கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 October, 2011

உண்மை காதலுக்கு உசுர கொடுக்கலாம்.. இந்த காதலுக்கு...


உன்னை  மறந்து 
விழிகள் தூங்கினாலும்...
இதயமொன்னவோ
விழித்துக் கொண்டுதான் இருக்கிறது...

############################################################


எனக்குத் தெரியாமலே 
ஏதேதோ நடந்து விடுகிறது...
காதல் உள்பட... 

############################################################


வார்த்தை வசமிருந்தும் 
“கவிதை“ எழுதவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்காதாம்...

############################################################


 உன்னிடம் 
நிறைய பேச வேண்டும்
ஒரே வார்த்தையில்....

############################################################

 
 
எவ்வளவு நேரம்
என்றாலும்
உனக்காக காத்திருப்புகள்
எனக்குள் சுகமானவை...

############################################################ 

 

பயமில்லை...!
வலிக்கு பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 

பயந்திருக்க வேண்டும்..

############################################################


காதல் மென்மையானது
ஒரு துளி கண்ணீர் கூட
அதற்கு சுமைதான்...
###########################################################

படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..
கவிதை என்னுடைய காதல் கவிதைகள்....
படங்கள் நாட்டுக்கு கேடான சங்கதிகள்...

இந்தமாதிரியான காதலை ‌என்னவென்று சொல்வது....

35 comments:

 1. இது மக்களின் காதல் அல்ல. மாக்களின் காதல்.

  ReplyDelete
 2. உண்மைதான் நண்பா..
  உண்மைக் காதல் செத்துப் போய் பலநாளாச்சு..

  அங்கொன்றும் இங்கொன்றுமாய்
  குற்றுயிராய் வாழ்ந்துகொண்டிருக்கிறது உண்மைக்காதல்..

  மருத்துவமனையில்..

  தீவிர சிகிச்சைப்பிரிவின் நோயாளிபோல..

  ReplyDelete
 3. இதுக்கு பேரு காதலா..இல்ல உடல் பசியா!

  ReplyDelete
 4. பனிக்காலத்தில் ஐய்ஸ்கிரீம் சாப்பிட்டதைப்போல
  கவிதைக்கும் படங்களுக்குமான முரண்பாடு
  ரசிக்கும் படியாக இருக்கிறது
  உண்மைக் காதலை உணரும்படியாகவும் செய்கிறது
  நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கவிதைகள் மிகவும் அருமை....

  படங்களை பத்தி என்ன சொல்றது. உண்மை காதல்னா எதாச்சும் சொல்லலாம் இந்த காதலுக்கு????

  இன்று என் வலையில் விண்டோஸ் 7 இரகசியங்கள்...
  http://vigneshms.blogspot.com/2011/10/7.html

  ReplyDelete
 6. கவிதைகள் மிகவும் அருமை....

  படங்களை பத்தி என்ன சொல்றது. உண்மை காதல்னா எதாச்சும் சொல்லலாம் இந்த காதலுக்கு????

  இன்று என் வலையில் விண்டோஸ் 7 இரகசியங்கள்...
  http://vigneshms.blogspot.com/2011/10/7.html

  ReplyDelete
 7. படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..
  கவிதை என்னுடைய காதல் கவிதைகள்....
  படங்கள் நாட்டுக்கு கேடான சங்கதிகள்.../

  நல்ல வேளை சொன்னீர்கள்.

  ReplyDelete
 8. கவிதைகளுக்கும் படங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனிலும் ரெண்டுமே நச். அட, நம்ம கூட்டணிக்கும் ஆள் இருக்கு... இந்த காதல் மட்டுமில்ல சார், உண்மை காதல்ல்னா என்னன்னு கூட எங்களுக்கு இன்னும் புரியல.

  அகாதுகா அப்பாடக்கர்ஸ்: காதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு

  ReplyDelete
 9. //படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..//
  படங்களுக்கு,ம் உங்களுக்கும் கூட சம்பந்தமேயில்லைன்னு நினைக்கிறேன்.ஹா ஹா ஹா.

