கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 June, 2011

காங்கிரஸுக்கு 'குட்பை' - கலைஞர் அதிரடி முடிவு



திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் பத்தாம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் முக்கிய முடிவுகளை திமுக தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியது முதலே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் புகைச்சல் கிளம்பியது. இருந்தாலும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அமைதி காத்து வந்தது திமுக.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் சீட் கேட்டு பேரம் பேச ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதிக சீட்களை வாங்கி போண்டி ஆனது. தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியுடன் இதுவரை சோனியா காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், கருணாநிதியின் மகள் கனிமொழியை சிபிஐ அதிரடியாக கைது செய்து திஹார் சிறையில் அடைத்து விட்டது. தற்போது தயாநிதி மாறனின் பதவிக்கும் பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். திருவாரூரில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, எனது மகள் கனிமொழி இன்று கடும் வெப்பத்துடன் கூடிய திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட மத்திய அரசுதான் காரணம் என்று பேசியிருந்தார். (தட்ஸ் தமிழ்)

இதனால் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான புகைச்சல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இந்தப் பின்னணியில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் ஜூன் 10ம் தேதி மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு அல்லது மத்திய அமைச்சர்களை மட்டும் வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவு ஆகியவற்றில் ஒன்று எடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இனி என்ன நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்..

52 comments:

  1. பகையாளியை உறவாடிக்கெடுப்பது என்று ஒரு மெத்தட் இருக்கு . அதுபடி காங்கிரஸ் அதிக இடங்களை தேர்தலில் கேட்டு பெற்று திமுக என்ற மிகப்பெரிய கட்சியையே இல்லாமல் செய்துவிட்டது.
    கனிமொழியை திஹாரில் போட்டபோதே குட்பை சொல்லிருக்கணும் கலைஞர்.

    ReplyDelete
  2. தமிழ் 10ல் என்வோட்டு ஏன் 4 நாட்களாக பதிவாகவே மாட்டேன் என்கிறது?

    ReplyDelete
  3. ஜூன் 10ம் தேதி மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.////

    கூட்டணி இருந்து விலக நல்ல நேரம் பார்க்கிறாங்களா?

    ReplyDelete
  4. /////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    ஐ வடை..
    ///////

    வாங்கியாச்சா..

    ReplyDelete
  5. ///////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    பகையாளியை உறவாடிக்கெடுப்பது என்று ஒரு மெத்தட் இருக்கு . அதுபடி காங்கிரஸ் அதிக இடங்களை தேர்தலில் கேட்டு பெற்று திமுக என்ற மிகப்பெரிய கட்சியையே இல்லாமல் செய்துவிட்டது.
    கனிமொழியை திஹாரில் போட்டபோதே குட்பை சொல்லிருக்கணும் கலைஞர்.
    ///////

    அதான் இந்த முடிவு..ஆனா கொஞ்சம் லேட்..

    ReplyDelete
  6. ////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    தமிழ் 10ல் என்வோட்டு ஏன் 4 நாட்களாக பதிவாகவே மாட்டேன் என்கிறது?
    ////

    எல்லோருக்கும் அப்படித்தான்...
    கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
  7. ////////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    ஜூன் 10ம் தேதி மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.////

    கூட்டணி இருந்து விலக நல்ல நேரம் பார்க்கிறாங்களா?
    ////////


    ஆமாம் போல...

    ReplyDelete
  8. யாருக்கு நட்டம்,யாருக்கு லாபம்?!

    ReplyDelete
  9. பொறுத்திருந்து பார்ப்போம்..........

    ReplyDelete
  10. /////

    சென்னை பித்தன் said... [Reply to comment]

    யாருக்கு நட்டம்,யாருக்கு லாபம்?!
    ///////


    ஏற்கனவே லாபம் பார்த்தாயிற்று...

    ReplyDelete
  11. ஒன்னா கூட்டணியிலேயே இருக்கனும், இல்லைன்னா வெளியேறனும் அத விட்டுட்டு வெளியில இருந்து ஆதரவு, அமைச்சர்கள் மட்டும் ராஜினாமான்னு சீன் போடக் கூடாது, இந்த தடவையாவது உறுதியா ஒரு முடிவு எடுப்பாங்களான்னு பார்ப்போம்...

