர்வுகளை, மகத்துவம் நிறைந்த கவி வரிகள் ஊடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
சூப்பர்.
நல்லாருக்கு சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகவிதை மிகவும் அருமை,ரொம்ப ரசித்து இருமுறை படித்தேன்
ReplyDeleteஎவ்வளவு மறைத்தும் மறைக்கமுடியவில்லை
எனக்குள் வந்துவிட்ட காதலை//
இப்போதான் உங்களுக்கு வருதா? #டவுட்டு...
இது வயதுப் பசி உள்ளவர்களுக்கு...
ReplyDeleteவயத்து பசி உள்ளவர்களுக்கு?
காதல் கவிதை நல்லா இருக்கு.
ReplyDeleteகாதல் வந்து விட்டாலே.....
ReplyDeleteஎல்லாம் இப்படித்தான் நடக்கும் என்பதை தெளிவாக சொல்லி யுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் 16
ReplyDeleteஒளியை பிடித்து தண்ணிக்குள் மறைத்து வைப்பது போல் தான் காதல் .
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே
டைட்டில் எவ்வளவு முயற்சித்தும் மறைக்க முடியவில்லை மறக்கவும் முடியவைல்லை என்றால் இன்னும் கலக்கலாக இருந்திருக்குமோ?
ReplyDeleteகாதல் படுத்தும் பாடைக் கவிதையாக்கி விட்டீர்கள்!
ReplyDeleteகாதல் இலை என்றால் நல்ல கவிதைக்கு வழி தெரியாது.
ReplyDeleteநீங்க கிருக்குறதும் ஒருநாளைக்கு உச்சக் கவிதையா வருமுங்கோ .
அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.................
இன்றும் ஒரு வித்தியாசமான ஆக்கம் என் தளத்தில்
உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....
கவிதை மிக அருமை. தொடருட்டும் உங்கள் கவிதை சேவை.
ReplyDeleteஉணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteசகா கவிதை அருமை. . .நீங்களும் களமிரங்கீடிங்களா?
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteகாதல் வந்தால் .... அருமை நண்பா
ReplyDeleteஅருமை.
ReplyDelete''...நான் எதை கிறுக்கினாலும்
ReplyDeleteகவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...///
இப்படியான நாடகங்களும் நடக்கிறது தானே சௌந்தர்.......
ரொம்ப நல்லா இருக்குனா :)
ReplyDeleteகாதல சொல்லிட்டீங்களா ?