கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 June, 2011

சிபிஐ அடுத்த அட்டாக் தயாநிதி மாறன்.... பரபரப்பு தகவல்..


தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது.

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் - சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார். (தட்ஸ் தமிழ்)

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது.
நெருப்பில்லாம் புகையாது என்ற ப‌ழமொழியைப்போல் உள்ளிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக வெளிவரும் என நம்புவோம்...

45 comments:

  1. ங்கொய்யால அவன புடிங்க மொதல்ல எல்லாம் உண்மையும் வெளி வரும்.

    ReplyDelete
  2. மாப்ள லேட்டா வச்சாலும் லேட்டஸ்ட்டா வக்கிறாங்க போல ஆப்ப ஹிஹி!

    ReplyDelete
  3. இன்னும் எத்தன நாளு, எத்தனை ஆளு, சீக்கிரம் கேஸ்-அ புடிச்சி முடிக்க சொல்லுங்க, அடுத்து பெரிய கேஸ் வந்தா, இந்த கேஸ்-அ நாம மறந்துடுவோம்...

    ReplyDelete
  4. ///////
    சசிகுமார் said... [Reply to comment]

    ங்கொய்யால அவன புடிங்க மொதல்ல எல்லாம் உண்மையும் வெளி வரும்.
    ////////

    தவறு செய்பவர்கள் யாரும் தண்டிக்கப்பட வேண்டியர்களே...
    அது திமுக காரர்களோ அதிமுக காரார்களோ...

    ReplyDelete
  5. ////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    மாப்ள லேட்டா வச்சாலும் லேட்டஸ்ட்டா வக்கிறாங்க போல ஆப்ப ஹிஹி!
    ///////

    வாங்க விக்கி...

    ReplyDelete
  6. ////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    இன்னும் எத்தன நாளு, எத்தனை ஆளு, சீக்கிரம் கேஸ்-அ புடிச்சி முடிக்க சொல்லுங்க, அடுத்து பெரிய கேஸ் வந்தா, இந்த கேஸ்-அ நாம மறந்துடுவோம்...
    ///

    இதுவும் உண்மைதான்...

    ReplyDelete
  7. ஏர்செல் விவகாரத்துடன் 323 தொலைபேசி எண் விவகாரம் நிகழ்ந்ததா என்பதற்கான சாட்சியாக பைபர் கேபிள் இணைக்கப்பட்டதா என்ற விபரத்தை கண்டு பிடிப்பது அவசியம்.BSNL முன்பு லாபத்தில் ஓடிய அரசு நிறுவனம்.

    ReplyDelete
  8. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete
  9. இவனுங்கள என்ன செய்தால் தகும் ?

    ReplyDelete
  10. என்னனமோ நடக்கிறது நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  11. உண்மைதான் ... இந்த தகவல் அப்போதே சிவசங்கரன் வெளியிட்டது தான் .

    கனிமொழிக்கு பக்கத்துக்கு செல் ரெடி ஆகுதாம் ...

    ReplyDelete
  12. ஹும், ஆட்சி அதிகாரத்தை வச்சு எப்பிடி எல்லாம் தில்லு முல்லு பன்னுராங்கையா....

    ReplyDelete
  13. ///////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    சேம் பிளட்...
    ////////
    உங்க கடையிலும் இதுதானா....

    ReplyDelete
  14. /////////
    ராஜ நடராஜன் said... [Reply to comment]

    ஏர்செல் விவகாரத்துடன் 323 தொலைபேசி எண் விவகாரம் நிகழ்ந்ததா என்பதற்கான சாட்சியாக பைபர் கேபிள் இணைக்கப்பட்டதா என்ற விபரத்தை கண்டு பிடிப்பது அவசியம்.BSNL முன்பு லாபத்தில் ஓடிய அரசு நிறுவனம்.
    /////////


    உண்மைதான்...