    ReplyDelete
  12. //////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    பொறுத்திருந்து பார்ப்போம்..........
    ////////
    சரிதான்

    ReplyDelete
  13. இருந்தா என்ன விலகினா இனி என்ன பாஸ்!!

    ReplyDelete
  14. இதே முடிவ இவரு உண்மையான தலைவரா இருந்தா ஈழத்தில உச்சகட்ட போர் நடக்கும்போது எடுத்துருக்கனும், அத விட்டுட்டு தொகுதி பங்கீட்டுக்காகவும் தன் மகள் சிறைக்கு போனதுக்காகவும் காங்கிரஸ மிரட்டுரதுக்குதான் இத பயன்படுத்துறார், இப்போ மத்திய அரசுல இருந்து விலகுனா அது தி.மு.க வுக்கு தான் ஆபத்து.

    ReplyDelete
  15. மக்களின் நலன் கருத யாரும் இல்ல, தம் மக்களின் நலன் கருதியே தலைவரும் கூட.

    ReplyDelete
  16. வர வர கலைஞரின் அரசியல் தி மு க தொண்டர்களையே வெறுப்படைய வைக்கிறது
    கட்சியின் மீதான ஈடுபாடும் குறைந்து கொண்டே வருகின்றது
    இவர் கனிமொழியை பற்றி பேசாமலிருப்பதே நலம்

    ReplyDelete
  17. சோதனை மேல் சோதனையாக உள்ளது.

    எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற ஒரு பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    என்ற பாட்டும் ஞாபகம் வருகிறது.

    பார்ப்போம்.

    ReplyDelete
  18. ரைட்டு...குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலையாம்...இதுக்கு ஒரு திருடர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமா ஹிஹி!

    ReplyDelete
  19. என்னதான் செய்யப் போறாருன்னு பார்ப்போம் .....

    ReplyDelete
  20. காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக விலகி அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் தமிழீழ ஆதரவு குஞ்சுகள் எல்லாம் எங்கே தங்கள் முகத்தை வைத்துக் கொள்வார்கள்? காங்கிரசை திட்டி அம்மா புகழ் பாடிய பித்தர்கள் அப்போது என்ன செய்வார்கள் என்பதை அறிய காத்திருக்கிறேன். (கலைஞரின் அதிகார மோகம் நாமனைவரும் அறிந்ததே. எனவே அவ்வளவு சீக்கிரம் கூட்டணியை விட்டு விலகுவதற்கு வாய்ப்புகள் குறைவு). ஆனாலும் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தன் கூட இருப்பவனுக்கு இரண்டு கண்ணும் போய் விட வேண்டும் என்ற சித்தாந்தத்தை காங்கிரஸ் கனகச்சிதமாக தமிழகத்தில் செயல்படுத்தி விட்டது.

    ReplyDelete
  21. //////
    இரவு வானம் said... [Reply to comment]

    ஒன்னா கூட்டணியிலேயே இருக்கனும், இல்லைன்னா வெளியேறனும் அத விட்டுட்டு வெளியில இருந்து ஆதரவு, அமைச்சர்கள் மட்டும் ராஜினாமான்னு சீன் போடக் கூடாது, இந்த தடவையாவது உறுதியா ஒரு முடிவு எடுப்பாங்களான்னு பார்ப்போம்...
    //////

    பொருத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete
  22. ////////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    இருந்தா என்ன விலகினா இனி என்ன பாஸ்!!
    /////////

    என்ன சிவா இப்படி சொல்லிட்டே...
    குடும்பத்தை காப்பாத்துனமே...

    ReplyDelete
  23. ///////
    Heart Rider said... [Reply to comment]

    இதே முடிவ இவரு உண்மையான தலைவரா இருந்தா ஈழத்தில உச்சகட்ட போர் நடக்கும்போது எடுத்துருக்கனும், அத விட்டுட்டு தொகுதி பங்கீட்டுக்காகவும் தன் மகள் சிறைக்கு போனதுக்காகவும் காங்கிரஸ மிரட்டுரதுக்குதான் இத பயன்படுத்துறார், இப்போ மத்திய அரசுல இருந்து விலகுனா அது தி.மு.க வுக்கு தான் ஆபத்து.
    ////////

    ஆமாங்க..

