கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 September, 2011

மதிய உணவில் இப்படியும் நடக்கிறது... பள்ளியில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம்...


என்னைச்சுற்றி நடக்கும் சில சம்பவங்களை அதன் அனுபவங்களை இங்கே உங்க‌ளோடு பகிர்ந்துக் கொள்ள நான் பெருமை அடைகிறேன்.

சில சம்பவங்கள் பார்ப்பதற்க்கும் கேள்விப்படும்‌போதும் மிகவும் சாதாரணமாக இருக்கும் அதன் உள்ளர்த்தம் பார்க்கும் போது மிகவும் அற்புதமானதாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இன்று தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமம் (இது பெயர்பெற்ற பெரியபாளையம் அருகில் இருக்கும் ஒரு கிராமம்) அங்கு எனது நண்பர் திரு விஜயக்குமார் என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் வேலைசெய்யும் அப்பள்ளி ஒரு 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருக்கும் ஒரு தொடக்கப்பள்ளி ஆகும் தற்போது அப்பள்ளியில் 120 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

மதிய வேளையில் மாணவ மாணவியருக்கு உணவு ஏற்பாடுகளை சிறப்புற செய்து பறிமாறுவது இவரது வழக்கம். பொதுவாக உணவு இடைவேளை 12-45 மணிக்கு விடப்படும். சத்துணவு தயாரிக்கும் பணியை இவரது கீழ் உள்ள பணியாளர்கள் காலை 10-00 மணிக்கு செய்ய தொடங்கிவிடுவார்கள். சமையல் வேலைகள் பிற்பகல் 12-00 மணிக்கு முடிந்து விடும்.

நண்பரின் உத்திரவின்படி இப்பணியில் ஈடுபடும் இவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் யாரவது ஒருவர் 12-15 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் என் நண்பரும் உணவருந்துவாராம். இது தினசரியாக நடந்துக் கொண்டு இருக்கிறது.

இவரிடம் இதற்கான விளக்கம் கேட்டேன். என்இந்த வழக்கம் என்று அதற்க்கு அவர் கூறும் விளக்கம்.
நாங்கள் தயாரிக்கும் உணவை கிட்டதட்ட 100 அல்லது 110 குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். நாங்கள் சமைக்கும் உணவுவில் ஏதாவது தேவையில்லாத மாற்றங்கள் (தீய) இருந்தால் முன் கூட்டியே அறிந்துக் கொள்ளவே  நாங்கள் அரை மணி நேரத்திக்கு முன்னதாக அந்த உணவை உண்ணுகிறோம். அப்படி உணவில் ஏதாவது இருந்தால் அது அடுத்த ‌அரை மணி நேரத்திற்க்குள் தெரிந்து விடும். குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் வராகூடாது என்பதற்க்காகவே அந்த முறையை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறேபம் என்றார்.. எனக்கு புல்லரித்தது.


ஏன் ‌இது போன்று செய்கிறோம் 
 • உணவில் பல பிரச்சனைகள் வரலாம். 
 • அரசியில்  கண்ணுக்கு தெரியாத விஷ பூச்சிகள் இருக்கலாம்.
 • சமையல் எண்ணை தரமற்றதாக இருந்திருக்கலாம்.
 • பருப்பில் சில உடம்புக்கு ஒவ்வாத பருப்புகள் கலந்திருக்கலாம்.
 • தண்ணீர் ஏதாவது வைரஸ் பரவியிருக்கலாம்.
 • சமைக்கும்போது ஏதாவது விழுந்திருக்கலாம்...
என அடுக்கிக் கொண்டே போனார்.

குழந்தைகள் மீது அக்கறைக் கொண்டும் அவர் பின்பற்றிவரும் இந்த செயல் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. கூடவே இவரது பள்ளியில் மாணவர்களுக்கு பந்திப்போன்று அமர வைத்துதான் உணவுப்பரிமாறுகிறார்.

