கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 July, 2011

இலங்கையின் அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரா?


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் நேற்றுமுன்தினம் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜெயலலிதா இலங்கையின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதேவேளை ஜெயலலிதா, ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் மறுவாழ்வு பெறுவதை உங்கள் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற தகவலை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.

பிரசாத் கரியவாசம், முதல்வரின் இந்தத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜெயலலிதாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய பிரசாத் காரியவசத்தை, சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், "எதற்காக இந்த திடீர் சந்திப்பு" என்று கேட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பதிலளித்த தூதர் கரியவாசம், "முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளேன். முதல்வருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ என்னைப் பணித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ்CNN)

51 comments:

  1. தமிழ்மணம் முதல் ஓட்டு..

    ReplyDelete
  2. //!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
    தமிழ்மணம் முதல் ஓட்டு..//

    மாப்ள காலையிலேயே மப்பா தமிழ்மணமே காணோம் இதுல என்ன ஓட்டு போட்ட

    ReplyDelete
  3. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    vadaiyaa?
    //////////

    எப்படி தெரியுது...
    வடை வாங்கிக்கோ...

    ReplyDelete
  4. ///////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    தமிழ்மணம் முதல் ஓட்டு..
    /////////

    இப்ப அந்த ஓட்டுப்பட்டையே காணுமே...

    ReplyDelete
  5. //////
    சசிகுமார் said...

    //!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
    தமிழ்மணம் முதல் ஓட்டு..//

    மாப்ள காலையிலேயே மப்பா தமிழ்மணமே காணோம் இதுல என்ன ஓட்டு போட்ட///////

    தமிழ்மண ஓட்டுப்பட்டை வந்தது சசி..
    நானும் அதில் மூலம் தான் சப்மீட் செய்தேன்....
    தற்போது வரவில்லை...

    பார்ப்போம் மீண்டும் வருகிறதா என்று...

    ReplyDelete
  6. எதோ ,நல்லதே நடந்தால் சரி தான் !!

    ReplyDelete
  7. //
    ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது//

    லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிட்டாங்களோ :))

    ReplyDelete
  8. ஜெயலலிதா புத்திசாலி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  9. ithaye kavithaiyaa sollidavendiyathuthane?!

    :-)

    ReplyDelete
  10. நல்லது நடந்தால் சரி
    அதைத்தானே நாம எல்லாம் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  11. பொருத்திருந்து பார்ப்போம்... மீனவர்களுக்கும் தமிழர்களுக்கும் நல்லது நடந்தால் சரி....

    ReplyDelete
  12. //ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ்CNN)//

    ஆஹா யோசிக்க வேண்டிய விசயம் தான் நண்பரே..!

    ReplyDelete
  13. போய்ட்டு வரட்டும் - தப்பில்லை..
    ஆனால் தமிழர்களுக்கு அதனால் நன்மை
    கிடைத்தால் சரி..

    அங்கு போய்ட்டு வந்து அம்மா
    அங்கே பயங்கர அநியாயம் நடந்திருக்கு னு சொன்னா உலகமே திரும்பி பார்க்குமே ?

    பார்ப்போம்

    http://sivaayasivaa.blogspot.com/

    ReplyDelete
  14. என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை ....

    ReplyDelete
  15. மக்கா தலைகீழா நின்னாலும் அம்மையார் அங்கே போக மாட்டார் ஹி ஹி....!!!

    ReplyDelete
  16. ஹி ஹி முதல் முதல் தமிழ்மணம் ஓட்டு உமக்குதான்யா போட்டுருக்கேன் வாழ்த்துக்கள் மக்கா....

    ReplyDelete
  17. இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியை இரு மாநில அரசுகளும் வைக்க வேண்டிய கட்டாயம் தான் இப்போதைய சூழல்.

    ReplyDelete
  18. //////
    கந்தசாமி. said... [Reply to comment]

    எதோ ,நல்லதே நடந்தால் சரி தான் !!
    /////////


    இந்த நல்லதைதான் இந்த உலகமே எதிர்ப்பார்க்கிறது...

    ReplyDelete
  19. ////
    ஆமினா said...

    //
    ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில். தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது//

    லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிட்டாங்களோ :))////////


    ரைட்டு...

    ReplyDelete
  20. தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  21. ///////
    சிவா சின்னப்பொடி said... [Reply to comment]

    ஜெயலலிதா புத்திசாலி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்
    ///////

    பார்ப்போம்...

    ReplyDelete
  22. ///////
    ஷர்புதீன் said...

    ithaye kavithaiyaa sollidavendiyathuthane?!

    :-)///////

    எல்லாவற்றையும் கவிதையில் கொண்டுவரலாம்....

