கற்பனைகள் செய்தால்கூட
காணமுடியாத கொடும்காட்சிகள்...
பாலினம் பாராது நிர்வாண கோலத்தில்
உயிர் மூச்சை நிறுத்திய ஆணவத்தனம்...
பாலினம் பாராது நிர்வாண கோலத்தில்
உயிர் மூச்சை நிறுத்திய ஆணவத்தனம்...
விலங்கினங்களை வதைத்தாலே
வீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு
ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்
தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....
உயிர்களை அங்கே உறுக்குலைத்தபோது
அறிக்கைகளும் வருத்தங்கள் மட்டுமே
இங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டன
இனி என்னச்செய்யப் போகிறோம்...
கிளைகளை வெட்டும் போதே
கேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?
கேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?
உயிர்களை வதைக்கும் போது
வருத்தப்பட்டவர்களே... தற்போதைக்கு
அந்த ஆத்மாக்களையாவது
அந்த ஆத்மாக்களையாவது
சாந்திப்படுத்துவோம் வாருங்கள்...
முத்துக்குமரன் விட்டுப்போன
நெருப்பு இன்னும் நீருப்பூக்கவில்லை
என நிருபித்து
தியாக சுடரேந்துவோம்...
நெருப்பு இன்னும் நீருப்பூக்கவில்லை
என நிருபித்து
தியாக சுடரேந்துவோம்...
மெரீனாவில் கால் நனைக்கும்
கடல்அலைகளிடம் சொல்லிவிடுவோம்....
எந்திய தீபத்தில் கிளம்பும் சுடரில்
தமிழ் ஈழம் ஒருநாள் மலரும் என்று....
நாம் ஏந்திநிற்க்கும் தீபங்கள்
ஒரு நாள் தீப்பிழம்பாய்
சிங்கள வெறிப்பிடித்தவர்களை
தீக்கிறையாக்கும் என்ற நம்பிக்கையுடன்...
ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம்,
இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட
543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும்
ஒன்று கூடுவோம்...
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.
கவிதை வீதியில் இருந்து இதைப்படிப்பார் கண்டிப்பாக வர
முயற்ச்சிப்பீர்கள் என நம்புகிறேன்...
ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...
கவிதை வீதியில் இருந்து இதைப்படிப்பார் கண்டிப்பாக வர
முயற்ச்சிப்பீர்கள் என நம்புகிறேன்...
ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...
மொதல்ல நான்...
ReplyDelete//கிளைகளை வெட்டும் போதே
ReplyDeleteகேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?//
உண்மைதான்....
உங்கள் கவி அருமை...
ReplyDeleteஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...>>>>>>
ReplyDeleteகண்டிப்பாக ஒரு நாள் விடியும்
நிச்சயம் ஈனத்தமிழர்கள் அல்ல நாம்.
ReplyDeleteநிச்சயம் கலந்து கொள்வோன்.
ReplyDeleteதமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்
பயனுள்ள கவிதை, செய்தி வாழ்த்துக்கள் தொடரட்டு்ம் சௌந்தர்
Yes,
ReplyDeleteகண்டிப்பாக ஒரு நாள் விடியும்
அருமை சகா. மெரினாவில் சூரியன் அஸ்தமனம் ஆகும் வேலையில் உதிக்கட்டும் தமிழர்களின் உரிமைக்குரல். . .
ReplyDelete/கிளைகளை வெட்டும் போதே
ReplyDeleteகேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?//
ஆமாம்
ஜூன் நான் வர முடியாத தூரத்தில் இருக்கிறேன் ..
ReplyDeleteஆனால் நானும் உங்களை போலவே துயரத்தில் இருக்கிறேன் ,என் சார்பாகவும் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்துங்கள் நண்பரே ..
சௌந்தர் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. பேரணி அமைதியாக நடைபெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒன்று படுவோம் ...விடியும் நாள் வெகுதூரத்தில் இல்லை
ReplyDeleteகிளைகளை வெட்டும் போதே
ReplyDeleteகேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு இனத்தையே வேறருக்கும் போது
வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?
ஒற்றுமை இன்மையை உணர்த்தி நிற்கும் இந்த வரிகள் மனதை நெருடுகின்றன!...
நன்றி பகிர்வுக்கு.
//விலங்கினங்களை வதைத்தாலே
ReplyDeleteவீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு
ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்
தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....//
சரியான கேள்வி!
கடற்கரையில் கூடுவோம்!
ஒன்றுபட்டால் விடிவு நிச்சயம் ...
ReplyDeleteஎல்லாம் உண்மை.
ReplyDeleteசில புல்லுருவிகளின் பேச்சை நம்பியதால் வந்த வினை.
Present maapla!
ReplyDeleteபதிவை காலையில் போட்டுட்டு மெயிலை மாலையில் அனுப்பினா எப்படி?
ReplyDeleteஎல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மக்களின் உணர்வுகளை, மக்களின் யதார்த்த நிலமையினைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.
ReplyDeleteஇந்தப் பேரணி உணர்வெழுச்சியுடன் நடை பெற வாழ்த்துகிறேன்.
பாக்கும்போதே பதைபதைத்து போனேன். அவர்கள் ஆத்மாவாவது சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇன உணர்வுக்கு என் மகிழ்ச்சி !
ReplyDeleteஉண்மை மனம் வலிக்கிறது உங்கள் கவிதையில் தெரியும் கோபம் நியாமானது அனைவரும் ஒன்று கூடுவோம் . மெரினாவிற்கு வரமுயயவிலை என்ற போதும் என் கருத்தை உங்கள் கவிதை பதிவில் தெரியபடுத்துகிறேன்
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. தமிழக அரசு மூலம் அழுத்தம் கொடுத்து மத்திய அரசின் இலங்கை அரசிற்கு கண்மூடிய ஆதரவை விலக்கி விட்டால் கண்டிப்பாக விடியும் நாள் வெகுதூரத்தில் இல்லை !
ReplyDelete//கண்டிப்பாக ஒரு நாள் விடியும்//
ReplyDeleteagreed!
உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்
ReplyDeleteஉங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்
ReplyDeleteஉங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்
ReplyDeleteகவிதையில் மிகவும் நியாயமான ஆதங்கம் உள்ளது. கண்டிப்பாக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கப்பட வேண்டும்.
ReplyDeleteஎன்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என் ஆதரவும் பிரார்த்தனைகள்எப்போதும் உண்டு
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்.
என்னால் கலந்து கொள்ள முடியாது. ஆனால் என் மக்களுக்கான பிராத்தனைகள் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
ReplyDeletevalikkirathu wanpaa...........
ReplyDeletearumaiyaana aathangkam nirantha kavithai...
vaalththukkal"
ஒரு பேச்சுக்கு கருணாநிதியால் தமிழர்கள் படுகொலை செய்யபட்டால் (ஏன் என்றால் கருணாநிதி தானே கொடுங்கோலர் ராஜபக்ஷய விட ) இதை போல ஒரு கூட்டம் இலங்கையில் தமிழர்கள் என்று சொல்பவர்கள் நடத்துவார்களா?
ReplyDeleteஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...
ReplyDeleteநிச்சயமாக விடியும் வரை போராட வேண்டும்.
மெரினாவில் ஒன்று கூடலின் வெற்றியில் இருக்கிறது இனியும் நாம் செல்ல வேண்டிய பாதையின் வழி.
ReplyDelete