வேட்டையாடுவதற்காகப் புறப்பட்ட மன்னர் வானில் மேகமூட்டமான சூழ்நிலையைக் கண்டார். மழை வருமோ என சந்தேகத்துடன் தன் அமைச்சரை அழைத்து, “இன்று மழை வருமா..?” என்று கேட்டார்.
“மன்னர் பெருமானே.. இன்று மழை பெய்யாது. என் பேச்சை நம்பி வேட்டைக்குச் செல்லுங்கள்” என்று கூறினார் அமைச்சர்.
மன்னரும் வேட்டைக்குப் புறப்பட்டார். மன்னர் காட்டை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் கழுதையை ஓட்டிக்கொண்டு ஒரு விவசாயி எதிரில் வந்தார். மன்னர் அந்த விவசாயியிடம், “இன்று மழை பெய்யுமா? என்று கேட்டார்.
“இன்று நிச்சயமாக மழை பெய்யும். உடனே நீங்கள் அரண்மனைக்குப் போய்விடுங்கள்” என்றார் விவசாயி. அவரது பேச்சைப் பொருட்படுத்தாமல் மன்னர் காட்டுக்குள் வேட்டையாடப் போனார். சிறிது நேரத்தில் கடுமையாக மழை பெய்தது. மன்னர் நன்றாக நனைந்து விட்டார்.
வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. “இன்று மழை பெய்யும் என்பது எப்படி உறுதியாகக் கூறினாய்?” என்று மன்னர் கேட்டார். “இன்று மழை பெய்யுமா, பெய்யாதா என்பது பற்றி எனக்கு தெரியாது. என் கழுதைக்குத் தான் தெரியும். கழுதை தன் காதுகளை முன் பக்கமாக நீட்டிக் கொண்டால் மழை பெய்யும் என்னும் உண்மை எனக்குத் தெரியும்.” என்றார் விவசாயி.
உடனே அரண்மனை திரும்பிய மன்னர் அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு விவசாயியின் கழுதையை அமைச்சராக்கிவிட்டார். அம்புட்டுத்தான்.
டிஸ்கி : மக்களே இது கிராமத்துப்பக்கம் எப்போதோ கேட்ட குட்டிக்கதை. இதுக்கும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
டிஸ்கி : சிரிச்சிட்டு அப்படியே ஏதாவது வில்லங்கம் இல்லாத கருத்தா சொல்லிட்டுப்போங்க....
டிஸ்கி : சிரிச்சிட்டு அப்படியே ஏதாவது வில்லங்கம் இல்லாத கருத்தா சொல்லிட்டுப்போங்க.... ///
ReplyDeleteஇந்த டிஸ்கிய மதிச்சு, ஒண்ணும் சொல்லாம போறேன்...
வர்ட்டா......
அட, இது நல்ல ஐடியாவா இருக்கே...
ReplyDeleteஅரசியல்லே இதெல்லாம் சகஜம்பா
ReplyDeleteஅவ்வளவே!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓட்டுப் பட்டையைப் காணமே
ReplyDeleteவந்ததும் ஓட்டுப் போடுவேன்
புலவர் சா இராமாநுசம்
வில்லங்கம் இல்லாத கருத்து - அப்படின்னா என்னங்க?
ReplyDeleteசரிதான்... ரைட்டு ....
ReplyDeleteநடத்துங்க....
ஹா ஹா ஹா. செம காமெடி.
ReplyDeleteவில்லங்கம் இல்லாத கருத்து ரைட்டு....
ReplyDeleteபதிவு அருமை......
தற்ப்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ReplyDelete>>>
சம்பந்தம் இல்லாத மாதிரிதான் எனக்கும் படுது
த ம 5
ReplyDeleteஒரு வில்லங்கம் இல்லாத கருத்து
ReplyDeleteஇரண்டு வில்லங்கம் இல்லாத கருத்து
ReplyDeleteமூன்று வில்லங்கம் இல்லாத கருத்து
ReplyDelete4,5,6,7,8,9,10,.................. வில்லங்கம் இல்லாத கருத்து
ReplyDeleteவில்லங்கமான கருத்து சொன்னா என்ன செய்வீரு...???
ReplyDeleteஎலேய் ஓடியாங்கலேய் நம்ம அரசியல் அண்ணாச்சிகள கழுதைன்னு சொல்லிட்டாரு ஓடியாங்கலேய் மக்கா...
ReplyDeleteஇந்தக்கதை அம்புலிமாமா'வுல வந்தது...!!!
ReplyDeleteசரியா சொன்னிங்க போங்க
ReplyDeleteSuperb story. it remember one mulla story. In a meeting mulla told: half of the people here are donkeys. crowd objects. Then he told: half of the people here are not donkeys. crowd appreciates. That king in ths story is also like that. Correct?
ReplyDeleteஇதுக்கும் தற்ப்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ReplyDeleteநம்பிட்டேன்...
நீங்க சொல்றிங்க, நாங்க கேட்டுக்கறோம்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்
//இதுக்கும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. //
ReplyDeleteஆகா!நம்பிட்டோம்!
ம்...அந்த பயம்?!...
ReplyDeleteஹா ஹா... செருப்புக்கு கழுதை பரவாயில்லை.
ReplyDelete