குழந்தைகளின் நலனில் அக்கரைக்கொண்டு செயலாற்றினால் அதன்முலமாக எழும் பிரச்சனைகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். இதை அனைத்து பள்ளி சத்துணவு அமைப்பாளர்களும் பின்பற்றினால் நன்றாகத்தானே இருக்கும்.

அப்படி சாப்பிடும் உணவில் ஏதாவது இருந்து விஷத்தன்னை இருந்து தங்களுக்கு ஏதாவது ஏற்ப்பட்டால் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர்தந்தப்பதில்...

அது எங்களோடு போய்விடும்.. குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.. எங்களுக்கு குழந்தைகளில் ஆரோக்கியமே முக்கியம் என்று கூறுகிறார்...

இவர் எனக்கு நண்பராக கிடைத்துள்ளது பாக்கியம் தானே....


இந்த ஆசிரியர் தினத்தில்... அவர் கொண்டுள்ள கொள்கைக்கு
ஒரு ஆசிரியராக நான் தலைவணங்குகிறேன்....


50 comments:

 1. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்காங்க என்று நினைத்து பெருமைப்படுகிறேன் மாப்ள...பகிர்ந்த உமக்கு நன்றிகள்!

  ReplyDelete
 2. குழந்தைகள் மீது அக்கறைக் கொண்டும் அவர் பின்பற்றிவரும் இந்த செயல் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.

  !!!!!!

  எனக்கும் தான்.

  ReplyDelete
 3. இந்த ஆசிரியர் தினத்தில் ஒரு ஆசிரியராக அவர் கொண்டுள்ள கொள்கைக்கு நான் தலைவணங்குகிறேன்....

  ReplyDelete
 4. இந்த ஆசிரியர் தினத்தில் ஒரு ஆசிரியராக அவர் கொண்டுள்ள கொள்கைக்கு நான் தலைவணங்குகிறேன்....

  ReplyDelete
 5. எனது பதிவிலும்

  இன்று ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்

  வாருங்கள் நண்பா..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

  ReplyDelete
 6. மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் !

  ReplyDelete
 7. இவர் ஓர் மனிதருள் மாணிக்கம்..

  ReplyDelete
 8. நெகிழ்கிறது மனம். வணங்குகிறோம் அவரை.

  ReplyDelete
 9. சிறப்பான இடுகை சௌந்தர்... கண்டிப்பாக போற்ற பட வேண்டியவர் திரு.விஜயகுமார் அவரிடம் என் வாழ்த்துக்கள் சொல்லி விடுங்கள்...

  ReplyDelete
 10. இந்த ஆசிரியர் தினத்தில் ஒரு ஆசிரியராக அவர் கொண்டுள்ள கொள்கைக்கு நான் தலைவணங்குகிறேன்../

  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. HATS OFF TO THAT TEACHER.....
  GOOD NEWS

  ReplyDelete
 12. திரு.விஜயகுமார் அவர்களுக்கு எனது வந்தனங்களும், வாழ்த்துகளும்..

  ReplyDelete
 13. உங்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 14. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 15. அந்த இனிய நண்பருக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 16. ஒ போடுகிறேன்..

  ReplyDelete
 17. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பா..

  ReplyDelete
 18. உங்கள் நண்பருக்கு ஜே...ஜே...

  ReplyDelete
 19. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 20. குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் இப்பவும் இருக்கத்தான் இருக்காங்க. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. //அது எங்களோடு போய்விடும்.. குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.. எங்களுக்கு குழந்தைகளில் ஆரோக்கியமே முக்கியம் என்று கூறுகிறார்...

  இவர் எனக்கு நண்பராக கிடைத்துள்ளது பாக்கியம் தானே...//

  இவர் ஆசிரியராக கிடைத்துள்ளது பாக்கியம் . வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 22. உண்மையில் நெகிழ வைக்கிறது...

  பாராட்டுக்கள்...