  ReplyDelete
 10. அழகு கவிதை

  ReplyDelete
 11. //உண்மை காதலுக்கு உசுர கொடுக்கலாம்.. இந்த காதலுக்கு...//

  சமபந்தபட்டவங்கதான் பதில் சொல்லணும்.

  கவிதைகள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 12. பளிச்சென்ற கவிதைகள். படங்களில் இருக்கும் காதலை துரோகக் காதல் அல்லது நாய்க்காதல் என்று சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 13. படத்துக்கு கவிதை சூப்பர். தமிழ்மணம் ஏழு

  ReplyDelete
 14. கவிதைகளை ரசித்தேன்! அருமை!!

  படங்கள் நிஜமானவை அல்ல! ச்சும்மா காமெடிக்காக எடுக்கப்பட்டவை! உலகில் எந்த நாட்டில் இப்படி நடைபெறுகிறது என்று விபரிக்க முடியுமா, சௌந்தர் சார்???

  ReplyDelete
 15. சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 16. அருமை !.....இன்று காதலின் நிலையே இதுதான் .மிக அழகாக
  வித்தியாசமாய் யோசித்து உண்மையையும் போலியையும்
  கவிதைவரிகளுடன் சிறப்பான புகைப்பட விளக்கத்தையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள் .பாராட்டுகள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

  ReplyDelete
 17. இந்தக்காதலுக்கு ................கூட கொடுக்க முடியாது
  (புள்ளிக்கோட்டில் வரும் வசனம் சென்சார்)

  படங்கள் சூப்பர் கவிதையும் சூப்பரோ சூப்பர் பாஸ்

  ReplyDelete
 18. கவிதை நல்லா இருக்கு, படங்கள் ஹி ஹி'யா இருக்கு...!!!

  ReplyDelete
 19. கவிதை நல்லா இருக்கு

  இதுக்கு பேரு காதலா.

  ReplyDelete
 20. எனக்குத் தெரியாமலே
  ஏதேதோ நடந்து விடுகிறது...
  காதல் உள்பட...
  அருமையான் வரிகள் சகா. . .

  ReplyDelete
 21. கலி முத்திப் போச்சு நண்பா
  இப்போ காதலும் பார்ட் டைம் ஒர்க் தான்

  ReplyDelete
 22. காதல் கவிதைகள் அருமை...
  படங்கள்... இப்போ நடப்பதை அப்பட்டமாய் காட்டியது.

  ReplyDelete
 23. எனக்குத் தெரியாமலே
  ஏதேதோ நடந்து விடுகிறது...
  காதல் உள்பட... //
  சுடும் உண்மை.

  படம்தான் மிரள வைக்கிறது. இவர்களுக்கு காதல் என்றா பெயர் சூட்டுவது.

  ReplyDelete
 24. உன்னிடம்
  நிறைய பேச வேண்டும்
  ஒரே வார்த்தையில்....//


  ஆஹா!
  ///

  படங்கள்!

  என்னய்யா நடக்குதிங்க?

  ReplyDelete
 25. நறுக்குகள் வடிவில் காதலைச் சொல்லி நிற்கும் நல்ல கவிதைகள் பாஸ்.

  ReplyDelete
 26. அன்பின் கவிதை வீதி சௌந்தர் - படங்கள் அருமை ( ??? ) - கவிதையும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 27. கவிதை வரிகள்
  ஒவ்வொன்றிலும் உண்மையான காதல்தான்....
  படங்களிலும் ஒருவரின் காதல் உண்மையாகத்தான் இருக்கிறது....
  ஆனாலும் குண்டக்க மண்டக்க... சூப்பர் பதிவு...

  ReplyDelete
 28. படங்களே கவிதையாகத்தான் இருக்கின்றன.நல்ல செலெக்சன்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...