    ReplyDelete
  24. ////////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    பாக்கலாம் என்ன நடக்குதுன்னு?//////

    பார்ப்போம்...

    ReplyDelete
  25. Ethuvum.nadakkalam.ininadagam. En agum.

    ReplyDelete
  26. //////
    பிரணவன் said... [Reply to comment]

    மக்களின் நலன் கருத யாரும் இல்ல, தம் மக்களின் நலன் கருதியே தலைவரும் கூட.
    //////

    என்ன செய்வது...

    ReplyDelete
  27. அட்டைய போட்ட காசுல பங்கு குடுத்து இருந்தா எல்லோரையும் மாட்டிவிட தலைவருக்கு ஒரு சான்ஸ் ஆனா நடக்குறத எல்லாம் பார்த்தா அவங்களுக்கு சரியா வெட்டி இருக்க மாட்டாங்க போல இருக்கு.

    எவ்வளோ பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டோமா?

    ReplyDelete
  28. சொல்ல மாட்டார்....இப்போதைக்கு மத்திய அரசில் இருந்தால்தான் மாநிலத்தில் ஜெ வை சமாளிக்க முடியும்...

    ReplyDelete
  29. ஈழத்தமிழர்களை கொன்று குவித்தபோதுஆதரவு காட்டியவர்
    மகள் கைதுக்கு காங்கிரசை வஞ்சிப்பது சுயநல முகத்தை அப்பட்டமாக்கியுள்ளது..

    ReplyDelete
  30. numeralogy படி பேரை மாற்றினால் ராசியாக இருக்கும்.இப்போழ்து இருக்கும் இந்த பேராசிரியர்,tutor ,டாக்டர்,compounder போன்ற பட்டங்களை தூக்கி எறிந்துவிட்டு அப்பா அம்மா வைத்த முத்துவேல் கருணாநிதி,ராமையா{அன்பழகன்}என்ற பெயர்களை வைத்து கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்.

    ReplyDelete
  31. ///////
    A.R.ராஜகோபாலன் said... [Reply to comment]

    வர வர கலைஞரின் அரசியல் தி மு க தொண்டர்களையே வெறுப்படைய வைக்கிறது
    கட்சியின் மீதான ஈடுபாடும் குறைந்து கொண்டே வருகின்றது
    இவர் கனிமொழியை பற்றி பேசாமலிருப்பதே நலம்
    ////////

    உண்மைதான் கலைஞர் தற்போது சரியான முடிவெடுக்கும் நிலையில் இருந்து தவறிவிட்டார்...

    ReplyDelete
  32. /////
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    சோதனை மேல் சோதனையாக உள்ளது.

    எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற ஒரு பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    என்ற பாட்டும் ஞாபகம் வருகிறது.

    பார்ப்போம்.
    ///////

    தவறுகள் செய்துவிட்டு யாராலும் தப்பிக்க முடியாது...

    ReplyDelete
  33. ///
    FOOD said... [Reply to comment]

    வந்துட்டேன் பாஸ்,வாக்கிட்டேன்,வருகிறேன். எனக்கு அரசியல்னா ஹி ஹி.
    /////

    அப்ப உணவு என்றால்..

    ReplyDelete
  34. //////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    ரைட்டு...குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலையாம்...இதுக்கு ஒரு திருடர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமா ஹிஹி!
    ///////

    ரைட்டு...

    ReplyDelete
  35. சந்தர்ப்பவாதிகளின் முடிவுகள்
    நம்பிக்கை அற்றவை சுந்தர்.

    ReplyDelete
  36. poruththirunthu paarppoam.....................

    ReplyDelete
  37. கலைஞரின் முடிவு வரவேற்கப் பட வேண்டிய விடயம் சகோ.
    பிறரது அழுத்தங்கள் இன்றித் தனித்துச் செயற்படும் போது தான் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு, தீர்க்கமான முடிவுகளைத் திமுக கட்சியால் எடுக்க முடியும் என நினைக்கிறேன்.

    செய்திப் பகிர்விற்கு நன்றி மாப்பிளே.

    ReplyDelete
  38. அரசியலில் நிரந்தர பகைவனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பது உண்மைதான் போல.