    அப்புறம் நம்ம ஜனங்க இந்த பக்கம் வராம ஓடிட்டா....

    ReplyDelete
  23. ///////
    மகேந்திரன் said... [Reply to comment]

    நல்லது நடந்தால் சரி
    அதைத்தானே நாம எல்லாம் எதிர்பார்க்கிறோம்.
    /////////

    ஆமாங்க....

    ReplyDelete
  24. நியூஸ் கொடுத்த தற்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  25. //////
    மாய உலகம் said... [Reply to comment]

    பொருத்திருந்து பார்ப்போம்... மீனவர்களுக்கும் தமிழர்களுக்கும் நல்லது நடந்தால் சரி....
    ////////


    நன்றி...

    ReplyDelete
  26. ////
    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    போய்ட்டு வரட்டும் - தப்பில்லை..
    ஆனால் தமிழர்களுக்கு அதனால் நன்மை
    கிடைத்தால் சரி..

    அங்கு போய்ட்டு வந்து அம்மா
    அங்கே பயங்கர அநியாயம் நடந்திருக்கு னு சொன்னா உலகமே திரும்பி பார்க்குமே ?

    பார்ப்போம்//////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  27. //////
    koodal bala said...

    என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை ....//////

    பொருத்திருந்து பார்ப்போம்...

    ReplyDelete
  28. நல்லது நடந்தால் மகிழ்ச்சி!!

    ReplyDelete
  29. படிச்சாச்சு...

    ReplyDelete
  30. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    மக்கா தலைகீழா நின்னாலும் அம்மையார் அங்கே போக மாட்டார் ஹி ஹி....!!!
    ////

    உண்மைதாங்க...

    ReplyDelete
  31. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ஹி ஹி முதல் முதல் தமிழ்மணம் ஓட்டு உமக்குதான்யா போட்டுருக்கேன் வாழ்த்துக்கள் மக்கா....
    ////////


    நீங்கதாங்க உண்மையான குடிமகன்...

    ReplyDelete
  32. //////
    சத்யா said... [Reply to comment]

    இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியை இரு மாநில அரசுகளும் வைக்க வேண்டிய கட்டாயம் தான் இப்போதைய சூழல்.
    /////////



    சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  33. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்,அம்மா!இனி என்ன செய்கிறார் பார்ப்போம்.

    ReplyDelete
  34. அரசியல்ல எதெல்லாம் சகயம்ப்பா..இன்னிக்கு கடிச்சுப்பம் நாளைக்கு கூடிப்பம்........
    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  35. நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete
  36. இந்த விளையாட்டு எப்ப தொடங்குது என்று பார்ப்போம்!

    ReplyDelete
  37. அம்மா அவர்கள் அழைப்பை ஏற்றாலும், அங்கே செல்ல மாட்டார்கள். . .

    ReplyDelete
  38. அம்மா என்ன செய்யப் போறாங்கன்னு பாக்கலாம். . .

    ReplyDelete
  39. வணக்கம் சௌந்தர், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

    ஒரு உள் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டும், அரசாங்கத்தின் பக்கம் இலங்கைத் தமிழ் மக்களின் ஆதரவினைத் திரட்டும் நோக்கிலும் தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது என நினைக்கிறேன்.
    என்னமோ நல்லது நடந்தால் சரி.

    ReplyDelete
  40. என்னாத்த கதைச்சான்களோ...ம்ம்

    ReplyDelete
  41. பொருத்திருந்து பார்ப்போம்... மீனவர்களுக்கும் தமிழர்களுக்கும் நல்லது நடந்தால் சரி....

    ReplyDelete
  42. தமிழ் நாடு அரசு தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞைகள் எதுவுமில்லை!இது,உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரசாரம் மட்டுமே!!!!!படுதோல்வி அடைந்து விட்டதால் இனியும் ஜெயலலிதாவின் வருகை விரும்பப்படுமா?என்பது கேள்விக்குறியே!

    ReplyDelete
  43. 50!!!!!!!!!!Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    நான் ஓட்டு போட்டேன் ..///ஒண்ணு தானே?

    ReplyDelete
  44. //இந்த விளையாட்டு எப்ப தொடங்குது என்று பார்ப்போம்!//

    :))Repeat!!

    ஜெயலலிதா என்கிறவர் ஒரு காலத்தில் ஈழம் குறித்து பேசிய பேச்சுக்களையும், இப்போ அப்படியே உல்டாவா பேசுறதையும் பார்த்தும், கேட்டும் இவர் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொள்வார் என்று நம்பவேண்டிய விதியோ!!

    ReplyDelete
  45. ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...