கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 October, 2013

ஆரம்பம் சினிமா விமர்சனம் / aarambam tamil movies review


ஒரு நடிகர் தன்னுடைய ரசிகர்களை விட்டுவிடாமல் அவர்களின் ரசனைக்கு ஏற்பவும், பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரகூடியதாகவும், ‌மேலும் புதுவித பரிமாணத்தில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்... அப்போதுதான் தமிழ் சினிமா அந்த நடிகருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்... இந்த மூன்று நிலையிலும் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த ஆரம்பம் படம் மூலம் நிறுபித்திருக்கிறார் அஜீத்.

மும்பையில் ரானாவும்,  (தெலுங்கு நடிகர்) அஜீத்தும் சிறந்த நண்பர்கள்... இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை காவல் துறையில் பாம் ஸ்கோடாக பணியாற்றுகிறார்கள். ஒரு தீவிரவாத கும்பல் ஒரு கட்டிடத்தில் வெளிநாட்டவரை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்ட அதை அஜீத்தும் ரானாவும் மிகவும் திறமையாக முறியடித்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.


ஆனால் இந்த தீவிரவாதிகளின் வேட்டையில் ரானா இறந்துவிடுகிறார். இதை அஜீத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகே அஜீத்துக்கு தோன்றுகிறது. குண்டு துளைக்காத புல்லட் புருப் ஜாக்கெட் அணிந்தும் எப்படி அவரை குண்டு துளைத்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போதுதான் தெரிகிறது. கமிஷ்னர் முதல் உள்துறை அமைச்சர் வரை இந்த உடைத்தயாரிப்பில் பலகோடி சுருட்டியது அம்பலமாகிறது...

காவல்துறையும், ராணுவமும் தன் உயிரை பணயம் வைத்து நாட்டைக்காக்கும் வீரர்களின் உயிரில் விளையாடிய அத்தனைப்போரையும் பழிவாங்க கிளம்பும்... அஜீத் அவர்களை விரட்டி விரட்டி பழிவாங்கியும், அவர்கள் தவறாக சம்பாதித்த பணத்தை மீட்டு நாட்டுக்கு திருப்பி அளித்தும்.. என தன் அதிரடியான ஆட்டத்தின் மூலம் என்னுடைய வெற்றிக்கு எப்போதும் ஆரம்பம் தான் என்று மீண்டும் நிறுபித்திருக்கிறார் விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத்.

படம் முதலில் மும்பையில் ஆரம்பிக்கிறது... மும்பையில் சில பிரபங்களின் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வெடிகுண்டு வைப்பதில் ஆரம்பிக்கும் அஜீத்... இடைவேளை வரை செய்யும் வில்லத்தனம் ரசிகர்களை ஆர்பரிக்க வைக்கிறது...


மும்பைக்கு ஒரு இன்டர்வியூக்கு வரும் ஆர்யாவை தன்னுடைய உதவிக்கு வைத்துக்கொள்ள...  அஜீத் செய்யும் டிராமா சூப்பர்... ஆர்யாவின் காதலியான தாப்ஸியை கொன்று விடுவதாக மிரட்டி மிரட்டியே அவரிடமிருந்து தொழிநுட்ப தகவல் சார்ந்த வேலைகளை வாங்கிக்கொள்கிறார் அஜீத். 


தன்னுடைய காதலியான தாப்ஸியை காப்பாற்ற ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலை ‌ஹேக் செய்வது, வங்கி கணக்குகளை முடக்குவது என அஜீத் சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கிறார் ஆர்யா. மும்பையில் பல இடங்களில் குண்டு வைத்தது அஜீத்தான் என்று தெரியவருகிறபோதும் மேலும் அதிர்ச்சியாகிறார்.

போலீஸிடம் அஜீத்தை சிக்கவைக்கும் ஆர்யா.. அதன் பிறகு அஜீத் யார் எதற்காக இப்படி செய்கிறார் என்ற உண்மை தெரியவர... அதன்பின் இருவரும் சேர்ந்து அடித்து ஆடியிருக்கிறார்கள். 


இருவரும் சேர்ந்து நாட்டுக்கு எதிராக ஊழலையும், பணத்துக்காக தீவிரவாதிகளை விடுவிக்கவும் செய்யும் அரசியல்வாதிகளை எப்படி பழிவாங்கினார்கள், அந்த அரசியல்வாதிகள் சுருட்டிய ஊழல் பணத்தை எப்படி எடுத்து மீண்டும் அரசாங்கத்துக்கு திருப்பிகொடுத்தார்கள் என பரபரப்பு சண்டைக்காட்சிகள்... அதிரடி திருப்பங்களோடு பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு சிறந்தப்படம் தான். ஒரு கம்யூட்டர் ஜீனியர்சான இவர்... தன்னுடைய துடிப்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது மிகவும் குண்டாக இருக்கும் ஆர்யா... டாப்சியை காதலிப்பதற்காக பல்வேறு முயற்சிக்குப்பிறகு தன்னுடைய உடலை நார்மல் லெவலுக்கு கொண்டுவருகிறார். குண்டு கதாபாத்திரத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.


ஆர்யாவுக்கு ஜோடியாக தாப்ஸி. எப்படியாவது சிறந்த தொகுப்பாளினியாக ஆகவேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய துருதுரு நடிப்பில் அசத்தியிருக்கிறார். அஜீத்திடம் தான் மாட்டியிருப்பது கூட தெரியாமல் இவர் செய்யும் வெகுளித்தனம் சூப்பர். அதுதெரியவரும்போதும் காட்டும் முகபாவனைகளும் அழகு.

என்னடா இன்னும் நயன்தாரவை பற்றி சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா.. அஜீத்தின் நண்பரான ரானாவின் தங்கைதான் நயன்தாரா... தன்னுடைய அண்ணனின் மரணத்துக்கு பழிவாங்க துடிக்கும் அஜீத்துடன் கைகோர்க்கிறார்... (காதல் இல்லை.. டூயட்டும் இல்லை)

தயன்தாரா அஜீத்துடன் சேர்ந்து செய்யும் அத்தனை காட்சிகளும் அழகு... சென்னை ஏர்போட்டில் இருந்து மும்பைவரை ஆர்யாவுடன் வந்து பின் வில்லன்களான அஜீத்திடம் மாட்டுவது போலும் பின்பு அந்த கூட்டத்தை சார்ந்தவர் என்று ஆர்யாவுக்கு தெரியவரவும்... நல்லதொரு டுவீஸ்ட்... சில சண்டைகாட்சிகள் துப்பாக்கி சுடுதல் என பில்லாவுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய விஜயசாந்தியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
 

மும்பை போலீஸ் ஆபிஷராக கிஷோர் கச்சித நடிப்பு... இவருக்கும் இன்னும் நல்ல வெயி்டான காட்சிகள் ஒதுக்கியிருக்கலாம்... இன்னும் நிறைய நடிகர் பட்டாளம் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்... டிரம்ஸ் வைத்துக்கொண்டும் அஜீத் ஆடும் ஆட்டத்தில் தியோட்டர் கதிகலங்குகிறது. (ஆனால் பாடல்தான் புரியவில்லை..).

ஆர்யாவுக்கும் தாப்ஸிக்கு ஒரு டூயட்.. சூப்பர்... அந்த பாடலில் இருவருக்கும் சிறகு முளைத்ததுபோல் கிராப்பிக்ஸ் செய்திருக்கும் காட்சி அழகு. அஜீத் நயன்தாரா ரானா ஒரு ஹோலி பாடல் வண்ணமயத்துடன்....

லாஜிக்கோடு பார்த்தால் பல்வேறு ஓட்டைகள் படத்தில் இருக்கிறது.  கடைசி அரைமணிநேரப்படம் காட்சிகள் எப்படியும் ஒட்டாமல் வருகிறது... ஆனால் முடித்திருக்கும் விதத்தில் அந்த லாஜிக் ஓட்டைகளை மறக்கடித்துவிட்டு ஒரு ரசிகனின் படமாக வந்திருக்கிறது. (இது ஒரு கமர்சியல் படம் மட்டுமே... கவலை மறந்து ஒரு முறை பார்க்கலாம்)

அதிரடி சண்டைக்காட்சிகள்.. பரபரப்பான கார், பைக் சேசிங், சில நாட்டுப்பற்று வசனங்கள்... பொய்த்தான் பயப்படும்.. உண்மை பயப்படாது.. போன்ற பஞ்ச் வசனங்கள்... என படம் முழுக்க தன்னுடைய பாணியில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

24 comments:

  1. Replies
    1. தல ரசிகர்கள் கொண்டாடும் படம்....

      Delete
  2. தல தீபாவளி தான்...!

    இதுவும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. புது பதிவா வருகிறேன் தனபாலன்....

      Delete
  3. Replies
    1. நன்றி...

      தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்...

      Delete
  4. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள் எல்லோருக்கும் தல தீபாவளிதான்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ரூபன்...

      தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  5. நன்றி தோழரே... அன்புடன் கைநாட்டு கருப்பு.

    ReplyDelete
  6. தல ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்தான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.....

      இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படம்....

      Delete
  7. அப்ப படம் பார்க்க போலாமா!?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்க்கலாம்....

      நல்லதொரு பொழுதுபோக்குத்திரைப்படம்

      Delete
  8. ரசிகர் தற்கொலை என்ற செய்தியைப் பார்த்து
    படம் இன்னுமொரு பில்லா 2 என்று நினைத்து விட்டேன்.
    உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டது.
    நன்றி.
    நாளை தான் இங்கு படம் ரிலீஸ் ஆகிறது.

    ReplyDelete
    Replies
    1. நாளைதான் ரிலீஸ்ஸா....

      இன்று உலகம் முழுவதும் அப்படின்னு போட்டிருக்காங்க...

      நல்லது படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

      Delete
    2. லண்டனில் இன்றே போட்டு விட்டார்கள்.
      நான் இருப்பது Luton எனும் இடத்தில். நாளை தான் இங்கு ரிலீஸ்.
      ஆகட்டும், உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  9. Replies
    1. தங்கள் வருகைக்கும் நன்றி...

      தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...

      Delete
  10. கொண்டாட்டம்தான்.

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி...

      தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  11. பாம் ஸ்குவாடாக இருந்து வெளிநட்டவரை காப்பாற்றுவது வரை ஓகே.அதன் பின் படம் இழுத்துக்கொண்டு செல்லும் போலிருக்கிறதே லாஜிக் அற்ற போக்கில்/

    ReplyDelete
  12. தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இனிய தீபவாளி வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...