தற்போது தமிழகத்தில் பரபரப்பு செய்திகளில் ஒன்று உள்ளாட்சித் தேர்தல் அதைமிஞ்சி மக்கள் மத்தியில் மாபெறும் எதிர்ப்பும், எதிர்ப்பார்ப்புமிக்கதாகவும் கவலையாடைய செய்வதாகவும், தீராப்பிரச்சனையாகவும் கருத்தில் கொண்டு இருப்பது கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மாபெரும் உண்ணாவிரதத்தை கடந்த மாதம் துவங்கி 15 நாளுக்கு மேலாக 110 பேற்பட்ட நபர்களும் உண்ணாவிரதமும், பல்லாயிரக்கணாகானோர் ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் கலந்துக்கொண்டு நடைபெற்றது. அவ்வுண்ணாவிரதம் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் கூ்டங்குளத்தில் மாபெரும் உண்ணாவிரதத்தை அந்த மக்கள் துவங்கியுள்ளனர். அதனூடே.. சாலைமறியல், ஊழியர்கள் வழிமறிப்பு, ஆர்ப்பாட்டங்கள் என வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
ஊடங்கள், பதிவுகள், செய்திதாள்கள் என இப்பிரச்சனயை அறிந்த நான் அந்த இடத்தின் சூழ்நிலையை அறியாதவன் என்றாலும் அவர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது என்னுடைய கடமை. பொதுவாக பொதுமக்கள் ஒரு சேர போராட்டங்கள் நடத்தும் போது அதனுடைய மதிப்பு அறிவோம். கூடங்குளம் பிரச்சனையில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள நண்பர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சூழ்நிலை இப்படியிருக்கையில் கூடங்குள பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் நாட்டை கட்டிகாக்கும் பிரதமர் அவர்கள் மாநில அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த அணு மின் நிலையத்தால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கூடங்குள பகுதி மக்களின் உணர்வுக்கு அவர் மதிப்பளிக்க வில்லைஎன்பதே அர்த்தமாகிறது.
இது போதாதென்று தமிழ காங்கிரஸில் இருக்கும் காமெடி பீஸ்களான ஈ.வி.கே.எஸ. இளங்கோவன் அவர்கள் கூடங்குளத்தில் மின் உற்பத்தி உடனடியாக துவங்க வேண்டும் என்றும், அடுத்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்கள் இன்னும் 15 நாட்களில் அணு மின்நிலையம் துவங்கப்பட்டு உற்பத்தியை துவங்கிவிடும் என்றும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவங்கினால் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும்தான் அதற்காக எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் பணயம் வைக்க முடியாது. எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காமல் இன்றைய தீர்வை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதும் பிரச்சனைக்கு முடிவாக அமையாது.
இப்படி பேசும் தமிழக காங்கிரஸாரையும், மிஸ்டர் பிரதமரையும் கூடங்குள அணு மின் நிலைத்திற்கு அருகில் வீடுகட்டி குடியேறட்டும் அப்போது வேண்டுமென்றால் இப்பிரச்சனை தீர வழிவகுக்கும்...
இதற்கு இவர்கள் தயாரா..?
அங்கு தன்னுடைய வாழ்வாதாரத்தையும், உயிரையும் பணயமாக வைத்து போராடிக்கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் கவிதைவீதி தலைவணங்கி ஆரவளிக்கிறது.
இப்படி பேசும் தமிழக காங்கிரஸாரையும், மிஸ்டர் பிரதமரையும் கூடங்குள அணு மின் நிலைத்திற்கு அருகில் வீடுகட்டி குடியேறட்டும் அப்போது வேண்டுமென்றால் இப்பிரச்சனை தீர வழிவகுக்கும்...
ReplyDeleteசரியான கேள்வி அண்ணே ... அவர்கள் வந்து குடியேரட்டும் முதலில்
எதில் எதில் தான் அரசியல் என்பது ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது - மக்களின் உயிரை விட மின்சாரம் முக்கியமகிவிட்டதா? மக்களே இல்லாமல் மின்சாரத்தை வைத்து என்ன.......##### போறன்களோ????
ReplyDeleteஇது போதாதென்று தமிழ காங்கிரஸில் இருக்கும் காமெடி பீஸ்களான ஈ.வி.கே.எஸ. இளங்கோவன் அவர்கள் கூடங்குளத்தில் மின் உற்பத்தி உடனடியாக துவங்க வேண்டும் என்றும், அடுத்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்கள் இன்னும் 15 நாட்களில் அணு மின்நிலையம் துவங்கப்பட்டு உற்பத்தியை துவங்கிவிடும் என்றும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.//
ReplyDeleteஅடிங் கொய்யால, இவனுகளுக்கு இவளவு பட்டும் திருந்தாம இருக்கானுகளே ஆஆஆகிர்ர்ர்ர் த்தூ.....
ஒன்னும் வேண்டாமய்யா சூனியாபூந்தியை மட்டும் வரசொல்லுங்க பார்ப்போம் கொய்யால...
