தென்றல்காற்று வீசும்
மாலைப் பொழுது...!
மாலைப் பொழுது...!
அந்திவானம்
தங்க நிறத்தில்..!
காக்கைகள் படபடத்தது
கூட்டை நோக்கி...!
மாலை நேரப்பூக்கள்
மலர்ந்த மயக்கத்தில்...!
விழியோரம் தீபம் ஏற்றி
உலா வந்தது மின்மினி...!
மூன்றாம் பிறையாய்
முகம் காட்டி சிரித்தது நிலா...!
மகரந்த சேர்க்கையை முடித்துவிட்டு
கூட்டுக்கு திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி...!
சூரியனை வணங்கி முடித்து
தலை தாழ்கிறது நெற்கதிர்..!
காற்றைக்கிழித்துக்கொண்டு
தடக்.. தடக்.. சத்தத்துடன் புகைவண்டி...!
மாலைப் பொழுதை தழுவிக்கொள்ள
மடைத்திறக்கிறது இருட்டு...!
தினம் தினம் இப்படித்தான்
மாலை பொழுதுகள்...!
ஆனால் எனக்கோ..?
நேற்று சுடுச்சோறு..!
இன்று பழையது...!
நாளை...?
இன்று பழையது...!
நாளை...?
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே...!
வறுமையின் கொடுமையை வளமான தமிழில் உரைத்திட்டீர். மிக நன்று.
ReplyDeleteகவிதை மிக மிக யதார்த்தமாக நகர்கிறது சகோ....
ReplyDeleteகாட்சிகள் கண்முன் வந்து கண்சிமிட்டிச் செல்கிறது
வாழ்த்துக்கள்
வறுமையின் நிறம் கொடுமை
ReplyDeleteகடைசி வரிகள் சுடுகின்றன........
ReplyDeleteSuper kavithai friend
ReplyDeleteமாப்ள கவிதை சூப்பர்....
ReplyDeleteபழைய சோறு சுடுகிறது.
ReplyDeleteநேற்று சுடுச்சோறு..!
ReplyDeleteஇன்று பழையது...!
நாளை...?//
மனசு வலிக்கும் கவிதை....!!!
அருமையான வர்ணனை சூப்பர்ப் மக்கா...!!!
ReplyDeleteஏழையின் உணர்வுகள், எளிய வார்த்தைகளில்.
ReplyDeleteமாறாத மாலைப் பொழுது போல - மாறாத வறுமையும்.
ReplyDeleteவறுமையின் கொடுமை கவிதையாய்...
ReplyDeleteமனதை தொடும் வரிகள் அருமை
ReplyDeleteத.ம 3
யதார்த்தமான வரிகள்..
ReplyDeleteகடைசி வரி மனதி விட்டுசெல்ல மறுக்கிறது நண்பரே..
நன்றியுடன்
சம்பத்குமார்
கலக்கல் கவிதை
ReplyDeleteசௌந்தர்....கவிதை மனதைக் கொஞ்சம் கலங்கத்தான் வைக்கிறது. என்றாலும் நீங்கள் சொன்ன எந்த இயற்கையும் நாளைக்காக வருந்தவில்லை.மனிதன் மட்டுமே !
ReplyDeleteநல்ல கவிதை.அதைவிட நல்ல படங்கள். நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.
ReplyDeleteBeautiful!!
ReplyDeleteஅருமை!
ReplyDeleteஇயற்கையை பற்றிய கவிதையோ என்று நினைத்து கொண்டிருக்கும்போதே மனதை பிசையும் ஒரு கவிதை. அருமை/
ReplyDeleteதினம் தினம் இப்படித்தான்
ReplyDeleteமாலை பொழுதுகள்...!/
சுவையான பழைய சோறு!
கொடிது கொடிது வறுமை கொடிது.....
ReplyDeleteகவிதை அழகாய் சொல்லிநிற்கிறது...
கடைசி இரண்டு வரிகளில் கவிதையை புரியவச்சிடீங்க சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று கிடைத்த பழைய சோற்றால் மனம் நிறைத்து, நாளையைப் பற்றிய கவலையைத் தள்ளி வைத்து நலமாய் விடியும் என்னும் நம்பிக்கையுடன் உறங்கச் செல்வோம். கூடு உடைத்து வந்த வண்ணப்பூச்சிகள் மறுபடி கூட்டுக்குள் முடங்க விரும்புவதில்லை. அதுபோல வாழ்க்கையை முன்னோக்கிப் பார்த்து நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.
ReplyDeleteKavithai paditha pin kankal kalangiyadhu.
ReplyDeleteத ம 8
ReplyDelete