கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 June, 2011

ஜாக்சனின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர்ச்சி தகவல் வெளியீடு


யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.
(தினமலர்)

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

21 comments:

  1. ஜாக்சனின் மரணத்தை இப்போதுகூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை ......ஜாக்சனின் இடத்தை நிரப்புவது .......யாராலும் இயலாது என்றே தோன்றுகிறது

    ReplyDelete
  2. legends live forever ...
    we really miss u mj

    ReplyDelete
  3. ////
    koodal bala said... [Reply to comment]

    vadai now
    ////////

    வச்சிக்கோ...

    ReplyDelete
  4. அவர் எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி சார்...
    அப்பிடி ரசிகர்கள் நாங்க....

    ReplyDelete
  5. இனி கண்டுபிடிச்சு என்ன பண்ண சார்...

    ReplyDelete
  6. நம்ம கடைக்கும் வந்து போங்க பாஸ்

    ReplyDelete
  7. என்னது அதிர்ச்சி தகவலா?

    ReplyDelete
  8. விசாரித்தும் என்ன பலன். ஜாக்ஸன் இப்ப இல்லையே
    எனது இன்றைய பதிவுக்கு கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ஆண்டாண்டு காலாம் அழுது
    புரண்டாலும்
    மாண்டார் வருவதில்லை
    மாநிலத்தில்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. //////
    koodal bala said... [Reply to comment]

    ஜாக்சனின் மரணத்தை இப்போதுகூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை ......ஜாக்சனின் இடத்தை நிரப்புவது .......யாராலும் இயலாது என்றே தோன்றுகிறது
    /////////

    உண்மைதான்..

    ReplyDelete
  11. /////
    ரியாஸ் அஹமது said...

    legends live forever ...
    we really miss u mj////

    வாங்க அஹமது...

    ReplyDelete
  12. ////
    மைந்தன் சிவா said...

    அவர் எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி சார்...
    அப்பிடி ரசிகர்கள் நாங்க....////

    காலத்தால் அழியாதவர்..

    ReplyDelete
  13. ////
    தினேஷ்குமார் said...

    நம்ம கடைக்கும் வந்து போங்க பாஸ்////////

    பணி பலு காரணமாகவே வரமுடியாமல் போகிறது கண்டிப்பாக வருகுகிறேன் நண்பரே..

    ReplyDelete
  14. பிரபலங்களின் மறைவிற்கு பின்னால், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  15. ஜாக்சனின் மரணத்தை யாராலும் மறக்க முடியாது .
    இவரின் இடத்தை நிரப்ப யாரால் முடியும்

    ReplyDelete
  16. என்ன செய்வது எங்களைப் போன்ற பிரபலங்கள் என்றாலே எப்போதும் சர்ச்சைதான்..:)

    ReplyDelete
  17. எமக்கு ஆங்கிலப் பாடல்களிலும் ஒரு மோகத்தை ஏற்படுத்தியது இந்தப் பாடகரின் பாடல்கள்தான்.என்றும் மறக்க முடியாத நினைவுகள்!!!...
    பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...