ReplyDeleteதலைப்பே அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டது ...அசத்தல் !
ReplyDelete\\\தங்கபாலு அவர்கள் இன்னும் 15 நாட்களில் அணு மின்நிலையம் துவங்கப்பட்டு உற்பத்தியை துவங்கிவிடும் என்றும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்\\\ இது பல சந்தேகங்களையும் அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது
ReplyDeleteசாட்டையடி கேள்விகள்.,
ReplyDeleteஇதற்கு இவர்கள் தயாரா..?
ReplyDeleteஇதற்கு இவர்கள் தயாரா..?
இதற்கு இவர்கள் தயாரா..?
இதற்கு இவர்கள் தயாரா..?
தேவையான இடுகை நண்பா.
ReplyDeleteஅருமையாக தந்து உள்ளீர்கள்,
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇதுபற்றி அதிகம் எனக்கு கருத்து சொல்ல தெரியவில்லை அண்ணா.. வழமை போலவே ஓட்டு போட்டாச்சு..
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteதேவையான நேரத்தல்
நல்ல பதிவு!
நானும் இன்று கவிதை
எழுதியுள்ளேன் பாருங்கள்!
புலவர் சா இராமாநுசம்
நண்பா தலைப்பே அருமை
ReplyDeleteஇப்படி மக்கள் போராடும் நேரத்தில் தங்கபாலு கூறியது ஏற்று கொள்ளும் வகையில் அல்ல
இவர்கள் தாங்கள் தான் தான் தலைவர்கள் என்று நினைக்கிறார்கள் போல
இது ஜனநாயக நாடு என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள்.
நாம் இப்படி பதிவுலகம் வாயிலாக போராடுகிறோம்.ஆனால் இந்த பதிவுலகத்திலேயே இருதயம் அவர்கள் கூடன்குளத்தில் தங்கி இருந்து தகவலை சேகரித்த மாதிரி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்
ReplyDeletehttp://naanoruindian.blogspot.com/2011/10/blog-post.html
இவர்கள் மின்சாரம், மின்சாரம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டு மறைமுகமாக வேறு ஒரு அஜெண்டா வைத்திருக்கிறார்கள். அது பாழாகிவிடப்போகிறதே என்றுதான் துடிக்கிறார்கள் போலிருக்கிறது
ReplyDelete~*~எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காமல் இன்றைய தீர்வை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதும் பிரச்சனைக்கு முடிவாக அமையாது.~*~
ReplyDeleteஉண்மை நண்பா... முதலில் இதற்க்கு அவர்களிடம் பதில் உள்ளதா என்று பார்ப்போம்....
தலைப்பிலேயே விடை சொல்லி விட்டீர்கள் நண்பரே,
ReplyDeleteபாதுகாப்பு இருக்கிறது என்று பம்மாத்து பேசுபவர்கள்
வந்து தங்கட்டுமே பார்க்கலாம்...
நல்ல கேள்வி?
ReplyDeleteதலைப்பே பல செய்திகளை சொல்லிவிட்டது.
சரியான கேள்வி
ReplyDeleteபிரதமரும், காங்கிரஸாரும் கூடங்குளத்தில் குடியேற தயாரா..?
அசத்தல்.
ReplyDeleteசரியான கேள்வி.
ReplyDeleteநியாயமான கேள்வி. நச்னு கேட்டிங்க. ஆனா அவங்க தான் ஐரோப்பா லையும், அமெரிக்கா லையும் சொத்து சேக்கராங்களே! அவங்க எங்க இங்க வரப் போறாங்க.
ReplyDeleteஇந்த பதிமூனாயிரம் கோடிய சூரிய மின்சாரத்துக்கு செலவு செஞ்சிருந்தா சுமார் 900 மெகாவாட் மின்சாரம் எடுத்திருக்கலாம். ஒப்பீடு அடிப்படையில கம்மி தான். ஆனா எவன் கிட்டயும் ஒப்பந்தம் போட தேவை இல்லை. சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சூரியன் இருக்கற வரை எரி பொருளுக்கு பஞ்சமில்லை. ஆனா இதில இருக்கற ஒரே ஒரு சிக்கல், அரசியல்வாதிக்கு கமிஷன் கொஞ்சமா தான் கிடைக்கும்.
சவுந்தர் அவர்களே,
ReplyDeleteநல்ல கேள்விகள்...
கேள்விக் கனைகள் தொடரட்டும்...
அது மட்டும் நடக்காது...
ReplyDelete//நியாயமான கேள்வி. நச்னு கேட்டிங்க. ஆனா அவங்க தான் ஐரோப்பா லையும், அமெரிக்கா லையும் சொத்து சேக்கராங்களே! அவங்க எங்க இங்க வரப் போறாங்க.//
ReplyDeleteஆமா ஆமா அப்புறம் எப்படி வருவாங்க.
....
ReplyDelete