கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 June, 2013

இதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...?


"எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும் . அதுதான் என்னுடைய ஃபார்முலா" என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் .

"புரியவில்லையே" என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர் .

கடவுள் புன்னகைத்தார் .

"நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ."

" ஆமாம் ".

" உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ".

"ஆமாம், ஆமாம் " என்ற நாரதர்,

" சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? "

கடவுள் பதில் சொன்னார் .

" இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ".

"நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ?"

கடவுள் கலகலவென சிரித்தார் .

"அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் ".
(முகநூலில் படித்தது...)

****************************************
இந்த நிலை இன்னும் வேண்டுமா...
காடுகளை அழிப்பதை தடுப்போம்...
மரம் வளர்ப்போம்....
மனிதம் வளர்ப்போம்....!

28 June, 2013

ஒன்றுக்கு பதில் பத்து..! வடிவேலு போட்ட வில்லங்க ஒப்பந்தம்...


சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.

6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். 

அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.

ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.

27 June, 2013

இவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...!


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. 
 
அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்' என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார். 
 
மக்கள் திருதிருவென விழித்தனர்.உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.
 
பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.
****************************

 
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். 
 
ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்."
 
"என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?'' என்றார்.""நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?'' என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.
************************
அறிஞர் வாழ்வில் சுவையான சம்பவம் என்ற நூலிலிருந்து..!

26 June, 2013

ஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்..!



இன்றைய நாளிதழில் வெளிவந்த இந்த படத்தைப்பார்த்போது உண்மையில் சில ஆண்கள் மீது கோவம் வருகிறது. 
 
வயதான இந்த தருணத்தில் அவர்களை பாராமரிக்க, உணவளிக்ககூட அவர்களால் முடியவில்லையென்றால் இந்த உலகில் அவர்கள் வாழ தகுயற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
 
அரசும் இதுபோன்ற முதி‌யோர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அனைவருக்கும் நான் அம்மா என்று சொல்லிக்கொண்டு இலவச திட்டங்களை மட்டுமே மனதில் வைத்து அதை கண்ணோட்டத்தோடு இருந்துவிடாமல் இதுபோன்ற சமூக அவலங்களை கலைந்தால்தான் ஒரு நாடு நன்றாக இருக்கும்.
 
அரசு சார்பில் சொல்லாம் நாங்கள் இதை செய்கிறோம்..  அதை செய்கிறோம் என்று உண்மையில் அந்த பலன் அனைவரையும் சென்றடைந்துள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இவர்களுக்கு எல்லாம் கிடைத்தால் பிறகு ஏன் இப்படி

அம்மா அவர்கள்இதை கவனிப்பார்களா..

25 June, 2013

மீண்டும் களமிறங்கும் ஜோதிகா...! பச்சைக்கொடி காட்டிய சூர்யா..!



திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதிலேயே என் முழு நேரத்தையும் செலவிடுவேன்' - திருமணமாகப் போகும் எல்லா நடிகைகளும் இயக்குநர் உதவி இல்லாமல் சொந்தமாகச் சொல்லும் டயலாக் இது.

'ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அப்படித்தான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள், 2 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு படையெடுப்பார்கள். ஸ்ரீதேவி முதல் சினேகா வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

ஆனால், ரீ எண்ட்ரியில் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அக்கா, அண்ணி வேடங்கள் தான். சிலருக்கு அம்மா வேடத்துக்கான வாய்ப்புகள் கூட கதவைத் தட்டும். அதைப் பார்த்து பயந்த நடிகைகள், பின்னங்கால் பிடரியில்பட வீட்டுக்கே ஓடிவிடுவார்கள்.

இதுவரைக்கும் இருக்கிற நல்ல(?) பெயரை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைப்பார்கள். நாம் கேட்டால் மட்டும், 'நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்றேன்' என்பார்கள். தமிழ்நாடே தூக்கிவைத்துக் கொண்டாடிய சிம்ரனுக்கு நடந்த கதை ஊர்உலகம் அறிந்த ரகசியம். 
 

இதனால்தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் ஜோ. சூர்யாவுக்காக ஒரே ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தார்.

தற்போது திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிவதைப் பார்த்து, ஜோதிகாவுக்கும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். இன்றைக்கு டி.வி., பத்திரிகைகள் எதைப் பார்த்தாலும் எல்லா விளம்பரங்களிலும் பிரசன்னா - சினேகா ஜோடியாக இருப்பதைப் பார்த்து, 'நாமும் இப்படி நடித்திருக்கலாமே' என்று சூர்யாவிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

'அதுக்கென்ன? இனிமேல் நடித்தால் போச்சு' என சூர்யாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தவிர, சினிமாவிலும் நடிக்கும் ஆசை இருப்பதை ஜோ தயக்கத்துடன் வெளிப்படுத்த, யோசித்த சூர்யா, 'நல்ல கேரக்டர்கள் என்றால் பார்க்கலாம்' என சொல்லியிருக்கிறாராம்.

'ஹரிதாஸ்' சினேகா, 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி போல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் கிடைத்தால் சூர்யா - ஜோ இருவருக்கும் சம்மதமாம். 
 
குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் விரைவில் ஜோதிகாவை திரையில் பார்க்கலாம் என்கிறார்கள்.

உணவில் கூடவா இப்படி செய்வார்கள்..! இதை நீங்க சாப்பிடுவீங்களா...!

அட.. இங்க பாருங்க மதிய உணவை எவ்வளவு அழகா வடிவமைச்சியிருக்காங்க...

இப்படி கொடுத்தனுப்பினா கண்டிப்பாக பிள்ளைகள் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க... ஆர்வமும் வரும்... நீங்களும் கொஞ்சம் முயற்றி செய்யுங்கள்...






















































 

பார்க்கும் போதே அப்படியே ரசித்து சாப்பிடனும்போல இருக்கிறது...
உணவு சுவையாகவும் அதேசமயம் அழகாவும் பரிமாரப்பட்டால்
ரசித்து உண்ணலாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...