தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல் பட்ட விஜயகாந்த் வெற்றிவாகை சூடிய கையோடு தொலைந்து போனவர்தான் இதுவரை காணவில்லை.
தமிழக சட்டமன்றத்தில் மிகவும் பொறுப்புமிக்க பதவியான எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்து கிடைத்தும் அதற்கான பொறுப்புடன் விஜயகாந்த அவர்கள் நடந்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. பட்ஜெட் கூட்டத்திலும் அதன் பிறகு நடந்த விவாதங்களிலும் வாயை திறக்காமல் இருந்த இவர் அடுத்து வெளிவந்தது உள்ளாட்சி தேர்தலில்தான்.
எவ்வளவு பம்பியும் கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிட்டப்பிறகு உள்ளாட்சி மன்றத்தில் தனித்துப்போட்டியிட்டு ஏதோ அவரால் முடிந்த இடத்தை பிடித்தார். கூட்டணியில் இல்லாத இந்த தருணத்தில் கூட விஜயகாந்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்புகிறது.
தமிழகமெங்கும் பருவ மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் 60 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழப்பும் ஏற்ப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வம்பு வழக்கு என்று நீதிமன்றங்களை சந்தித்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் தான் மக்களின் நினைப்பு வருகிறது அவருக்கு... எதிர்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் விஜயகாந்த் என்னவானார்.
கடந்த ஒரு வாரமாக செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விஜயகாந்த் பற்றி செய்தி ஏதாவது வருகிறதா என்று ஆவலும் பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.
அவரது சொந்த மாவட்டமான மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் மழைச் சேதமும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்கள் பலத்த மழைச் சேதத்தை சந்தித்திருக்கிறது. அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட இவர் வெளியில் வரவில்லையென்றால் மிகவும் வெட்ககேடு.
எதிரிகட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து நிவாரண பணிகள் நடக்கிறதா என்று கண்டறிந்தார். தற்போது கூட சென்னையில் பல இடங்களில் சுற்றிபார்த்து ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் விஜயகாந்த்.
தமிழகத்தின் ஒரு பெரிய பொறுப்பு வகிக்கும் விஜயகாந்த் இது போன்று மெத்தன போக்கை கடைபிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. ஒரு வேளை அம்மாவின் கைப்பாவையாக மாறிவிட்டாறோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.
பாருங்கள் தமிழகத்திற்கு வந்த சோதனை...!
கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை தான் அவருக்கு பார்க்கலாம் எப்படி அதை தாண்டி வருகிறார் என்று
ReplyDeleteசிந்திக்க வேண்டிய விஷயம் நண்பரே...
ReplyDeleteநல்ல பதிவு
//தமிழகத்தின் ஒரு பெரிய பொருப்பு வகிக்கும் விஜயகாந்த் இது போன்று மெத்தன போக்கை கடைபிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது
ReplyDelete//
உண்மைதான் ..
இன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்
இதில் அவரைச்சொல்லியும் குற்றமில்லை. அவருக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. உள்ளாட்சி தேர்தலில் வாங்கிய அடியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை போலிருக்கிறது.
ReplyDeleteஅவரது சொந்த மாவட்டமான மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் மழைச் சேதமும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்கள் பலத்த மழைச் சேதத்தை சந்தித்திருக்கிறது. அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட இவர் வெளியில் வரவில்லையென்றால் மிகவும் வெட்ககேடு.//
ReplyDeleteயோவ் மழைபெய்த ஜோர்ல ஓல்ட் மங் ரம் அடிச்சிட்டு கவுந்துட்டாராம், பொருப்புமிகு பதவியில் இருக்கும் அண்ணன்....!!!
அம்மாவுக்கு ஜால்ராவாவது போடலாம்ல...!!!
ReplyDelete////தமிழகத்தின் ஒரு பெரிய பொருப்பு வகிக்கும் விஜயகாந்த் இது போன்று மெத்தன போக்கை கடைபிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. ஒரு வேளை அம்மாவின் கைப்பாவையாக மாறிவிட்டாறோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.
