கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 October, 2011

பயிர்களை மேயும் வேலிகள்... என்ன செய்ய போகிறது தமிழக அரசு....

வேலிகளே பயிரை மேய்வது என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அதுபோன்ற பயிரை மேயும் வேலிகள் நம்நாட்டில் அதிகம் உண்டு. காவல் துறை மக்களை சுரண்டுவது, அரசியல்வாதிகள் ஊழல் செய்வது என்று எத்தனையோ வேலிகள் பயிரை மேயும் பணியை செம்மையாக செய்துக்கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை என்பதுபோல் தமிழக சர்வீஸ் கமிஷன் செய்திருப்பது இளைஞர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

படித்து எதாவது வேலை கிடைக்காதா என்று ஏங்கித்தவிக்கும் இளைஞர்களின் வாழ்வில் இவர்கள் செய்திருப்பது சாதாரண துரோகம் அல்ல... பணம் வாங்கிக்கொண்டும், சிபாரிசு என்ற ‌பெயரில் தகுதியற்றவர்களுக்கு வேலையை வழங்கியுள்ளார்கள்.  இதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு என்னவாகும்.

தமிழக சர்வீஸ் கமிஷன் தலைவரும், உறுப்பினர்களும், விஜிலென்ஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டியுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேர்வுக்கு வருபவர்களின் அறிவைச் சோதித்துப் பார்க்கும் இவர்களது வீட்டிலா, விஜிலென்ஸ் சோதனை? யாரைத்தான் நம்புவதோ? தேர்வில் பாஸ்மார்க் போடும் இவர்கள் வீட்டிலா, டாஸ்மாக் பாட்டில்கள்? சிபாரிசு எடுபடாத இடங்களான இவர்களது வீட்டிலா, சிபாரிசு கடிதங்கள் சிக்கின? 

சிவப்பு விளக்கு சுழல் கார், சொகுசான பங்களா, பணம், பதவி என, மடி நிறைய பொருள் இருந்தும், மனம் நிறைய இருள் இருந்துள்ளதே! இவர்கள் வசதிக்காக எத்தனைப்பேர் வாழ்வில் விளையாடி உள்ளனரே! மானமும், ஈனமுமில்லையே! படிக்காத மேதை காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஆகியோரால் நியமிக்கப்பட்ட தேர்வாணைய குழுவினர், நீதி நெறியாளர்களாக, வேலையற்றோருக்கு ஒளிவிளக்காக திகழ்ந்தனரே! 

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்வாணைய ஊழலும், அதன் கிளையாக முளைத்துள்ளதே! சர்வீஸ் கமிஷன் என ஆங்கில பெயர் வைத்துக் கொண்டு, அதை கமிஷன் மண்டியாக்கி விட்டனரே!

இதனால் லஞ்சம் சிபாரிசு பெற்று வேலைக்குசேர்ந்த தரமற்ற ஆட்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். தமிழக சர்வீஸ் கமிஷனை புதியதாக மாற்றி அமைக்க வேண்டும் இப்படிப்பட்ட குற்றங்கள் தமிழகத்தில் மீண்டும் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வணையத்தின் மீது மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்ப்படும்.

15 comments:

  1. மிகவும் வருத்தமான விடயம்...அரசு இது சம்மந்தமாக கவனம் எடுக்கவேண்டும்......

    ReplyDelete
  2. இவனுங்கள எல்லாம் அங்க சுடனும்!...பல உண்மையான தகுதி கொண்ட இளைஞ்சர்களின் எதிர்காலத்தை சாய்த்து கொண்டு இருக்கும் கருங்காலிகள்!

    ReplyDelete
  3. யாரைத்தான் நம்புவதோ ......

    ReplyDelete
  4. எவ்வளவோ பேர் படிக்கவே வசதியில்லாமல் கஷ்டப்பட்டு படிக்குறாங்க!எந்த செல்வம் இல்லன்னாலும் கல்விசெல்வம் மட்டும் இருந்தா போதும் அப்படின்னு நம்பி இது போன்ற தேர்வுகளை எழுதிட்டு தங்கள் வாழ்க்கையில் ஒளி வந்துவிடும் என எதிர்பார்த்து கொண்டிருக்கையில் இவங்க காசு கொழுத்தவர்களிடம் பணம் பெற்று,அதிகாரம் உள்ளோருடன் சிபாரிசு பெற்று வேலைக்கு அமர்த்தி போட்ட முதலை எடுக்க கீழ்த்தட்டு மக்களிடம் லஞ்சம வாங்கும் நிலையை ஊக்குவிக்கிறார்கள்.
    இவர்கள் வாங்குவது மட்டுமல்லாமல் லஞ்சங்கள் தலைஎடுக்கவும் அடி போடுகிறார்கள்!

    ReplyDelete
  5. வருத்தத்திற்குரிய விஷயம்.

    ReplyDelete
  6. நேர்முக தேர்வில் கேட்கப் படும் ஒரே கேள்வி, எவ்வளவு கொடுப்ப? என்பது தான்.. சரியான பதில் கொடுத்தால் வேலை, இல்லை என்றால் வேலை இல்ல..

    ReplyDelete
  7. விழிப்புணர்வு பதிவு சார்...

    ReplyDelete
  8. கவலைக்குறிய விஷயம்.

    ReplyDelete
  9. இவங்களை உள்ள போட்டு சாகடிக்கனும்.,

    ReplyDelete
  10. த.ம.5
    அரசு கடும் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  11. யாரும் கேக்குறதில்லைன்னு தைரியமா செய்யுறாங்க. தேர்வாணையம் இன்னும் வெளிப்படையாக தேர்வு செய்தால் இது போன்ற குற்றங்கள் குறையும்

    ReplyDelete
  12. நம்மளை யாரு கேக்கப் போறாங்கன்ற திமிர்தான் இத்தனைக்கும் காரணம். மிக மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பிரதர்!

    ReplyDelete
  13. கடுமையா நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும், களவானி பசங்க....!!!

    ReplyDelete
  14. கஸ்டப்பட்டு படிக்கிறவனை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது. கடுமையான தண்டனை வேண்டும்.

    ReplyDelete
  15. வெளிப்படையான தேர்வு முறை வேண்டும்...ஒவ்வொரு நேர்முகத்தேர்வையும் வீடியோவில் பதிவு செய்யவேண்டும்...தேர்வு முடிவுகளை மதிப்பெண்களோடு வெளியிடவேண்டும்...இந்தமாதிரி ஆட்களை வேலையிலிருந்து நீக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்....எத்தனை வேண்டும் என்று சொன்னாலும் கேட்கிறவர்கள் காதில் விழுமா...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...