    ReplyDelete
  15. ///////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை
    /////////

    கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
  16. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    வேறென்ன சொல்ல
    நல்ல பதிவு , பகிர்வு நண்பரே

    ReplyDelete
  17. சிகப்பா இருக்கவுங்க திருடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க .....இவுரு ஏன் இப்படி பண்ணினார் .....?

    ReplyDelete
  18. அரசியலில் பணம் கொடுத்து அமைச்சர் பதவிகள் பெறுவது தம் சொந்த ஆதாயங்களுக்காகவே... இவர்களை திருத்த முடியாது.

    பேசாமல் இப்பிடி ஊழல் செய்ர ஒரு ரெண்டு பேர தூக்குல போட்டாத்தான் மத்தவங்க திருந்துவாங்க.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  19. ////////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    இவனுங்கள என்ன செய்தால் தகும் ?
    /////////

    என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..

    ReplyDelete
  20. /////////
    அன்புடன் மலிக்கா said... [Reply to comment]

    என்னனமோ நடக்கிறது நடக்கட்டும் நடக்கட்டும்.
    /////////

    வாங்க மல்லிகா...

    ReplyDelete
  21. /////////
    ஈரோடு தங்கதுரை said... [Reply to comment]

    உண்மைதான் ... இந்த தகவல் அப்போதே சிவசங்கரன் வெளியிட்டது தான் .

    கனிமொழிக்கு பக்கத்துக்கு செல் ரெடி ஆகுதாம் ...
    //////////

    தவறுசெய்திருந்தால் சிபிஐ கண்டிப்பாக விடாது...

    ReplyDelete
  22. தப்பு செய்தால் தப்ப முடியாதுன்னு எண்ணம் வரணும் , மேல உள்ள அம்மா விட்டாலும் கிழே உள்ள அம்மா கில்லி பாப்போம்

    ReplyDelete
  23. ////////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ஹும், ஆட்சி அதிகாரத்தை வச்சு எப்பிடி எல்லாம் தில்லு முல்லு பன்னுராங்கையா....
    ////////

    என்ன பண்றது.. இதுதான் அரசியல்..

    ReplyDelete
  24. ////////
    A.R.ராஜகோபாலன் said... [Reply to comment]

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    வேறென்ன சொல்ல
    நல்ல பதிவு , பகிர்வு நண்பரே
    ///////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  25. சீக்கரமாக உண்மைகள் வெளிவரட்டும். தப்பு செய்தவர்கள் தப்பாமல் தண்டனை பெறட்டும்.
    இதைவிட வேறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தால் மக்கள் இதை அப்படியே மறந்து மன்னித்து விடுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  26. //////////
    koodal bala said... [Reply to comment]

    சிகப்பா இருக்கவுங்க திருடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க .....இவுரு ஏன் இப்படி பண்ணினார் .....?
    //////////
    வாங்க...

    ReplyDelete
  27. இதுமட்டும்தானா இன்னமும் என்னென்ன இருக்கோ?

    ReplyDelete
  28. மாட்டிக்கிட்டாரா மாறன்!

    ReplyDelete
  29. மாட்டுனாரு மாறன்.... சி.பி.ஐ பிடி இறுகுது

    ReplyDelete
  30. யோவ் பதிவ கொஞ்சம் நீட்டுயா...ஆறுதலா வாசிப்பம்னு கெளம்பினா சட்டுன்னு முடியுது ஹிஹி

    ReplyDelete
  31. ஆந்த்ரா பாங்கில் காமராஜர் 9 லட்சம் வைத்துள்ளார்,மொரார்ஜி தேசாய் மொரார்ஜி மில்லின் உரிமையாளர், பத்து லட்சம் பக்தவத்சலம் என்று நேர்மையான மனிதர்களையெல்லாம் கேவலப்படுத்தினார்கள் தே.............. பசங்க,இன்று களி தின்கிறார்கள்,செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா.

