ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின் கிடைத்து விடுமா என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பில் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.
கடந்த 24 ம் தேதி ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது . இதில் சி.பி.ஐ., தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதனால் அவரை நீதிபதி ஜாமினில் விடுதலை செய்வார் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக தீபாவளி கொண்டாடும் நேரத்தில் அவர் வெளியே வருவது கூடுதல் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.
தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் எம்.பி.,கனிமொழிக்கும் தொடர்பு இருந்தது சி.பி.ஐ., மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாயம் பெற்றதற்காக ஸ்வான் என்ற நிறுவனத்தினர் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கொடுத்தனர். இது கடனாக பெறப்பட்டது என்று கனி மொழி சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டை ஏற்று ஆதாராம் இருப்பதாக உணவர்வதாகவும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியிருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி விட்டால் ஜாமின் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி இன்று ஜாமின் கிடைக்குமா என்பது தெரிந்து விடும் .
கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசீப்பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி மற்றும் ராஜீவ்அகர்வால் ஆகியோர் ஜாமின் கேட்டுள்ளனர்.
மனு விசாரணை வருவதையொட்டி இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அனைத்துதரப்பிலும் ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக ஜாமின் மறுக்கப்பட்டு இந்த விசாரணை வரும் 11 -ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் கலைஞர் டில்லியில் முகாமிட்டு செய்த ஏற்பாடுகள் ஏதும் எடுபடுவதாக தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் காலம் முழுக்க ஜெயில்தான் இருக்கவேண்டும். அரசியவாதிகளுக்கு ஆதரவாக இல்லாதல் நீதிமன்றங்களின் செயல்பாட்டு ஒரு சபாஷ் போடடே ஆகவேண்டும்.
இனி என்னவாகும் பொருத்திருந்து பார்ப்போம்.
கடைசியில் சொன்ன கருத்து கரெக்ட் .
ReplyDeleteஜெயில்ல போயி கனிமொழி கிட்ட என்ன சொல்லுவாங்க?
ReplyDelete"கடல்லே இல்லையாம்"
ஹி ஹி ஹி....
ReplyDeleteசரி விடுங்க எசமான்.....
அப்புறம், அம்மா எப்பூடி ஆட்சி நடத்துறாங்க?
தமிழ்நாட்ல பாலாறும் தேனாறும் ஓடுதா?
நண்பரே...!
ReplyDeleteபரவாயில்லையே...!
உங்களுக்கு தெரியுமோ... தெரியாதோ...!
1976 களில் "சிகப்பு நாடா" என ஒரு மஞ்சள் பத்திரிகை இருந்தது...!
அந்த பத்திரிக்கையில்தான்...
தங்கள்... "கவிதை வீதியில்" என தமிழாய்ந்த.. அழகு தமிழ் தலைப்பிலான இப்பதிவின் தலைப்பு போல "ஆப்பு" என்று தலைப்பு வரும்...!
35 வருடங்களுக்குப்பின்னும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து...
ITயில் தமிழ் வளர்ந்தபோதும் "ஆப்பு" எனும் நான்காம்தர வார்த்தை உபயோகிப்பது
தமிழை... தமிழ் மொழியை வளர்ப்பதற்கு மேலும் உதவும்...!
தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு...!
இதுபோல வார்த்தையை உபயோகித்தால் "மெல்ல இனி தமிழ் சாகும்"...!
என்னது...ஜா மீன் எங்கேயுமே கிடைக்கலையா?
ReplyDelete@காஞ்சி முரளி-
ReplyDeleteஎன்ன சொல்ல வாரீர்? ஒண்ணும் வெளங்கல!
@காஞ்சி முரளி
ReplyDeleteதங்களின் தமி்ழ் மீது கொண்ட ஆர்வத்திற்க்கு நான் தலைவணங்குகிறேன்...
அது எப்படி தலைப்பின் கவர்ச்சிக்காக நான் பயன்படுத்திய ஒரு வார்த்தையபல் தமிழ் இறந்து விடுமா..?
அப்படியென்றால்...
முத்தமிழ் அறிஞர் என்று அறிவித்துக்கொண்டு தன் குடும்பத்தோடு ஊழலில் ஈடுபடுகிறார்களே இவர்களால் தமிழ் வாழுமா..?
வார்த்தையில் என்ன இருக்கிறது நண்பரே...
அதன் நோக்கத்தில் தான் இருக்கிறது எல்லாம்....
This comment has been removed by the author.
ReplyDelete/////
ReplyDeleteவெளங்காதவன் said... [Reply to comment]
ஹி ஹி ஹி....
சரி விடுங்க எசமான்.....
அப்புறம், அம்மா எப்பூடி ஆட்சி நடத்துறாங்க?
தமிழ்நாட்ல பாலாறும் தேனாறும் ஓடுதா?
