கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label டாக்டர் ஜோக்ஸ். Show all posts
Showing posts with label டாக்டர் ஜோக்ஸ். Show all posts

05 October, 2013

டென்ஷனாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?



மனோதத்துவ டாக்டரைப் பார்க்கச் சென்றார் ஒருவர். வந்தவருக்கு என்ன பிரச்சனை என்று வினவினார் டாக்டர்.

மனம் அமைதி இல்லாமலும், எப்போதும் டென்ஷனாக இருப்பதாகவும் கூறினார். அவரை நீண்ட நேரம் பரிசோதித்த டாக்டர், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு யார் டென்ஷன் ஏற்படுத்துகிறார்களோ அவர்களைச் சந்திக்காதீர்கள்... அவரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.. கொஞ்ச நாள் சென்றதும் சரியாகி விடும். அடுத்த வாரம் என்னை வந்து பாருங்கள்” என்றார் டாக்டர்.

மூன்று, நான்கு வாரங்கள் சென்றது. அவர் டாக்டரைப் பார்க்கவரவில்லை. டாக்டரே தொடர்பு கொண்டு பேசினார்.

“என்ன சார் நல்லா இருக்கீங்களா..? முன்ன மாதிரி எந்த பிரச்சனையும் இல்லையே..?“ என்று கேட்டார் டாக்டர்.

“ஆமாம் டாக்டர். இப்ப நான் நல்லா இருக்கேன்“ என்றார் அவர்.

குணமாகியதும் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று கோபம் வந்தது டாக்டருக்கு....

“அடுத்த வாரமே என்னை வந்து பார்க்கச் சொல்லி இருந்தேனே... மறந்துட்டீங்களா..?“ என்றார் டாக்டர்.

“இல்லை டாக்டர்.. நீங்க தான் சொன்னீங்களே.. யார் டென்ஷன் தர்ராங்களோ.. அவர்களை சந்திக்க வேண்டாம்டன்னு... அதனாலதான் உங்களைப் பார்க்க வரவில்லை..!” என்றார் பொறுமையாக.

அப்ப பாருங்க இந்த டாக்டருங்க எவ்வளவு டென்ஷன் தர்றாங்கன்னு...!

11 September, 2012

பயங்கரமான டாக்டரும்..! பலே போலீஸ்காரரும்..!


நோயாளியின் அறைக்குச் சென்ற டாக்டர் சிறிது நேரத்தில் வெளியே வந்து ”கொரடா இருக்குமா?” என்று கேட்டார்.

அதைப் பெற்றுக்கொண்டு கதவைச் சார்த்தி விட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியே வந்து அவர் ”திருப்புலி இருக்குமா?” என்று கேட்டார். அதையும் பெற்றுக் கொண்ட அவர் உள்ளே சென்றார்.

வெளியே காத்திருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று தவித்தனர்.

மீண்டும் வெளியே வந்த டாக்டர். ”உளியும் சுத்தியலும் வேண்டுமே” என்றார்

“டாக்டர்! உண்மையைச் சொல்லுங்க. எங்க அப்பாவுக்கு என்ன? என்னென்னவோ கேட்கிறீங்களே..!” என்று அலறினான் மகன்.

“நான் கொண்டுவந்த பெட்டியைத் திறக்க முடியலே. அதைத்திறக்கத்தான் எல்லாப் பொருட்களையும் கேட்டேன். இன்னும் நோயாளியை நான் சோதிக்கவே இல்லை” என்று பதில் சொன்னார் டாக்டர்...

***************************************************************


போலீஸ்காரரைப் பார்த்த ஒருவர்,  “சார்! இங்கே காரை நிறுத்தலாமா?” என்று பேட்டார்.

“நிறுத்தக் கூடாது” என்றார் போலீஸ்காரர்.

“இங்கே பல கார்கள் நிற்கிறதே. அது எப்படி?” என்று கேட்டார் அவர்.

“அவர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை” என்று பதில் தந்தார் போலீஸ்காரர்.

***********************************************************


வழுக்கைத் தலையர் ஒருவர் முடி வெட்டும் நிலையத்திற்குள் நுழைந்தார். “முடி வெட்ட எவ்வளவு கட்டணம்?” என்று கேட்டார்.

“பத்து ரூபாய்” என்று பதில் வந்தது.

“சில முடிகளை வெட்டுவதற்குப் பத்து ரூபாயா?” என்று கேட்டார் அவர்.

“கட்டணம் முடி வெட்டுவதற்கு அல்ல. முடியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு” என்று உடனே பதில் வந்தது.

****************************
நன்றி..!
Related Posts Plugin for WordPress, Blogger...