வாடிப்போன பூக்களை
அவள் கூந்தலிலிருந்து களையும் போது
அறுந்து போகும் அந்த ஒற்றை முடி...!
அவள் சாப்பிடும்போது
சிதறி கீழே விழும்
சில சோற்றுப் பருக்கைகள்...!
அவள் நடந்துபோக
கூந்தலில் இருந்து உதிரும்
ரோஜா இதழ்கள்...!
அவள் பேசும் போது
ஒட்டித்திறக்கும்
அந்த பொன்னிதழ்கள்...!
அவளின் ஸ்பரிசத்தை
தடவிப்பார்க்கும் அந்த கடைசி
மழைத் துளிகள்...!
அவளின் கால்கள் மோதி
அவிழ்ந்து கிடக்கும்
அந்த கொலுசு சலங்கைகள்...!
இவற்றையெல்லாம் விட
அவள் நடக்கும்போது
வீதிகளில் படியும் அழகிய
காலடித்தடங்கள்...!
இவையெல்லாம்
அவள் எனக்காக விட்டுச்செல்லும்
புதுக்கவிதைகள்...!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!
ஆஹா அப்படியா சேதி
ReplyDeleteகவி தரும் மூலத்தையே ஒரு அருமையான கவிதையாக்கி
தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 1
இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?
ReplyDelete//////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?
/////////
இரண்டுக்காக இரண்டும்...
கவிதை....கவிதை
ReplyDeleteஅனுபவித்து எழுதிய சொற்கள்...
ReplyDeleteஅதிகப்படியான அன்பு
பார்ப்பவைஎல்லாம் கவிக்கருவாய்
சமைத்திருக்கிறது...
அருமை அருமை..
கவிதை எங்கெல்லாம் இருக்கிறது!நன்று!
ReplyDeleteஇங்க பார்ரா! சூப்பர்! :-)
ReplyDeleteஇவையெல்லாம்
ReplyDeleteஅவள் எனக்காக விட்டுச்செல்லும்
புதுக்கவிதைகள்...!//
தலைப்புக்கும், இந்த வரிகளுக்கும் செம பொருத்தமா இருக்குய்யா வாழ்த்துக்கள்....!!!
விக்கியுலகம் said...
ReplyDeleteகவிதை....கவிதை//
ஆமா புதுசா சொல்ல வந்துட்டான்....!!!
பாலா said...
ReplyDeleteஇருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?//
ஹா ஹா ஹா ஹா நான் கேக்கனும்னு நினைச்சேன் நீங்க கேட்டுட்டீங்க...!!!
daittil டைட்டில் செம
ReplyDeleteநல்லாருக்குங்க கவிதை.
ReplyDelete//அவள் பேசும் போது
ஒட்டித்திறக்கும்
அந்த பொன்னிதழ்கள்...!//
இந்த வரிகள் தவிற மீதி எல்லாமே அந்த பெண்கிட்டேருந்து விழுந்துகொண்டே இருக்கு.
தப்பா எடுத்துக்காதிங்க.மனதில் டக்னு தோன்றியதை சொன்னேன்.
இவையெல்லாம்
ReplyDeleteகவிதை கரு(வூ) மூலங்கள்
அருமை! மிக அழகாகச் சொல்லிவிட்டீர்!
புலவர் சா இராமாநுசம்
////இவையெல்லாம்
ReplyDeleteஅவள் எனக்காக விட்டுச்செல்லும்
புதுக்கவிதைகள்...!
////
மிக எளிமையான உரை நடையில் அழகான கவிதை
பாலா அண்ணன் கேட்டது போல தலைப்பு...........ஹி.ஹி.ஹி.ஹி....
கவிதையின் ஊற்றுக் கண்ணை நீங்கள் கவிதையின் மூலமே அறிமுகப்படுத்தி இருந்தது பிரமாதம். தலைப்பைப் பார்த்ததும் என்னமோ ஏதோ என்று நினைக்க வைத்து ஏமாற்றிய உம்மை... இன்னும் இதுபோன்ற கவிதைகள் நிறையப் படைக்கும்படி சபிக்கிறேன்...
ReplyDeleteஎப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...
ReplyDeleteஅருமையான இலகு மொழி நடையில் கவிதை உள்ளது.
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஎன் வலையின் பிழை சரி செய்யபட்டுவிட்டது
ReplyDeleteஅருமை சௌந்தர்..
ReplyDeleteஇப்போ தெரிஞ்சுக்கிட்டோம் கைவதை எங்கே இருந்து வருதுன்னு :P
:)
ReplyDeleteமிகவும் அருமை..
ReplyDeleteநல்லா இருக்கு மைண்ட்ல வச்சுருக்கேன், நான் படம் எடுக்கும்போது கண்டிப்பா நீங்களும் அம்பாளடியாளும் தான் பாட்டு எழுதனும்...
சும்மா...
கவியை கவியாக்கிய கவிதை இது. அருமை நண்பா
ReplyDeleteநம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)
மனதை வருடும் புதுக்கவிதை அருமை
ReplyDeleteஅசத்தலான காதல் 'புதுக்'கவிதைகள்..
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு.
ReplyDeleteகவி மிகவும் நன்றாக உள்ளது.உங்களது ரசனை மிகவும் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள் கவிஞரே.
ReplyDeleteகாதல் ஒருவனை கவிஞனாக்கும்!
ReplyDeleteகாதலியின் அழகு ஒருவனை மாகாகவிஞனாக்கும்!!
ஆஹா.. அருமையான கவிதைச்சந்தர்ப்பங்கள் :-)
ReplyDeleteகவிதை அருமை நண்பா..
ReplyDeleteகலக்கல் கவிதை நண்பா
ReplyDeleteKavithai supper
ReplyDeleteஅவளுக்கு இப்புதுக் கவிதை எப்படி?
ReplyDeleteஆஹா கவிதை கவிதை
ReplyDeleteஉங்க கவிதை சூப்பர்! இலையோடு பூ பூத்திருக்கிற கொடியை அப்படியே அழகான பெண்ணா மாத்தியிருக்காரே! யார் அந்த ஓவியக் கவிஞர்?.
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள்
ReplyDelete