  ReplyDelete
 23. திரு. விஜயகுமார் அவர்கள் ஆசிரியராக அமைந்தது அந்த பள்ளியும் மாணவர்களும் செய்த பாக்கியம். அவருக்கு என் வணக்கங்கள். அரிய மனிதரைப் பற்றி அனைவரும் அறியப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 24. இது நல்ல முயற்சி.ந்ண்பருக்கு வாழ்த்துக்கள்.இதை மற்ற பள்ளீகளிலும் பி்ன்பற்றலாமே? காலிங்கராயர்

  ReplyDelete
 25. இந்தக்காலத்துல இப்படி ஒரு மனிதரா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே! வாழ்த்துக்கள் அவருக்கு!

  ReplyDelete
 26. ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 27. நிச்சயம் நண்பரே
  அவரை நீங்கள் நண்பராகப் பெற்றது புண்ணியமே...
  தூரத்தில் இருந்தாலும்
  அவரின் பனிமலர் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
  வாழிய அவர் பல்லாண்டு.

  ReplyDelete
 28. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
  நண்பரின் பனி சிறப்புடன் அமையட்டும்.
  நன்றி...

  ReplyDelete
 29. நிச்சயம் இது வெகுவாக பாராட்டப்படவேண்டிய விஷயம். ஒரு முன்மாதிரி செய்கையும் கூட.

  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 30. தலை வணங்குகிறேன்

  MAhes

  ReplyDelete
 31. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்!அதைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 32. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 33. தாங்கள் இதுவரை எழுதியதில் இப்பதிவு மிகவும் குறிப்பிடத்தக்கது. நண்பர் விஜயகுமாருக்கும், உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!!

  ReplyDelete
 34. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. அரை மணி நேரத்திக்கு முன்னதாக அந்த உணவை உண்ணுகிறோம். அப்படி உணவில் ஏதாவது இருந்தால் அது அடுத்த ‌அரை மணி நேரத்திற்க்குள் தெரிந்து விடும். குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் வராகூடாது என்பதற்க்காகவே அந்த முறையை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறேபம் என்றார்.. எனக்கு புல்லரித்தது//

  உண்மையில் இவருக்கு ஒரு சலூட்.அப்பறம் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. பாராட்டப்படவேண்டிய நபர். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. நல்ல நண்பருக்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.

  ReplyDelete
 38. அன்பரே!
  மனித நேயமிக்க அந்த
  மனிதரை வாழும் தெய்வமாக
  நான் வழிபடுகிறேன்
  நல்ல பதிவுக்கு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 39. மிகவும் ஆச்சரியமாகவும், அரிதாகவும் இருக்கிறது இந்த நிகழ்வுகள் . இன்றைய நிலையிலும் இப்படியா என்று . பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 40. மனிதம் இன்னும் சாகவில்லை.........

  ReplyDelete
 41. நல்ல முன்னுதாரணம் பாஸ்!!நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்யிறாங்க!

  ReplyDelete
 42. அன்பின் சௌந்தர் - நண்பர் விஜயகுமார் செய்யும் மகத்தான தொண்டு பாராட்டத் தக்கது. பின்பற்ற வேண்டிய ஒன்று. அவருக்கும் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 43. பொறுப்புணர்வோடும், முன்யோசனையோடும் செயல்படும் உங்கள் நண்பருக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 44. உயரிய செயல்பாட்டினை சிறப்பாகப் பதிவு செய்த உங்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 45. மாணவர்களை தன் குழந்தைகளாக பாவிக்கும் ஆசிரியர். . .அருமை. . .

  ReplyDelete
 46. ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ. இப்பேற்பட்ட் சிலர் இருப்பதால்தான் மழை பொழியுது..,

  அவருக்கும் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 47. சந்தோசமா இருக்கு! பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 48. இவர்களை போல் சில ஆத்மாக்களால் தான் நாட்டில் சில நன்மைகளும் நடக்கிறது! அவருக்கு தலைவணங்குகிறேன். வடமதுரையில் என் உறவினர்களும் இருக்கிறார்கள் போனது தான் இல்லை!

  ReplyDelete
 49. நானும் வாழ்த்துகிறேன்
  நல்ல விசியம்
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...