கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 June, 2011

யிர்கோளத்தின் யிர்காப்போம்...!







விதைத்திட்ட எங்கும்
விளைந்த காலங்கள் போய்
வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது
நிலங்கள்...

றட்சியின் 
போர்வையில்
புகுந்து கொண்ட உலகத்தை...

கருகருக்கும் 
மேகங்கள்
காணவரும் நாள் இனிகுறைவே...!

டையாய் இருந்த 
மரங்கள்
அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண 
கோலத்தில் தான்
இன்றைய காடுகள்..

தென்றலாய் 
தவழ்ந்து வந்த 
காற்றினம்
மாசுக்களின் மடியில்
மரணித்துப் போயிருக்கிறது..

இவற்றின் உயிர் இழப்புகளால்தான்
ஓசோனின் 

ஓட்டைகள்...!

ஞ்சை புஞ்சை நிலங்களில்
இன்று அமோகமாக விளைவது
வீடுகள் மட்டுமே..

றுகள் 
குளங்கள் கூட
மனிதக் கறையான்களால்
உருமாறிப் போயிருக்கிறது..
 
நாகரீகம்.. புரட்சி... 
என்ற பெயரில்
நாம் செய்துகொண்டிருப்பது
‌ஐம்பூதங்களை 
அழிக்கும் பணியே...

காற்றுக்கும் தண்ணீருக்கும் 
மரணதண்டனை கொடுத்துவிட்டு
பிறகு எப்படி 

எதிர்பார்ப்பது
ஆரோக்கிய வாழ்வு...!

புதிய கோளை தேடி அலைய வேண்டியது
இனி அவசியம்தான்...
பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
மூச்சடைப்பு...
 
முருகனின் 
மயிலையும்...
ஏசுவின் 
காலடித்தடமும்....
புத்தனின் 
போதிமரமும்...
அல்லாவின் 
அருளும்...
சுமந்துக்கிடக்கும் 
இந்த பூமியை
அழிக்கவா 

நம் அவதாரங்கள்...
 
நாளை சங்கதிக்கு
நாம் வழங்கும் 

வாழ்க்கை
இந்த பூமியாக இருக்கட்டும்...
 
ண்ணீர் அதன்
கற்பி‌ழக்காமல் 

காப்போம் ..!

காற்றை 
வடிக்கட்டி
காயம் 

ஆற்றுவோம்..!

புகைக்கு 
தடைப்போட்டு
கதவடைப்போம்..!

சுமை வளர்க்க 
முதலில் 
வழிவிடட்டும்
நம் வாசற்படிகள்...


ப்போதுதான்...
துளிர்விடும் இந்த உயிர்கோளம்...!

 

உலக சுற்றுச்சூழல் நாள்  விழிப்புணர்வு கவிதை
தங்களின் கருத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
தமிழ்மணத்தில் தங்கள் வாக்குகளை பதிவுச்செய்யுங்கள்...

62 comments:

  1. ஆடையாய் இருந்த மரங்கள்
    அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண கோளத்தில் தான்
    இன்றைய காடுகள்..


    மனதிலும் அறிவிலும்
    இடியாய் அறைந்த வார்த்தைகள்
    நாள் விழிப்புணர்வுக் கவிதை

    ReplyDelete
  2. ////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    முதல் மழை?
    ////////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  3. ////////
    A.R.ராஜகோபாலன் said... [Reply to comment]

    ஆடையாய் இருந்த மரங்கள்
    அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண கோளத்தில் தான்
    இன்றைய காடுகள்..


    மனதிலும் அறிவிலும்
    இடியாய் அறைந்த வார்த்தைகள்
    நாள் விழிப்புணர்வுக் கவிதை
    ////////

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  4. சிறந்த சூழல் விழிப்புணர்வு கவிதையை தந்ததற்கு பாராட்டுக்கள் ....

    ReplyDelete
  5. மாப்ள நெறய விஷயங்கள் தைக்கின்றன மனிதனாக இருப்பதால்........
    பின்னிட்டய்யா கவிஞ்சா!

    ReplyDelete
  6. //தென்றலாய் தவழ்ந்து வந்த காற்றினம்
    மாசுக்களின் மடியில்
    மரணித்துப்போயிருக்கிறது..
    இவற்றின் உயிரிழப்புகளால்தான்
    ஓசோனின் ஓட்டைகள்...! //

    உண்மைதான்....