/////////
தவறாக இருக்கும்போது ஆளும் கட்சி என்ன எதிர் கட்சி என்ன...?
கனிமொழி சென்னை சங்கமம் நடத்தியபேர்து அதை மெய்சிலிர்க்க மெச்சியிருக்கிறேன்..
அதற்க்காக அவர் செய்த ஊழலை சரிஎன்று சொல்ல நான் முட்டாள் இல்லை...
அதே சமயம் தற்போது ஆளும் ஜெயலலிதா வின் நல்லதுகளுக்கும் தீயவைகளுக்கும் என்னுடைய நடுநிலைக் கருத்தை பதிவு செவ்வது என்னுடைய கடமையும் உரிமையும் கூட...
தங்களின் கருத்துக்கு நன்றி...
//
ReplyDeleteஅதே சமயம் தற்போது ஆளும் ஜெயலலிதா வின் நல்லதுகளுக்கும் தீயவைகளுக்கும் என்னுடைய நடுநிலைக் கருத்தை பதிவு செவ்வது என்னுடைய கடமையும் உரிமையும் கூட...
தங்களின் கருத்துக்கு நன்றி... ////
கொஞ்சம் கலாய்ச்சு கமண்ட் போடுங்கய்யா... சீரியஸ் கமண்ட் படிச்சு படிச்சு, நான் சீரியஸ் ஆயிடுவேன் போலியே......
வரவேற்க ஒரு கூட்டமாப் போனாங்களே! ஏமாற்றம்தானா?
ReplyDeleteகலைஞரின் ஊழல் அல்லது கனிமொழியின் ஊழல் தவறு என்பதில் மறு பேச்சுக்கே இடமில்லை.
ReplyDeleteஆனால் இது சுதந்திரமாக உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதற்கு முயலுமா என்கிற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். தமிழ் நாடு பொதுத் தேர்வுக் குழுவை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கீழ் கொடு வந்ததை எதிர்த்து ஒரு வழக்குப் போடப் பட்டிருக்கிறதாம்.. எல்லாத் தளங்களிலும் இந்த ஊழல் விரிந்து கிடக்கிறபோது ஒரு வழக்கில் மீது மட்டும் அபரிமிதமான அக்கறையை ஒரு அரசு காட்டுகிறதென்றால், அதனுடைய உள் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரசின் அதிகார உள்நோக்கமின்றி வழக்குத் தொடரப் படும் என்றால், முதலில் ப.சிதம்பரம் உள்ளே போக வேண்டும். அப்புறம் இன்னும் நிறைய பட்டியல் நீளும்...
அதை விட்டு விட்டு, கனி மொழிக்கு ஜாமீன் கிடைக்காததை மட்டும் வைத்து வழக்கு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்ற மாயைதான் உருவாக்கப் படுகிறது.
அந்த மாயயயில் சிக்கிவிடக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.
@அப்பு
ReplyDeleteதங்களின் வேண்டுகோள் வழிமொழியப்படுகிறது அப்பு...
தமிழகம் வந்தால், நில மோசடி வழக்கில் கனிமொழியை கைது செய்யப் போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்ததே என்ற சிந்தனை மட்டும் வந்து வந்து போய் கொண்டிருக்கிறது...
ReplyDeleteநண்பரே...!
ReplyDelete///அது எப்படி தலைப்பின் கவர்ச்சிக்காக நான் பயன்படுத்திய ஒரு வார்த்தையபல் தமிழ் இறந்து விடுமா..?////
"தமிழ்" என்ன...? நமீதாவா...! இரும்புக்கம்பி விளம்பரத்திற்கு கவர்ச்சிக்காக பயன்படுத்த...!
இந்த கவர்ச்சி என்ற வார்த்தையை "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"..... என்று பாடிய புரட்சிகவிஞன் கேட்டால்....??????????
"தினமலர்" போன்ற நாளேடுகள்தான் வியாபாரத்திற்காக... "ஆறுமுகத்திற்கு ஆப்பு...!" என்று தலைப்பில் செய்தி வெளியிடுகிறார்கள்...!
அதுகளுடன்... (ஐந்தாம் அறிவைத் தான் "அதுகள்" என்பார்கள்)... நீங்களுமா இணைவது...?
அதோடு...!
ஆயிரம் கோபம் இருந்தாலும்...!
அனைவரும் பார்க்கும்... படிக்கும் கட்டுரைகளில்... பயன்படுத்தும் வார்த்தைகளில் ஓர் நயம் வேண்டும்... ஓர் எல்லை வேண்டும்...!
பதினாறு வயது பெண்ணுக்கு "கவர்ச்சி" தேவை...! பல்லாண்டு... பல்லாண்டு என வயதையோ..! வருடங்களையோ...! கணக்கிடாத முடியாத "கல்தோன்றா.. மண்தோன்றா...காலேத்தே முன்தோன்றிய "தமிழுக்கு" கவர்ச்சியோ... விளம்பரமோ... தேவையில்லை...! நண்பரே...!
"ஆப்பு" போன்ற வார்த்தைகளை... கட்டுரையிலோ... கவிதையிலோ... பத்திரிகைகளிலோ... அல்லது தங்களைப் போன்ற வலைதள பதிவுகளிலோ பயன்படுத்திக்கொண்டு வந்தாலே...! காலப்போக்கில் "மெல்ல இனி தமிழ் சாகும்"...!
அதற்கு தோள் கொடுப்போர்களில் நீங்களும் ஓர் பல்லக்குத்தூக்கியாக இருக்கவேண்டுமா என்பது என் கேள்வி....!
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
ReplyDeleteதெய்வம் நின்று கொல்லும்
ReplyDeleteஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
சரியோன்னு யோசிக்க தோணுது!!
@காஞ்சி முரளி
ReplyDeleteவிவாதம் வேண்டாம் நண்பரே.. தமிழுக்கு ஒரு தலைகுணிவு எனும் போது அது போன்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்..
இந்த பதிவின் தலைப்பையும் மாற்றி விட்டேன்..
சில விஷயங்களை இன்னும் நாசுக்காக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
ஹாட் நியுஸ்....
ReplyDeleteநன்றி...!
ReplyDeleteநண்பரே....!
தங்கள் ஓர் வியாபாரநோக்குடன் பதிவிட்டிருந்தால்... நான் என் கருத்தை பதியமாட்டேன்...!
ஓர் வழிப்போக்கன் போல் படித்துவிட்டு சென்றிருப்பேன்...! இவர்கள் திருந்த மாட்டார்கள் என...!
ஆனால்...!
உங்கள் பதிவைப்போலவே "கவிதை வீதியில்.... நயத்தை எதிர்பார்த்தேன்...!
நன்று...!
நான் ஏதேனும் சுடுசொல்லை சுட்டியிருந்தாலும் பொறுத்தருள்க...!
"சங்கு சுட்டாலும் வெண்மைதரும்" எனும் தமிழ்வாக்கின்படி...!
தவறென்று தெரிந்தபின் அதனை திருத்திக்கொள்வதற்கு... "வானம் போன்ற விரிந்த மனம்" வேண்டும்...!
அது உங்களிடம்....!
வாழ்த்துக்கள்...!
மீண்டும் என் நன்றிகள்...!
//suryajeeva said... [Reply to comment]
ReplyDeleteதமிழகம் வந்தால், நில மோசடி வழக்கில் கனிமொழியை கைது செய்யப் போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்ததே என்ற சிந்தனை மட்டும் வந்து வந்து போய் கொண்டிருக்கிறது...
////
பொள்ளாச்சிக்கு தென்புறம், சேத்துமடைக்குப் பக்கத்துல, முன்னூத்தி இருவது ஏக்கர். அடேங்கப்பா!
நீங்க அத சொல்லலியே?
ஒரு கூட்டமாக வரவேற்க போயி, நாறிட்டு திரும்ப வந்தவிங்க தலையில முண்டாசு போட்டு மறையுங்க எஜமான்...!!!
ReplyDeleteகளவானியை ஆதரிப்பவனும் களவானியே, அப்போ வரவேற்க போனவனுகளும் களவாணிதான் இல்லையா...?
ReplyDeleteபொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteசட்டம் தன் கடமையைச் செய்கிறது
ReplyDeleteசட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே ?
விரைவில் ஒரு திருப்பம் நடக்கும் என எல்லோரிடமும் இருந்து ஓர் எதிர்பார்ப்பு?
ReplyDeleteஅமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!
சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்..
ReplyDeleteகலைஞர் குடும்பத்துக்கு இது தேவைதான் என்னமா ஆட்டம் போட்டாங்க......இப்ப அடங்கிப்போயிருக்காங்க
ReplyDeleteசபாஷ் சரியான பதிவு ...
ReplyDeleteநீதி எல்லா நேரமும் தூங்காது !.....வாழ்த்துக்கள் நல்ல
ReplyDeleteபதிவு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......
போனவங்க ஏரி மீன் வாங்கினு போனதா கேள்வி...ஒருவேள ஜா மீன் இல்லேன்னா இதாவது குடுக்கலாமுன்னு.... நடத்துங்க...சபாஷ்...
ReplyDeleteமாப்ள இந்த விஷயம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தனிப்பார்வையில் தான் நடக்குது எனவே...அரசியல் நிர்பந்தங்கள் உள்ள நுழையறது கொஞ்சம் கஷ்டம் அதான் நடக்கல...இல்லன்னா சூனியக்காரர் இந்நேரம் தன் சாகசத்தை காட்டி இருப்பார்...வாழ்க ஜன நாயகம்!
ReplyDelete