இதுவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...
தோழர்களோடு மட்டுமே தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...
முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..
என் அன்புள்ள எதிரியே..
தற்போது
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..
நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
எப்படியாவது அதை அடைந்து விட...
நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே...
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது...
உன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது...
என் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!
என் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும்தான் காரணம்
காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!
என்னோடு போரிட
நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....
ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..
அதுவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....
ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..
அதுவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...
தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள .........களுக்கும்
என் நன்றிகள்...
என் நன்றிகள்...
யாருண்ணே அது?
ReplyDelete/////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
யாருண்ணே அது?
////////////
நாம எல்லாரும் தாங்க...
ஒவ்வோருவருக்கும் ஒரு எதிரியும் ஒரு நண்பனும் இருக்கிறான்....
இதில்
ராமசாமி யாருன்னு நீங்க தான் சொல்லனும்...
முதுகில் குத்தாத எதிரி எமது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பான் )
ReplyDeleteகுட்!
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteஎதிரிகள் இல்லையெனில் நாம் சராசரிகள்
ஆகி விடுவோம்
நாம் சக்தி பெருக்கவும் ஆயுதங்களின்
கூர் மழுங்காது காத்து இருப்பதும்
எதிரிகளின் தொடர் தாக்குதலால்தானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
அருமை .
ReplyDeleteஅண்ணே சூப்பர்
ReplyDeleteமோதல்களினால் விசையுறும் மனம். நல்ல கவிதை.
ReplyDeleteகவிஞ்சா கலக்கற!
ReplyDeleteஓ... அன்புள்ள எதிரியே
ReplyDeleteஎன்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்.. /
தோள் கொடுத்து தோழனானவர்களுக்குப் பாராட்டுக்கள்>
எதிரிகளே வாழ்வில் உயர உத்வேகமளிக்கக்கூடியவர்கள்!
ReplyDeleteதட்டி குடுத்து கவிழ்த்து விடும் கூட இருப்பவனை விட, உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து பேசி உங்கள் குறைகளை சுட்டி காட்டுபவன் எதிரி அல்ல நண்பனே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
கவிதை முழுவதும் அருமை. அந்த கடைசி வரிகள்:
”தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள எதிரிகளுக்கும்
என் நன்றிகள்” மட்டும் நெருடல்.
/////////
தவறாக நினைக்க வேண்டாம்..
கவிதையின் வடிவிலே சொல்ல வேண்டும் என்பதற்க்காக அப்படி சொன்னது...
நிஜ வாழ்க்கையிலும் சரி... பதிவுலகிலும் சரி அன்புள்ள நண்பர்களே அதிகம்...
கவிதைவியின் கருவுக்கு ஏற்றார்போல் அப்படிபோட வேண்டயதாயிற்று..
தவறாக எண்ண வேண்டாம்...
ரெம்ப நல்லா இருக்கு தோழரே இல்லை இல்லை (எதிரி ) அவர்களே
ReplyDeleteநம்
அகத்திலும் இருக்கிறார்கள்
நண்பனும் பகைவனும்
நல்ல கருத்துள்ள வரிகள்
சௌந்தர் ---பாதிப்பு அதிகமோ ??
ReplyDeleteநீங்க ப்ரீ-யா இருந்தால் போன செய்யவும் ..
ReplyDeleteஉங்கள் கவிதை மிகவும் அருமை எங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து நீங்கள் பேசியிருக்கின்றீர்கள். இந்த கவிதையை இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நான் தயாரிக்கும் தூவானம் கலை இலக்கிய நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதற்கு விரும்புகின்றேன் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
ReplyDelete''குயில்கள் இப்போது குரைக்கின்றன..''
http://kavinger-asmin.blogspot.com/2011/10/blog-post.html
அருமையான படைப்பு.
ReplyDeleteஓ... அன்புள்ள எதிரியே
ReplyDeleteஎன்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..
நல்ல வரிகள்.
யாருன்னு தெரியலையே
ReplyDeleteஅன்புள்ள எதிரியே !
ReplyDeleteஅருமை!
டேய் நான் சாட் பண்ணினதுக்கு இன்னும் கவிதை போடலை, பிச்சிபுடுவேன் பிச்சி....
ReplyDeleteபோடலைன்னா நான் போட்டுருவேன் சாக்குரதை...
வாழ்க்கைக்கு கண்டிப்பா எதிரி தேவை மக்கா...!!!!
ReplyDeleteஓர் எதிரி நண்பனாகின்றான்-
ReplyDeleteவாழ்க்கை பாடம் கற்றுதரும்
ஆசானாகிறான்? நாம் அவனை
படிக்கும்போது!
// உன் வேகம் தான்
ReplyDeleteஅதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது//
நல்ல படைப்பு!
தட்டத்தட்ட எழும் பந்து
போல எதிரிகளின் தட்டலுக்கு
எழுவதுதான் வளர்ச்சி!குட்டலுக்கு
குனிவது தளர்ச்சி!
இதைத் தெளிவாக்கும்
உங்கள் கவிதை பாராட்டுக்கு உரியது
புலவர் சா இராமாநுசம்
எதிரியையும் அன்புடன் அழைக்கும் தங்கள் குணம் அருமை நண்பரே
ReplyDeleteஅருமையான 'எதிரி' கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//என் மீசைகளில்
ReplyDeleteசிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!//அருமையான கவிதை
அருமையான கவிதை சௌந்தர் அண்ணே! ஒருவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ! கண்டிப்பாக எதிரி இருக்க வேண்டும்! அப்போதான் தெம்பு இருக்கும்!
ReplyDeleteஅருமை. நல்லாயிருக்கு.
ReplyDeleteவாழ்க்கையில் ஜெயிக்க நண்பன் தேவை...
ReplyDeleteவாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரி தேவை....
இனிமே நானும் ரெண்டு எதிரிககளை வச்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்....நண்பா...
எந்த எதிரியும் இதைப்படித்தவுடன் தோள் கொடுக்க ஓடி வருவான்....Super..
அன்பின் கவிதை வீதி சௌந்தர் - நம்க்கு வாழ்வினில் முன்னேற ஒரு இலட்சியம் வேண்டும் - அது உருவாவதற்குக் காரணமாய் இருப்பது பந்தயத்தில் நமது கூட வரும் நண்பர்கள் நம்மை முந்திச்செல்வதுதான். அவர்கள் முந்த முந்த நமக்கு உத்வேகம் கூடும் - அவர்களை முந்த வேண்டும் என்ற வெறி பிறக்கும் - சரியான சிந்தனை -
ReplyDelete//ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்.. //
இச்சிந்தனை மிக மிக அருமை
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எதிரிக்கும் கவிதை எழுதிய பாஸ்க்கு ஒரு சலூட்
ReplyDelete///////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
டேய் நான் சாட் பண்ணினதுக்கு இன்னும் கவிதை போடலை, பிச்சிபுடுவேன் பிச்சி....
போடலைன்னா நான் போட்டுருவேன் சாக்குரதை...
///////////
கண்டிப்பாக நானே எழுதுகிறேன் மனோ..
சரியான தாட் கிடைக்கவில்லை..
தேர்தல் நேரம் கொஞ்சம் பிஸி அதனால்தான்
எதிரியின் தோல்வியினையும் தோழமையுடன் அணுகி நட்போடு தோள் கொடுக்கும் நல் உள்ளத்தின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது கவிதை!
ReplyDeleteவித்தியாசமான சிந்தனையில் உதித்த விவேகம் நிறைந்த கவிதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை அருமை....
ReplyDeleteஎதிரிகளைப் பாராட்டுவதுதான்..நல்ல உத்தி...