    ReplyDelete
  32. இன்னும் கொஞ்ச நாள்ல கருணாநிதியோட மொத்த குடும்பமும் திகார் சிறையில்தான் இருக்கும் போல

    ReplyDelete
  33. பாஸ்...ஊழல் விவகாரம், ஒரு சங்கிலித் தொடராக நீள்கிறதே....தயாதிநிதி மாறனுக்கு அடுத்ததாக யாரு?
    ஒரு பெரிய லிஸ்ட்டே சிபிஐ வசம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. ////////
    Sankar Gurusamy said... [Reply to comment]

    அரசியலில் பணம் கொடுத்து அமைச்சர் பதவிகள் பெறுவது தம் சொந்த ஆதாயங்களுக்காகவே... இவர்களை திருத்த முடியாது.

    பேசாமல் இப்பிடி ஊழல் செய்ர ஒரு ரெண்டு பேர தூக்குல போட்டாத்தான் மத்தவங்க திருந்துவாங்க.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/
    /////

    நன்றி..

    ReplyDelete
  35. //////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    தப்பு செய்தால் தப்ப முடியாதுன்னு எண்ணம் வரணும் , மேல உள்ள அம்மா விட்டாலும் கிழே உள்ள அம்மா கில்லி பாப்போம்
    ///////

    கண்டிப்பாக விடக்கூடாது...

    ReplyDelete
  36. ////////
    FOOD said... [Reply to comment]

    ம் ம் சூடான விவாதங்கள்.
    ////////

    வாங்க ஆபிஸர்...

    ReplyDelete
  37. /////
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    சீக்கரமாக உண்மைகள் வெளிவரட்டும். தப்பு செய்தவர்கள் தப்பாமல் தண்டனை பெறட்டும்.
    இதைவிட வேறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தால் மக்கள் இதை அப்படியே மறந்து மன்னித்து விடுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
    /////

    கண்டிப்பாக உண்மைகள் வெளிப்படும்...

    ReplyDelete
  38. //////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    இதுமட்டும்தானா இன்னமும் என்னென்ன இருக்கோ?
    //////////

    கண்டிப்பாக எல்லாம் வெளியில் வரும்...

    ReplyDelete
  39. ///////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    மாட்டிக்கிட்டாரா மாறன்!
    ///////

    ஆமாம்..

    ReplyDelete
  40. ////////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    மாட்டுனாரு மாறன்.... சி.பி.ஐ பிடி இறுகுது
    ////////
    ஆமாம்..

    ReplyDelete
  41. ///////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    யோவ் பதிவ கொஞ்சம் நீட்டுயா...ஆறுதலா வாசிப்பம்னு கெளம்பினா சட்டுன்னு முடியுது ஹிஹி
    /////


    போட்டுடுவோம்..

    ReplyDelete
  42. ///
    vijayan said... [Reply to comment]

    ஆந்த்ரா பாங்கில் காமராஜர் 9 லட்சம் வைத்துள்ளார்,மொரார்ஜி தேசாய் மொரார்ஜி மில்லின் உரிமையாளர், பத்து லட்சம் பக்தவத்சலம் என்று நேர்மையான மனிதர்களையெல்லாம் கேவலப்படுத்தினார்கள் தே.............. பசங்க,இன்று களி தின்கிறார்கள்,செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா.
    /////
    நன்றி...

    ReplyDelete
  43. ////
    அசோக் குமார் said... [Reply to comment]

    இன்னும் கொஞ்ச நாள்ல கருணாநிதியோட மொத்த குடும்பமும் திகார் சிறையில்தான் இருக்கும் போல
    ///////


    கண்டிப்பாக...

    ReplyDelete
  44. ////////
    நிரூபன் said... [Reply to comment]

    பாஸ்...ஊழல் விவகாரம், ஒரு சங்கிலித் தொடராக நீள்கிறதே....தயாதிநிதி மாறனுக்கு அடுத்ததாக யாரு?
    ஒரு பெரிய லிஸ்ட்டே சிபிஐ வசம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    /////////

    கண்டிப்பாக இருக்கும்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...