கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 September, 2012

மரணத்தை அருகில் வைத்துள்ளீர்களா.! இதோ மரணத்தை வெல்லும் வழி...!


இந்த உலகம் விசித்திரமானது. இங்கு வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலான ஒன்று. அதை வெற்றிகரமாக வாழ்ந்து முடித்து இந்த இன்னுலகை விட்டு நாம் மறைகிறோம். மனித வாழ்வில் பலர் தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தில் சந்திக்கும் சோதனைகள், வேதனைகள் மிகமிக அதிகம். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் எப்போது இறப்பான் என்று அவனுக்கு தெரியாது. அப்படி தெரியாத காரணத்தினாலே மனித குலம் ஒவ்வொறு நொடியும் மரணபயத்தோடே வாழ்கிறது.

ஆனால் மனிதர்களுள் பலபேர் தன்னுடைய மரணத்தை தன்னுடனே வைத்திருக்கிறார்கள். வேகம், பயமின்மை, அஜாக்கிரதை, முட்டாள்தனம், அவசரம், பாதுகாப்பின்மை, சரியானமுறையில் கையாலுதல் இல்லாமை, என பல்வேறு வகையில் ஒருவன் மரணத்தை சந்திக்கிறான். ஆக மரணம் என்பது எதோ ஒரு வகையில் நம்முடனே நாம் வைத்துக் கொள்கிறோம்.

மரணம் பயம் இல்லாத வரையில் நாம் நம்போக்கில் இருப்போம். மரணபயம் வந்துவிட்டால் அப்போதுதான் நம்முடைய மனது பயத்தை ஆட்கொள்கிறது.


அதுகுறித்த ஒரு ஜென்கதை....

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார்.  விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.

திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த ஜென் துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு புத்தரைக் கண்டார்.

இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் புத்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.

புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார்.  ஆனால் புத்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே புத்தரிடம் கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.

அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...

25 comments:

  1. #நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். #

    இதுதான் டாப்பு...

    ReplyDelete
  2. மரணத்தை வெல்ல முடியாது. வேண்டுமானால் கொஞ்ச நாள் தள்ளி போடலாம். ஜென் கதை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தள்ளிப்போடுவது என்பது நமது மதியாலும், நமது வாய்மையாலும் மட்டுமே சாத்தியம் ஆகும்...

      மரணத்தை ஆணவமிக்க யாரும் தள்ளிப்போடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...

      மனித நேயத்தோடு வாழ்வோம்...

      Delete
  3. நல்லதொரு ஜென் கதையோடு, கருத்துக்கள் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே...

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  4. எக்ஸலண்ட். அருமையான ஜென் கதையின் மூலம் மரண பயத்தை விலக்கும் கருத்தைச் சொன்ன விதம் அழகு. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா...

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

      Delete
  5. Replies
    1. வணக்கம் பாலா...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. அருமையான சிந்திக்க தூண்டிய கதை நண்பரே

    ReplyDelete
  7. நல்லதொரு பகிர்வு சார்......
    மரணம் மட்டுமே என்றுமே மரணிக்காத உண்மை எல்லோரும் மரணத்தைச் சுமந்தவர்கள்தான் மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த உலகில் அநியாயங்களும் அட்டூளியங்களும்தான் மிஞ்சியிருக்கும்

    பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. உண“மைதான் மரணம் மட்டும் இல்லையென்றால் இங்கு எல்லோரும் வீரர் சூரர் தான்...

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  8. இதுவரை கேள்விப்படாத அருமையான கதை
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மனித குலம் மரணபயத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தற்போது யாரும் மரணத்தை கண்டு பயப்படுவதுபோல் தெரியவில்லை நண்பரே...

      அதனால் தான் வன்முறை தலைவிரிக்கிறது

      Delete
  10. அருமையான கதை மூலம் கருத்தைஅ ஆழமாகச் ச்சொல்லி விட்டீர்கள்!

    ReplyDelete
  11. #நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். #

    அதனால் தான் என்னுடன் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்

    ReplyDelete
  12. #நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். #

    ReplyDelete
  13. நல்ல கதை. உங்களுக்கு சொன்னது யார்??!!

    ReplyDelete
  14. அன்பின் சௌந்தர் - ஜென் கதை அருமை - மரண பயம் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. கண்டிப்பாக இணைந்துக்கொள்கிறேன் தமிழ்உலகம்...

    தங்கள் அழைப்புக்குமிக்க நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...