கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 May, 2013

ஆசிரியரை லூசாக்கும் மாணவர்கள்..! சில வகுப்பறை ஜோக்ஸ்...!

"ஏண்டா...பொய் சொன்ன?" "இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு" என மாணவனை அடி அடியேன அடித்தார் ஆசிரியர்.
 
"இனி மேலும் பொய் சொல்வேன் மாணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
 
ஆசிரியர் திகைத்து போய், "ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?" என்றார்.
 
மாணவன் சொன்னான், "இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே சார்...!" 

+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+*

ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கெட்டார்
அதற்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+*

ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை. 
ஆசிரியர் ஏன் என்று கேட்க. 
அவன் பதில் “மாடு வாயில்லா ஜிவன் சார்”

+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+* சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்

அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?

10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+*

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!
+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+* 

ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110-கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு. அவருக்கு வயசு 27.

+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+*
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..! 
+*+*+*++*+*++*+*+*+*++**+*+*+*+*+*
நகைச்சுவைகள் படங்கள் தொகுத்தவைகள்..! 

12 comments:

 1. அருமை அய்யா ரசித்தேன் சிரித்தேன்

  ReplyDelete
 2. கடைசி ஜோக் அருமை

  ReplyDelete
 3. சூப்பர் ஜோக்ஸ் .வாய்விட்டு சிரித்தேன்.

  ReplyDelete
 4. Ha ha ha ha
  Train joke very very fun sir

  ReplyDelete
 5. அன்பின் சௌந்தர் - சூப்பர் ஜோக்ஸ் - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...