பாரதியார் இளம் வயதிலேயே கவித்திறம் பெற்று விளங்கினார். அவரது திறமையைக் கண்ட சான்றோர் பாரதி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள்.
காந்திமதி நாயகம் என்பவருக்கு அது பிடிக்கவில்லை. எப்படியாவது பாரதியை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு சமயம் “பாரதி சின்னப்பயல்” என்ற ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பா இயற்றச் சொன்னார்.
வெண்பா என்பது கடினமானது. சுலபத்தில் இயற்ற முடியாதது. அப்படியே இயற்றினாலும் “பாரதி சின்னப்பயல்” என்றுதானே முடிக்க வேண்டும் என்று கருதினார்.
பாரதி சற்றும் மலைக்காது வெண்பாவை இயற்றினார். ஈற்றடியை “காந்திமதி நாயகத்தைப் பார்அதி சின்னப்பயல்“ என்று முடித்தார்
பாரதியாரை இழிவுபடுத்தக் கருதிய காந்திமதி நாயகம் தாமே இழிவுற்று தலை கவிந்தார்.
அவரது நினைவு நாளில் அவரது பெருமைகளை நினைப்பதில் பெருமைப்படுகிறேன் நான்..!
********************************
சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் டீசர்!
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுள்ளீர்கள்!
ReplyDeleteஇரண்டும் தனித்தனி தகவல்...
Deleteஎன்னமோ படிச்சவங்க சொல்லுறிங்க! ஆனா, எனக்குதான் புரியல
ReplyDeleteபாரதியின் நினைவு நாளில் அவரின் புலமையைப் பரை சாற்றும் நல்ல பதிவு.. :)
ReplyDeleteபாரதியின் நினைவினைப் போற்றுவோம்.
ReplyDeleteபதிவின் தலைப்பினை சிறிது மாற்றி வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஐயா
நல்ல பதிவு.. :)
ReplyDelete