மழையில்லை
அதனால்
தண்ணீருக்கு பஞ்சம்...
உழவு இல்லை
அதனால்
நெல்லுக்கு பஞ்சம்...
ஆனால்
பாலுக்கு பஞ்சமில்லை
ஆம்
எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...
தற்போதைய சூழலில் பெண் சிசுகொலை நம்நாட்டில் இல்லையென்றே நினைக்கிறேன். இல்லாமல் இருக்கவே வேண்டுகிறது மனம். இதுவரை குழந்தை பிறந்தவுடன்தான் பிறந்தது என்ன குழந்தையென்று தெரியவரும். ஆனால் தற்போது 3-வது மாதத்திலேயே ஸ்கேன் எடுத்து கருவில் உள்ளது என்ன குழந்தை என்று தெரிந்துக்கொள்கிறார்கள். அது ஆண் குழந்தையாக இருந்தால் பிரச்சனையில்லை அதுவே ஒரு பெண் குழந்தை என்று தெரிந்து விட்டால் அந்த குழந்தை பிறக்கும் நாளுக்குள் அதன் மீதுள்ள மகிழ்ச்சியும் ஆர்வமும் குறைந்து விடுகிறது.
குழந்தை பிறந்து பிரசவம் பார்ப்பவர்கள் வந்து சொல்லும் வரை 10 மாதங்களாக இருக்கும் ஆர்வம், தவிப்பு, எதிர்பார்ப்பு போன்ற அறிய உணர்வுகளை தற்போதெல்லாம் கருவுற்ற மூன்று மாதத்திலேயே தீர்ந்து போய்விடுகிறது. கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கு வசதியை அரசு தடைச் செய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. ஆர்வக்கோளாராக தொடங்கும் இந்த விஷயம் பிரசவக்காலத்திற்க்குள் பல்வேறு பிரச்சனை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகள் எதிர்காலத்தை உறுவாக்கும் அட்சய பாத்திரங்கள். நாளையை தீர்மானிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள், பாலின பாகுபாடு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இந்த பூவுலகின் வடிவமைப்புக்கும் இரண்டுதரப்புமே மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும். நாளை உலக எதிர்க்கொள்ள மட்டும் பயிற்ச்சிக் கொடுப்போம்.
ஆணோ பெண்ணோ
குழந்தையில் என்ன இருக்கிறது...
அன்பையும்... பாசத்தையும்...
பகிர்ந்துக் கொள்ள...
ஆனால்
ReplyDeleteபாலுக்கு பஞ்சமில்லை
ஆம்
எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...//
இதே நிலமை இப்போது எங்களூர்களிலும் பரவி வருகிறது பாஸ்,
இன்றைய உலகில் தத்தம் இன்பம் முடிந்ததும்,
தவறாத் தரிக்கும் குழந்தைகளைக் கொல்லுவதிலே பலர் குறியாக இருக்கிறார்கள்.
குவா குவா
ReplyDeleteஆணோ பெண்ணோ
ReplyDeleteகுழந்தையில் என்ன இருக்கிறது...
அன்பையும்... பாசத்தையும்...
பகிர்ந்துக் கொள்ள...//
நியாயமான கேள்விகள். காலதி காலமாக எமது சமூகத்தில் வழக்கிலிருக்கும் சீதனம்- சீர்வரிசை முதலிய விடயங்களும்,
பெண் குழந்தையினைப் பெறுகையில் அது வளர்ந்து வரும் நாளில் குழந்தைக்கு நிறையப் பணம் செலவழிக்க வேண்டி வருமே என்கின்ற ஒரு முட்டாள்தனமான மூட நம்பிக்கையும்,
பெண் குழ்ந்தை எதிர்காலத்தில் பெற்றோருடன் இருக்காது,
திருமணம் முடித்ததும் மாப்பிளை வீட்டிற்குச் சென்று விடுவதால் தம்மைக் கடைசிக் காலத்தில் பார்க்க யாரும் இல்லையே எனும் பெற்றோர்களின் விரக்தியின் வெளிப்பாடுகள் தான் இதற்கான காரணம் என நினைக்கிறேன்.
இந்த நிலை மாற வேண்டும்.
