கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 April, 2013

அறிவுரைகளை மீறி கேன்னஸ் செல்லும் ரஜினிகாந்த்! சம்மதிப்பாரா வித்யாபாலன்?


ரஜினிகாந்த நடிப்பில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் கடைசி கட்ட பணிகள் மும்மரமாக நடந்துவருகின்றன.


உலக தரத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படும் கோச்சடையான் திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் பெற கேன்னஸில் நடக்கவிருக்கும் புகழ்பெற்ற கேன்னஸ் திரைப்பட விழாவில் கோச்சடையானை திரையிட்டுக் காட்ட முடிவு செய்திருக்கின்றது படக்குழு.

உலகம் முழுவதிலுமிருக்கும் பல மொழித் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்த கேன்னஸ் திரைப்பட விழாவின் படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள் குழுவில் தமிழ்த் திரையுலகத்தால் நிராகரிக்கப்பட்ட நடிகை வித்யாபாலனும் ஒரு நடுவராக இருக்கிறார்.

கோச்சடையான் திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், படக்குழு ரஜினியின் அடுத்த படத்திற்கு வித்யாபாலனை ஜோடியாக நடிக்க வைக்கும் ஐடியாவில் இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேன்னஸ் விழாவிற்கு கண்டிப்பாக போகும் முடிவில் ரஜினி இருப்பதால் கோச்சடையான் முதன் முதலாக திரையிடப்படும் கேன்னஸ் திரைப்பட விழாவிற்கு செல்வது, அடுத்த பட ஹீரோயினை பார்ப்பது என இரண்டு வேலைகளும் ஒரே பயணத்தில் முடித்துவிடும் எண்ணத்தில் மருத்துவர்கள் அவ்வளவு தூர பயணம் வேண்டாம் என அறிவுருத்தியும் போயே தீருவேன் என்று ரஜினி கூறிவிட்டதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

ரஜினியின் கோச்சடையான் மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘தி கிரேட் காட்ஸ்பி’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் கேன்னஸில் திரையிடப்படுவதால் ரஜினி மருத்துவர்களின் அறிவுரையைக் கூட பொருட்படுத்தாமல் கேன்னஸ் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் வித்யாபாஅன் ரஜினி கேட்டால் சம்மதிக்கிறாரா? இல்லையா? என பொருத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

4 comments:

 1. ஒ இப்பிடி வேற நடக்குதா? ரஜினி என்னைக்கு எவன் பேச்சைக் கேட்டாரு...?

  ReplyDelete
 2. ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா... ஒருவாட்டி தான்...! ஹிஹி...

  ReplyDelete
 3. சிகரம் தொட எண்ணுபவர்கள்
  சரிக்கி விடுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

  ReplyDelete
 4. நடுவராக இருக்க ஒரு தரம் இருக்கில்லையா அதை காப்பாற்றுவார ....................

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...