    ReplyDelete
  7. உருவம்,உள்ளடக்கம் இரண்டும் அருமை சௌந்தர். அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய அவசியத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  8. உண்மையான வரிகள்..விழிப்புணர்வு தரும் கவிதை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. ///
    koodal bala said... [Reply to comment]

    சிறந்த சூழல் விழிப்புணர்வு கவிதையை தந்ததற்கு பாராட்டுக்கள் ....
    ////////

    நனறி பாலா...

    ReplyDelete
  10. //////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    மாப்ள நெறய விஷயங்கள் தைக்கின்றன மனிதனாக இருப்பதால்........
    பின்னிட்டய்யா கவிஞ்சா!
    ////////

    நன்றி விக்கி...

    ReplyDelete
  11. //////
    சங்கவி said... [Reply to comment]

    //தென்றலாய் தவழ்ந்து வந்த காற்றினம்
    மாசுக்களின் மடியில்
    மரணித்துப்போயிருக்கிறது..
    இவற்றின் உயிரிழப்புகளால்தான்
    ஓசோனின் ஓட்டைகள்...! //

    உண்மைதான்....
    /////

    வாங்க சங்கவி...

    ReplyDelete
  12. ////////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    உருவம்,உள்ளடக்கம் இரண்டும் அருமை சௌந்தர். அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய அவசியத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    ///////

    தங்கள் வருகைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  13. விழுப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை...

    ReplyDelete
  14. ///ஆடையாய் இருந்த மரங்கள்
    அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண கோளத்தில் தான்
    இன்றைய காடுகள்..

    இங்கே கான்க்ரீட் காடுகளுக்கு நடுவே
    சுவாசிக்க சுத்த ஆக்ஸிஜன இல்லை..
    இலவசமாய் கிடைக்கும் எல்லாம் இனி காசு குடுத்தா தான், அப்ப கூட கிடைக்குமா தெரியலப்பா

    ReplyDelete
  15. சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு கவிதை.. அட்டகாசம்

    ReplyDelete
  16. /////////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    உண்மையான வரிகள்..விழிப்புணர்வு தரும் கவிதை.. வாழ்த்துக்கள்..
    ////////

    நன்றி...

    ReplyDelete
  17. சிறப்பு



    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    லேப்டாப் மனோவின் New Keyboard
    http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

    ReplyDelete
  18. //புதிய கோளை தேடி அலையவேண்டியது
    இனி அவசியம்தான்
    பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
    மூச்சடைப்பு...///
    அருமை நண்பரே

    ReplyDelete
  19. ///நாகரீகம்.. புரட்சி... என்ற பெயரில்
    நாம் செய்துகொண்டிருப்பது
    ‌ஐம்பூதங்களை அழிக்கும் பணியே...// உண்மை தான் பாஸ் ..


    அத்தனை உவமைகளும் கையாண்ட விதம் சூப்பர் ...

    ReplyDelete
  20. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தைகளும் வெகு அருமையாக நல்முத்தும் பவழமும் போல கோர்க்கப்பட்ட அழகிய மாலையாக இந்தக்கவிதை காட்சியளிக்கிறது.

    //ஆடையாய் இருந்த மரங்கள்
    அவிழ்ந்தப்பின்னர் நிர்வாண கோளத்தில் தான்
    இன்றைய காடுகள்.. //

    காடுகளை அழித்துவரும் நிர்வாண
    சமுதாயத்திற்கு சாட்டையடி.

    பாராட்டுக்கள். வோட்டளித்து விட்டேன் உடனே!
    தொடரட்டும் உங்கள் சமுதாய விழிப்புனர்வு கொண்ட படைப்புக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனச்சாட்சியைத் தட்டுகிறது.மரங்களை அழிக்க அழிக்க மரமனிதனுக்குத்தான் ஆபத்து !

    ReplyDelete
  22. //காற்றுக்கும் தண்ணீருக்கும்
    மரணதண்டனை கொடுத்துவிட்டு
    பிறகெப்படி எதிர்பார்ப்பது
    ஆரோக்கிய வாழ்வு...!//

    அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்....

    ReplyDelete
  23. //ஆறுகள் குளங்கள் கூட
    மனிதக்கறையான்களால்
    உருமாறிப் போயிருக்கிறது//

    உண்மைதான் சகோதரரே. தண்ணீர் காற்று விளைநிலம் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு வருங்கால சந்ததியினருக்கு நோய்களை சொத்தாக விட்டுவிட்டுப் போகிறார்கள் . விழிப்புணர்வுக் கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete
  24. ////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    விழுப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை...
    ////////

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  25. @ஜ.ரா.ரமேஷ் பாபு


    சரியாக சொன்னீர்கள் நண்பரே...
    கண்டிப்பாக மக்களிடம் விழிப்புணர்வு வரவேண்டும்...

    ReplyDelete
  26. ////////
    அசோக் குமார் said... [Reply to comment]

    சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு கவிதை.. அட்டகாசம்
    /////////

    நன்றி அசோக்...

    ReplyDelete
  27. ///////
    Speed Master said... [Reply to comment]

    சிறப்பு////////

    தங்களின் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  28. ///////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    //புதிய கோளை தேடி அலையவேண்டியது
    இனி அவசியம்தான்
    பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
    மூச்சடைப்பு...///
    அருமை நண்பரே
    ///////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  29. /////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ///நாகரீகம்.. புரட்சி... என்ற பெயரில்
    நாம் செய்துகொண்டிருப்பது
    ‌ஐம்பூதங்களை அழிக்கும் பணியே...// உண்மை தான் பாஸ் ..


    அத்தனை உவமைகளும் கையாண்ட விதம் சூப்பர் ...
    //////////

    நன்றி

    ReplyDelete
  30. ஒவ்வொரு வரியும் மனம் தைக்கிறது. குற்ற உணர்வும் கூடவே எழுகிறது. கவிதை அருமை.

    ReplyDelete
  31. வித்தியாசமான கலக்கல் கவிதை

    ReplyDelete
  32. பசுமை வளர்க்க
    முதலில் வழிவிடட்டும்
    நம் வாசற்படிகள்...

    அப்போதுதான்...
    துளிர்விடும் இந்த உயிர்கோளம்...!//

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு கவிதை
    arumai.

    ReplyDelete
  33. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  34. /////////
    ஹேமா said... [Reply to comment]

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனச்சாட்சியைத் தட்டுகிறது.மரங்களை அழிக்க அழிக்க மரமனிதனுக்குத்தான் ஆபத்து !
    //////////

    வாங்க ஹேமா...

    ReplyDelete
  35. //////////
    FOOD said... [Reply to comment]

    //தண்ணீர் அதன்
    கற்பிழக்காமல் காப்போம் ..!

    காற்றை வடிக்கட்டி
    காயம் ஆற்றுவோம்..!

    புகைக்கு தடைப்போட்டு
    கதவடைப்போம்..!//
    கவிதை அருமை.
    //////////

    வாங்க தலைவ‌ரே...

    ReplyDelete
  36. இந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் வாக்களித்த கீழ்கண்ட அனைவருக்கும் நன்றி...

    தமிழ்மணத்தில் வாக்களித்தவர்கள்...
    soundarapandian
    cp666
    Hemma
    NANDUnorandu
    sat10707
    kadambavanakuyil
    nekalvukal@gmail.com
    vaiGopalakrishnan
    Balaganesan
    kkarun09
    haja83
    chennaipithan
    rameshbabu_
    jr m.vignesh27@rocketmail.com
    vbvvvmv@gmail.com

    ReplyDelete
  37. கவிதையும் நல்லாருக்கு, கவிதை சொல்லும் கருத்தும் நல்லாருக்கு!

    ReplyDelete
  38. கவிதை அருமை. என் மகள் பள்ளியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நாளுக்காக அசைன்மெண்ட் தயாரிக்கின்றாள். அவளுக்கு இந்த கவிதையை தர தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

    ReplyDelete
  39. பூமியின் இன்றைய உண்மை நிலையையும், நாம் செய்கின்றன தவறுகளையும்
    உங்கள் கவிதையின் வரிகள் வாசிப்பவர்களை சவுக்கால் அடிப்பது போல் உணர வைக்கிறது.
    உத்வேகத்துடன் உங்கள் பணியை தொடர்ந்திடுங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு கவிதை>>>

    விழிப்புணர்வு தேவை அனைவருக்கும்.

    ReplyDelete
  41. குறலாய் குறைந்து விட்டது
    நிலங்கள்... //

    பாஸ் இங்கே ஒரு சின்னத் திருத்தம் வேண்டும், கீபோர்ட் மக்கர் பண்ணி விட்டது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  42. புதிய கோளை தேடி அலையவேண்டியது
    இனி அவசியம்தான்
    பூமிக்கு இனி ஆரம்பித்துவிட்டது
    மூச்சடைப்பு...//

    இன்றைய பூகோளத்தின் யதார்த்த நிலையினைச் சுட்டும் வரிகள் இவை...

