கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 October, 2011

படுக்கையறை.... வெளிப்படாத அனுபவங்கள்...



து....
கனவுகளின் தொழிற்சாலை...
ஏக்கங்களின் உற்பத்திகூடம்...
ஓடிய படகுகள் ஒதுங்கும் கறை...
 
பாடும் பறவைகளின் பல்லவிதேசம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
இளைய தலைமுறையின் அந்தப்புரம்...
 
ணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...

நாணம் கொள்ள இது நாடகமேடை...
மோகம் கொள்ள இது பள்ளியறை...
 
குடுமபத்தலைவிக்கு
‌இது விண்ணப்ப மையம்...
பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...

சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்

மோகங்களை அள்ளியனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...

ட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்...

காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...

ங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...

நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்

விதை வரும்
அதை எழுதி தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்

ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை

டுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்

டுக்கை அறையில் மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம் மயக்கத்தில் கொஞ்சம்

றுதியாய்...

படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...

டுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...



இதில் தங்களை பாதித்த வரிகளையும்,
தங்கள் அனுபவங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்....
(இது ஒரு மீள் பதிவு)
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...

34 comments:

  1. //காதல் ‌கொண்டவனுக்கு
    இவ்விடம் முட்களை விதைக்கிறது...
    காதலை ‌வென்றவனுக்கு
    இவ்விடம் மலர்களை விதைக்கிறது...//

    அற்புதம்.

    கவனிக்க.. கரை நல்லது :p

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ்...இப்படி ஓரு அற்புதமான் கவிதையை....பதிவுலகில் இன்றுதான் படிக்கின்றேன் என்றால் மிகையாகாது(இது மீள்பதிவாக இருந்தாலும் முன்பு நான் படிக்கவில்லை).....மிகவும் அழகு...பாஸ்(இது மெம்ளேட் கமண்ட் இல்லை)

    அதிலும் இந்த வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது
    ////இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
    நிரந்தர மரணத்திற்கான
    நிகழ்கால ஒத்திகைகள்.../////

    சூப்பர்....

    ReplyDelete
  3. அருமை சௌந்தர் அந்த கடைசி இரண்டு வரிகள் நிதர்சனம்

    ReplyDelete
  4. பணம் படைத்தவனுக்கு
    இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
    ஏழைவாசிக்கு
    இங்கு சொர்கத்தின் சுகங்கள்...
    -இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். கவிதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் முத்தாய்ப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  5. >>பணம் படைத்தவனுக்கு
    இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
    ஏழைவாசிக்கு
    இங்கு சொர்கத்தின் சுகங்கள்...

    குட் லைன்ஸ்

    ReplyDelete
  6. இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
    நிரந்தர மரணத்திற்கான
    நிகழ்கால ஒத்திகைகள்...

    ReplyDelete
  7. ஆகா! படுக்கையறையில் இவ்வளவு விசயம் இருக்கா?
    அருமை!

    ReplyDelete
  8. நம்பிக்கையின் ஆணிவேர்..
    நாளை உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் வருகிறது தூக்கம்...

    ReplyDelete
  9. ஆபாசமின்றி அழகிய கவிதை........

    ReplyDelete
  10. "குடும்பத்தலைவிக்கு
    ‌இது விண்ணப்ப மையம்.."
    எப்படி பாஸ்? கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  11. எல்லா வரிகளுமே அருமை. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... சூப்பர் நண்பரே.

    ReplyDelete
  12. கவிதைவீதியின் வழக்கமான கலக்கல் கவிதை சூப்பர்ப்...!!!!

    ReplyDelete
  13. சிம்ப்ளி சுபர்ப்.

    ReplyDelete
  14. இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
    நிரந்தர மரணத்திற்கான
    நிகழ்கால ஒத்திகைகள்...
    >>>
    கலக்கல் வரிகள். சகோ. தமிழ்மணம் 8

    ReplyDelete
  15. சௌந்தர்...அத்தனை வரிகளுமே உற்றுச் சிந்தித்த வரிகள்.நித்தம் நித்தம் மரணித்தின் ஒத்திகை உச்சம் !

    ReplyDelete
  16. குடுமபத்தலைவிக்கு
    ‌இது விண்ணப்ப மையம்...
    nice

    ReplyDelete
  17. கலக்கல் கவிதை நண்பரே..,,

    ReplyDelete
  18. உங்கள் சிறப்பான கவிதைகளில் ஒன்று......!

    ReplyDelete
  19. "காதல் ‌கொண்டவனுக்கு
    இவ்விடம் முட்களை விதைக்கிறது...
    காதலை ‌வென்றவனுக்கு
    இவ்விடம் மலர்களை விதைக்கிறது.."

    வாழ்க்கையை பிரதிபலிக்கும் உண்மை வரிகள்.
    அனுபவித்து எழுதிய கவிதை.

    ReplyDelete
  20. படுக்கைறையைப் பற்றிய ஒவ்வொரு வரிகளும் ரசிக்கக்கூடிய வரிகள் சௌந்தர்.

    ReplyDelete
  21. கட்டிலில்
    அரங்கேறிய வரிகள்
    இதழ் திறக்கும்
    அனுபவங்கள்

    அருமை கலக்கல் வரிகள்

    ReplyDelete
  22. அழகாய் கருத்தை சொல்லும் அருமை கவிதை ,

    ReplyDelete
  23. இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
    நிரந்தர மரணத்திற்கான
    நிகழ்கால ஒத்திகைகள்...

    அருமையான வரிகள் அண்ணா..

    ReplyDelete
  24. //படுக்கை அறை
    ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
    வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...//
    தங்குகிறவர்களுக்கு அமைதிக்கூடம்...
    தொங்குகிறவர்களுக்கு தற்கொலைக்கூடம்...

    பிடித்த, பாதித்த வரிகள் என்றால் மொத்த கவிதையையும் சொல்லலாம்...இனி ஒவ்வொரு படுக்கையறையும் ஒரு போதிமரமே...

    கலக்கிப்பூட்டீங்க தலிவரே...

    ReplyDelete
  25. "கவிதை வரும்
    அதை எழுதி தொலைக்கும் வரை
    இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்"

    அத்தனையும் அருமை இருந்தும்
    இந்த வரிகளைக் காணும் பொது
    இது கவிஞன் யாவரும் நடத்தும்
    போராட்டம் என்பதை உணர்ந்தேன்...

    அருமையானக் கவிதைகளை வீதி சமைத்துள்ளீர்கள்....
    தேனீயாய் சுவைக்க தினம் தோறும் வருகிறேன்!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  26. என்னை அதிகம் தொட்ட உமது வரிகள்:

    //இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
    நிரந்தர மரணத்திற்கான
    நிகழ்கால ஒத்திகைகள்...//

    படுக்கை அறையில்....எவ்வளோ இருக்கே - கவி மூலம் சொன்னமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...