உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தொற்றிக் கொண்டது தமிழகத்தில் பரபரப்பு. மனுதாக்கள் முடிந்து சின்னங்கள் அறிவித்தப்பின் வேட்பாளர்கள் தங்களுடைய சின்னத்தை அறிமுப்படுத்த மற்றும் ஓட்டு கேட்க கடும் பாடு இருக்கிறதே... அவர்கள் காட்டும் பரபரப்பு மற்றும் விளம்பர படுத்தும் யுக்திகள் உண்மையில் சுவாரஸ்யம்...
மாலை நேரம் ஆனால் போதும் ஓவ்வோறு அரை மணி நேரத்திற்கும் ஒரு வேட்பாளர் தன்னுடைய படை சூழ புறப்பட்டு விடுகிறார். ஒளி பெருக்கிமூலமும், ஒரு சில வாண்டுகளையும் அழைத்துக் கொண்டும் அமர்க்களப்படுத்துகிறார்கள்.
ஒவ்வோறு வீட்டு வாசலிலும் தேர்தலில் நிற்கும் வார்டு உறுப்பினர், தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் என அத்தனைப்பேருடைய துண்டு பிரச்சுரங்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் இந்த துண்டு பிரசுரங்கள் தான்.
இதில் நகைச்சுவை என்னவென்றால்... நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, துப்புறவு போன்ற வேலைகளை செய்வேன் என்று அறிக்கை விடுகிறார்கள். ஒரு உள்ளாட்சி அமைப்புகளின் வேலையே இதுதான் அதை நான் செய்வேன் என்று ஏதோ புதுமையாய் சொல்வது போல் பழைய பல்லவிகளையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையாக சொல்லி யாரும் ஓட்டு கெட்ட மாதிரி எனக்கு தெரியவில்லை.
17-ந் தேதி வாக்கு பதிவிற்க்கு 15 ஆம் தேதியுடனும், 19 ந் தேதி வாக்கு பதிவுக்கு 17-ந் தேதியும் பிரச்சாரம் முடிவடைகிறது. ஒரு சில நாட்களே இருக்கும் தருவாயில் பிரச்சாரம் அனல் பரக்கிறது. ஊரில் வேலைவெட்டியில்லாத அனைவரும் தற்போது வேட்பாளராக களத்தில் உள்ளார்கள்.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு நேரம் போவது தெரியாது என்றாலும் நாள்முழுக்க இவர்கள் இம்சை தாங்க முடியவில்லை. தெருவெங்கும், வீடுகளெங்கும், பார்க்குமிடமெங்கும் வேட்பாளர் முகமும் சின்னமும்தான் பளிச்சிடுகிறது. இதையெல்லாம் சரிசெய்ய நாம் படும்பாடு அவர்களுக்கு என்ன தெரியும். தற்போது எவ்வளவு செலவு செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் சம்பாதித்து விடப்போகிறார்கள்
வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.. (அப்படியாரும் எங்கள் பகுதியில் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.. )
//வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு..//
ReplyDeleteஜனநாயக கடமையை சரியாக செய்வோம்
நன்றியுடன்
சம்பத்குமார்
அனைவரும் வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு..
ReplyDelete\\\ஒரு உள்ளாட்சி அமைப்புகளின் வேலையே இதுதான் அதை நான் செய்வேன் என்று ஏதோ புதுமையாய் சொல்வது போல் பழைய பல்லவிகளையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்\\\ அதைக்கூட சரியாக செய்வதில்லை பலர் ...
ReplyDeleteவாக்கு போட்டாத்தானய்யா நாக்கு மூலமா கேள்வி எழுப்ப முடியும்....ஓட்டே போடாம எப்படி அவர்களை கேள்வி கேற்ப்பது...எனவே முதலில் தவறாது ஓட்டளிப்போம்!
ReplyDeleteதேர்ந்தெடுக்கப்பட்டால் சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, துப்புறவு போன்ற வேலைகளை செய்வேன் என்று அறிக்கை விடுகிறார்கள். ஒரு உள்ளாட்சி அமைப்புகளின் வேலையே இதுதான்
ReplyDelete//
இதெல்லாம் எங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சுன்னு சொல்றாங்களோ ?
எப்படியும் தேர்தலுக்கு அப்பறம் மறந்துடுவாங்க.
பத்து நாட்களக தெருவெங்கும் குப்பைகள் கோபுரமாகக் கிடக்கிறது
ReplyDeleteவெட்கக் கேடு!
புலவர் சா இராமாநுசம்
சிந்திப்போம் செயல்படுவோம்
ReplyDeleteகாங்கிரஸ் கட்சி அடித்திருக்கும் நோட்டீஸ், ''ஈ கொசு ஆடு மாடு போன்றவை நகருக்கு வெளியே கொண்டு போய் விடப் படும்.. ''
ReplyDelete//
ReplyDeleteவாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.//
கண்டிப்பா
வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.
ReplyDeleteசிந்திப்போம்...
ReplyDeleteசெயல்படுவோம்...
நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்
ReplyDelete//
வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.. (அப்படியாரும் எங்கள் பகுதியில் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.. ///
இதான் உண்மை
வாக்களிக்க மறக்காம போய்விடுவேன் ஏன் என்றால் நியாயமானவர்களை நல்லவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்
ReplyDeleteவாக்களிக்க மறக்காம போய்விடுவோம் ஏன் என்றால் நியாயமானவர்களை நல்லவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்
ReplyDeleteவேலை வெட்டியில்லாத பலரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். -நல்லாச் சொன்னீங்க... இருக்கறதுல நல்லவங்க யாருன்னு பாத்து கட்டாயம் ஓட்டுப் போடுவோம்.
ReplyDeleteகடமையை செய் பலனை எதிர்பாராதே...!!!
ReplyDeleteவெளிநாட்டுல இருக்குற எங்கள் ஓட்டுகள் கள்ள ஓட்டா மாறப்போகுதுங்கோ...!!!
ReplyDeleteஆமா, தாங்க முடியல சாமி..
ReplyDeleteவீட்டுக்கு ஒரு ஆள் வேட்பாளரா நிக்கறாங்கப்பா!!!
ReplyDeleteகரெக்ட்.
ReplyDeleteenna seyya
ReplyDeletesinthiththu than seyalpadanum
அனைவரும் வாக்களிப்போம்.. ஓரளவு நல்லவங்கன்னு நினைக்கிறவங்களுக்கு.. வேற வழி...
ReplyDeleteஇம்முறை சுயேட்சைகள் வேறு அதிகம்!!
ReplyDeleteபார்ப்போம்... என்னதான் முடிவு என்று!!
நல்ல தொகுப்பு நண்பரே!
கரண்ட் ஆப் ஆனாலும் அவங்க பிரச்சாரம் ஆப் ஆக மாட்டிங்குது
ReplyDeleteநீங்கள் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஒ{ளி} பெருக்கி மூலம் கேட்டால் ஓட்டு {கெ}ட்டுதான் போகும்!
ReplyDeleteஎல்லாருமே இப்படித்தான்... இதுவரைக்கும் யாரும் பண்ணல நாங்க பண்ணறோம்னு ஒட்டு கேக்கறாங்க
ReplyDelete