    கவிதை,
    விழிப்புணர்விர்வின் வெளிப்பாடாகவும், இயற்கை மீது கொண்ட அன்பின் மறு வடிவமாகவும் வந்திருக்கிறது.

    இக் கவிதையினைச் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தலாம்.

    ReplyDelete
  43. பாஸ்...தமிழ் மணத்தில் 19ம் ஆளு நானு,

    ReplyDelete
  44. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  45. /////////
    Heart Rider said... [Reply to comment]

    //காற்றுக்கும் தண்ணீருக்கும்
    மரணதண்டனை கொடுத்துவிட்டு
    பிறகெப்படி எதிர்பார்ப்பது
    ஆரோக்கிய வாழ்வு...!//

    அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்....
    /////////

    தங்களின் வுருகைக்கு நன்றி..

    ReplyDelete
  46. ////////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    //ஆறுகள் குளங்கள் கூட
    மனிதக்கறையான்களால்
    உருமாறிப் போயிருக்கிறது//

    உண்மைதான் சகோதரரே. தண்ணீர் காற்று விளைநிலம் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு வருங்கால சந்ததியினருக்கு நோய்களை சொத்தாக விட்டுவிட்டுப் போகிறார்கள் . விழிப்புணர்வுக் கவிதை மிக மிக அருமை.
    //////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  47. /////////
    கீதா said... [Reply to comment]

    ஒவ்வொரு வரியும் மனம் தைக்கிறது. குற்ற உணர்வும் கூடவே எழுகிறது. கவிதை அருமை.
    ///////

    நன்றி கீதா...

    ReplyDelete
  48. ////
    யாதவன் said... [Reply to comment]

    வித்தியாசமான கலக்கல் கவிதை
    ////////

    நன்றி..

    ReplyDelete
  49. //////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    பசுமை வளர்க்க
    முதலில் வழிவிடட்டும்
    நம் வாசற்படிகள்...

    அப்போதுதான்...
    துளிர்விடும் இந்த உயிர்கோளம்...!//

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு கவிதை
    arumai.
    /////////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  50. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    கவிதையும் நல்லாருக்கு, கவிதை சொல்லும் கருத்தும் நல்லாருக்கு!
    ////////

    நன்றி தலைவரே...

    ReplyDelete
  51. //////
    ராஜி said... [Reply to comment]

    கவிதை அருமை. என் மகள் பள்ளியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நாளுக்காக அசைன்மெண்ட் தயாரிக்கின்றாள். அவளுக்கு இந்த கவிதையை தர தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
    //////////

    கண்டிப்பாக..
    பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே...

    ReplyDelete
  52. /////////
    ... said... [Reply to comment]

    பூமியின் இன்றைய உண்மை நிலையையும், நாம் செய்கின்றன தவறுகளையும்
    உங்கள் கவிதையின் வரிகள் வாசிப்பவர்களை சவுக்கால் அடிப்பது போல் உணர வைக்கிறது.
    உத்வேகத்துடன் உங்கள் பணியை தொடர்ந்திடுங்கள்... வாழ்த்துக்கள்...
    ////////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  53. //////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு கவிதை>>>

    விழிப்புணர்வு தேவை அனைவருக்கும்.
    /////////

    வாங்க மாப்ள...

    ReplyDelete
  54. ///////
    நிரூபன் said... [Reply to comment]

    குறலாய் குறைந்து விட்டது
    நிலங்கள்... //

    பாஸ் இங்கே ஒரு சின்னத் திருத்தம் வேண்டும், கீபோர்ட் மக்கர் பண்ணி விட்டது என நினைக்கிறேன்.
    //////

    குறையை சுட்டிகாட்டியதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  55. @நிரூபன்


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  56. இயற்கை மாசுபடுத்தலை பற்றி அருமையான கவிதை. அருமை சௌந்தர்.

    ReplyDelete
  57. /////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    இயற்கை மாசுபடுத்தலை பற்றி அருமையான கவிதை. அருமை சௌந்தர்.
    //////


    நன்றி பிரசாத்..

    ReplyDelete
  58. நன்றி அய்யா அருமையான கவிதை...
    சேகர்,வேலூர்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...