ஆணோ பெண்ணோ எதுவென்றாலும் சமம் அப்படிங்கிற உணர்வு இருந்தா போதும் :-)
ReplyDelete//ஆனால்
ReplyDeleteபாலுக்கு பஞ்சமில்லை
ஆம்
எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...
//பெண்குழந்தைகளைக் கொல்லுவதிலே பலர் குறியாக இருக்கிறார்கள்.
முன்பு இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை நண்பா... ஆனால் இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு மிக்க கவிதை நண்பா சூப்பர்.
ReplyDeleteஎந்த குழந்தையானாலும் எதிர்கால திட்டமிடல் தான் முக்கியம். . .எதுவாக இருந்தாலும் பெண்குழந்தை என்றால் முகம் சுழிக்கும் பலர் தான் இன்னமும் நம்மிடையே இருகின்றனர். . .
ReplyDeleteநல்ல சமூக விழிப்புணர்வு பதிவு .கவிதைகளும் அருமை .
ReplyDelete//ஆணோ பெண்ணோ
ReplyDeleteகுழந்தையில் என்ன இருக்கிறது...
அன்பையும்... பாசத்தையும்...
பகிர்ந்துக் கொள்ள...
இங்கே தடையாய் இருப்பது
பணம்
பாதுகாப்பு
ஒழுக்கம்
முன்பிருந்த அளவு இல்லையென்றாலும் கிராமப்புறங்களில் இன்னும் குறையவில்லை. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஎனக்கு தெரிந்து இன்றைய சுழலில் பலரும் பெண் குழந்தையை தான் விரும்பிகிறார்கள்.
ReplyDeleteநெத்தியடியான கவிதை
ReplyDeleteநிஜ வரிகள் எல்லோரும் உணர வேண்டிய விடயம் இது
அட்சயபாத்திரங்க்ளை அழிக்கும்
ReplyDeleteஅருவருப்பான செயல்கள் அழியட்டும்.
முன்பு இருந்ததை காட்டிலும் குறைந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை. மேலும் சில மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினத்தை அறிய்வதை அனுமதிப்பதில்லை. எல்லா மருத்துவமனைகளும் இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது.
ReplyDelete//குழந்தைகள் எதிர்காலத்தை உறுவாக்கும் அட்சய பாத்திரங்கள். நாளையை தீர்மானிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள், //
ReplyDeleteஇதை அனைவரும் உணர்ந்தால் பிரச்சினை குறையும்.
பதிவர்களுக்கு உள்ள பொறுப்பை சரியாய் செய்கிறிர்கள்
ReplyDelete\\பாலின பாகுபாடு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இந்த பூவுலகின் வடிவமைப்புக்கும் இரண்டுதரப்புமே மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும். \\
ReplyDeleteபாலின விகிதாச்சாரம் அதிகரிக்கும் நாள் வருமாயின் அது ஒரு பெரிய கலாச்சார சீர்கேட்டிற்கும்,பாலியல் வன்முறை பெருகுவதற்கும் வித்திடும்.--அழுத்தமான பதிவு
கவிதை நச்சென்று இருக்கிறது பாஸ்!!
ReplyDeleteபதிவு கவிதையுடன் ஒன்றிணைந்து அட்டகாசம்!!!
ReplyDeleteநிதர்சன உண்மைகள்!!
கவிதை மற்றும், கட்டுரை அருமை நண்பா..
ReplyDeleteபெண்ணென்ன ஆணென்ன
ReplyDeleteஇதிலென்ன பேதம்?
எண்ணங்கள் மாறினால் எல்லாமே
நன்றாகும்!
கவிதை மட்டும் சிறியதாம்-சொன்ன
ReplyDeleteகருத்தோ மிக்க பெரியதாம்
செவியில் ஏற்க உரியதாம்-செளந்தர்
செப்பிய முற்றும் சரியதாம்
கள்ளிச் செடிகள் அதிகமே-அதில்
கறப்போர் பாலை விகிதமே
சொல்லி சொல்லி குறைந்ததே-இன்று
சோகம் கொஞ்சம் மறைந்ததே
நன்றி செளந்தர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
அன்பின் சௌந்தர் - சிந்தனை நன்று - அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் - சிசுக் கொலை முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அரசு இன்னும் முயலட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete