நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்...
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்...
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஒன்று அவருக்கு ஒரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனைக்கு விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.
காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கம்ப்யூட்டர், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.
நகோலாவை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீ்ம்ஸ் என்ற பெயரில் நகோலா இயக்கிய படத்தின் 14 நிமிட டிரெய்லர்தான் யூடியூபில் வெளியிடப்பட்டது. இதுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதில் நபிகள் நாயகத்தை பெண் பித்தர் போலவும், மத மோசடியாளர் என்பதாகும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் நகோலா.
கடந்த ஜூலை மாதம் இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியிடரபப்பட்டது. ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகுதான் பிரச்சினை பெரிதானது.
இந்த பிரச்சசனைக்குறித்து அவரிடம் விசாரிக்கப்படுமா? உலக முஸ்லீம்களின் நம்பிக்கையை கேலி செய்த அவரை எவ்வாறு அமெரிக்க நடத்தும் என்று கேள்விகள் எழுகிறது. இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக அமெரிக்கா நடந்துக்கொண்டால் அதன் விளைவு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்பதை அமெரிக்கா உணரவேண்டும். உலக அளவில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் நகோலாவை வேறுஒரு காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
அவரை இந்த பிரச்சனைக்காகவும் கைது செய்து, அதுகுறித்து இஸ்லாமிய மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்.
தங்கள் கருத்து சரிதான்...
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteஇப்படிக்கு புரியாமலே கமண்ட் போடுவோர் சங்கம்
Deleteஅறிந்து கொண்டேன்... நன்றி...
ReplyDeleteகுப்புற விழுந்துவிட்டு மீசையில் மண் ஒட்டாதது போல காட்டிகொள்வது இதுதான் போல...
ReplyDeleteஇப்பதான் தெரிந்துகொண்டேன் நன்றி, நண்பா
ReplyDeleteஉண்மையான கருத்து...
ReplyDeleteஇந்தியாவில் அரசியல்வாதிகளால் இயங்கும் ஆட்சி முறை தவறுகள் ஓரளவுக்கு நீதிமன்ற சட்டங்களால் காக்கப்படுகின்றன.அமெரிக்காவின் ஆட்சி முறையை நீதித்துறை சட்ட வ்ல்லுனர்களே தீர்மானிக்கின்றார்கள்.எனவே முந்தைய சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டது சரியானதே.எவருக்கும் கருத்து வெளியிடும் சட்ட உரிமை சட்டம் பேசலியை பாதுகாக்கிறது என நினைக்கின்றேன்.எனவே அமெரிக்கா காப்பாற்ற் முயற்சிக்கிறது என்ற தலைப்பே தவறு.
ReplyDelete//கருத்து வெளியிடும் சட்ட உரிமை சட்டம் பேசலியை பாதுகாக்கிறது//
Deleteஇந்த சட்டம் அமெரிக்கனை மட்டும்தான் காப்பாற்றுமா? மற்ற நாட்டுக்காரனை கொல்லுமா?
ஈராக்கில் அமெரிக்க ஜனாதிபதியின் படத்தை தரையில் வரைந்ததற்காய் ஈராக் ஓவியரை குடும்பத்துடன் ஏவுகனையால் தாக்கி கொன்றது அமெரிக்க படை!! அப்போது எங்கே போனது இந்த கத்திரிக்காய் கருத்து கலை சுதந்திரம்!
@ ராஜ நடராஜன்..
Deleteதங்கள் கருத்து உண்மைதான் ஆனால் உள்நாட்டின் சட்டத்தை மீறியதற்க்கு கைது என்றால்...
உலக சட்டத்தையே மீறியதற்க்கு.?
அமெரிக்கா இன்று உலக நாடுகளின் தலைவர் போல் செயல்படுகிறது.. மற்றநாட்டில் அல்லது மற்ற நாட்டுக்காரர் தவறு இழைக்கும் போது உடனடியாக மூக்கை நுழைக்கும் அமெரிக்கா தன்நாட்டுக்காரர் என்பதால் பார்த்துக்கொண்டிருப்பது ஏன்..?
அமெரிக்கா சார்ந்த மதத்தலைவரை பற்றி அவதூராக பேசியிருந்தார் இந்நேரம் அமெரிக்கா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நீங்கள் நிழனக்கிறீர்களா..?
தங்கள் கருத்துக்கு நன்றி..!
ஒரு தனி மனித சுதந்திரம் அடுத்த தனிமனிதனையோ அடுத்த சமூகத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. அது தான் உண்மையான சுதந்திரம்...
உங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteம் ...
ReplyDeleteநியாயமான கருத்து!இவ்வார சென்னை பதிப்பு என் விகட அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://en.vikatan.com/article.php?aid=24299&sid=689&mid=31
தகவலுக்கு மிக்க நன்றி ஸாதிகா...!
Delete