    ReplyDelete
  39. எல்லாரும் நினைப்பதுபோல் காங்.உறவை முறித்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. அது உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என்பதுபோல் ஆகிவிடும். எனவே, மேலும் கொத்தடிமையாக இருப்பதை உணர்த்தும் வகையில்தான் பேசுவார். கனிமொழிக்கைதிற்காகப் போராட்டம் அறிவித்தால் அறியாமையைக் காட்டும். குடும்பத்தினரின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தால் கட்சியும் நாடும் உருப்படும். ஆனால் எக்காரணம் கொண்டும் இத்தகைய நல்ல முடிவு எடுக்கப்பட மாட்டாது. மிக நீண்ட அரசியல் முதிர்ச்சியும் புலமையும் நாநலனும் படைப்புத்திறனும் குடும்பத்தினர் பற்றால் அழிகின்றன. ஆரியத்தின் பக்கம் சாயக்கூடாது என்போரை ஏமாற்றி அவர்களின் தமிழுணர்வும் மழுங்கடிக்கப்படுகின்றன. கழகத்தினர் உணர்ந்து போராடினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    ReplyDelete
  40. ////////
    koodal bala said... [Reply to comment]

    என்னதான் செய்யப் போறாருன்னு பார்ப்போம் .....
    ////////

    பார்ப்போம்..

    ReplyDelete
  41. @Ibnu Halima

    -
    தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி...

    ReplyDelete
  42. ////////
    Nesan said... [Reply to comment]

    Ethuvum.nadakkalam.ininadagam. En agum.
    ////////


    சரிதான்..

    ReplyDelete
  43. /////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    அட்டைய போட்ட காசுல பங்கு குடுத்து இருந்தா எல்லோரையும் மாட்டிவிட தலைவருக்கு ஒரு சான்ஸ் ஆனா நடக்குறத எல்லாம் பார்த்தா அவங்களுக்கு சரியா வெட்டி இருக்க மாட்டாங்க போல இருக்கு.

    எவ்வளோ பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டோமா?
    ////////

    ரைட்டு...

    ReplyDelete
  44. /////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    சொல்ல மாட்டார்....இப்போதைக்கு மத்திய அரசில் இருந்தால்தான் மாநிலத்தில் ஜெ வை சமாளிக்க முடியும்...
    //////////

    இது சரிதான்...

    ReplyDelete
  45. /////////
    கோவி said... [Reply to comment]

    ஈழத்தமிழர்களை கொன்று குவித்தபோதுஆதரவு காட்டியவர்
    மகள் கைதுக்கு காங்கிரசை வஞ்சிப்பது சுயநல முகத்தை அப்பட்டமாக்கியுள்ளது..
    /////

    உண்மை

    ReplyDelete
  46. //////
    vijayan said... [Reply to comment]

    numeralogy படி பேரை மாற்றினால் ராசியாக இருக்கும்.இப்போழ்து இருக்கும் இந்த பேராசிரியர்,tutor ,டாக்டர்,compounder போன்ற பட்டங்களை தூக்கி எறிந்துவிட்டு அப்பா அம்மா வைத்த முத்துவேல் கருணாநிதி,ராமையா{அன்பழகன்}என்ற பெயர்களை வைத்து கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்.
    ////////

    நன்றி...

    ReplyDelete
  47. ///////
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    சந்தர்ப்பவாதிகளின் முடிவுகள்
    நம்பிக்கை அற்றவை சுந்தர்.
    ///////

    உண்மை ஐயா...

    ReplyDelete
  48. //////
    vidivelli said... [Reply to comment]

    poruththirunthu paarppoam.....................
    ////////
    சரி...

    ReplyDelete
  49. /////
    நிரூபன் said... [Reply to comment]

    கலைஞரின் முடிவு வரவேற்கப் பட வேண்டிய விடயம் சகோ.
    பிறரது அழுத்தங்கள் இன்றித் தனித்துச் செயற்படும் போது தான் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு, தீர்க்கமான முடிவுகளைத் திமுக கட்சியால் எடுக்க முடியும் என நினைக்கிறேன்.

    செய்திப் பகிர்விற்கு நன்றி மாப்பிளே.
    /////////

    நன்றி..

    ReplyDelete
  50. //////
    ராஜி said... [Reply to comment]

    அரசியலில் நிரந்தர பகைவனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பது உண்மைதான் போல.
    ///////

    இதுக்கு சொல்லலாம் ரைட்டு...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...