ReplyDelete////
ஆமா கேப்டன் என்ன செய்கின்ரார் என்று புரியலை பேசாமல் சினிமாலயே இருந்திருக்கலாம்
மாப்ள சொன்னா கோச்சிக்காதீங்க நீங்க என்னைய போல இல்ல...நீங்க ஒரு வாத்தி...அதனால "பொறுப்புக்கு" "ரு" வருமா "று" வருமா...சரியா தெரியலபா...இருந்தாலும் பதிவு சூப்பர்!
ReplyDeleteமாப்ள சூப்பர் பதிவு இந்தாளு எங்க போனாருன்னே தெரியல... ஒருவேள செம டைட்டா...
ReplyDelete//////
ReplyDeleteவிக்கியுலகம் said... [Reply to comment]
மாப்ள சொன்னா கோச்சிக்காதீங்க நீங்க என்னைய போல இல்ல...நீங்க ஒரு வாத்தி...அதனால "பொறுப்புக்கு" "ரு" வருமா "று" வருமா...சரியா தெரியலபா...இருந்தாலும் பதிவு சூப்பர்!
///////////
“று“ இது தான் சரிங்க....
எங்கங்க தப்பு பண்ணியிருக்கேனோ பார்த்து சரிபண்ணிடுறேன் தல...
இப்படியெல்லாம் சொல்லகூடாது நாங்க அப்படிதா எப்பவாவுது
ReplyDeleteஇப்படியெல்லாம் சொல்லகூடாது நாங்க அப்படிதா எப்பவாவுது
ReplyDeleteஇப்படியெல்லாம் சொல்லகூடாது நாங்க அப்படிதா எப்பவாவுது
ReplyDeleteஆம்மல்ல , எங்கதான் போனாரு?
ReplyDeleteஒரு வேளை அம்மாவின் கைப்பாவையாக மாறிவிட்டாறோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.
ReplyDelete>>>>
விஜயகாந்த் அக்மார்க் அரசியல்வாதியா மாறி ரொம்ப நாள் ஆச்சு சகோ
இந்தாளெல்லாம் ஒரு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், வெட்கக் கேடு.
ReplyDeleteவருவாரு ஆனா வரமாட்டாரு
ReplyDeleteத.ம 7
உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர அடி! வேறென்ன செய்ய?!
ReplyDeleteதகுதி அற்றவர் தலைவர் ஆனால் என்னவாகும் என்பதற்கு விஜயகாந்த் ஒரு உதாரணம். வெறும் ஆசை மட்டும் நல்ல தலைவன் ஆவதற்கு போதாது. விஜயகாந்திற்கு நல்ல தலைவன் ஆகும் ஆசை இருக்கிறது, ஆனால் அதை அடையும் வழி தான் தெரியவில்லை. அவருக்கு சொல்லிகொடுக்கவும் ஆள் இல்லை. சொன்னாலும் அவர் கேட்பதுபோலும் இல்லை. பேச்சில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக கோமாளி கூத்து தான் நடத்தி கொண்டு இருக்கிறார். ஊர் ஊராக வாகனத்தில் மைக் பிடித்து பொளந்து கட்டிய மாவீரனுக்கு, சட்டசபையில் நான்கு பேர் முன்னிலையில் எதிர் கட்சி தலைவராக பேச தைரியம் இல்லை என்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு இவருக்கு முதல்வர் ஆசை.
ReplyDeleteஇவர் முதல்வர் ஆனால், குரங்கு கையில் பூமாலை போல தான் நாட்டின் நிலை ஆகும். ஏற்கனவே ரெண்டு பேய்களிடம் மாட்டிக்கொண்டு நாடு திண்டாடிக்கொண்டு இருக்கிறது. அது போதாதென்று இவர் வேறு.
அவரு பொறுப்பான எதிர் கட்சி தலைவரா இருப்பாருன்னு பார்த்தால், வீட்டிலேயே இல்லை முடங்கியிருக்கார்.
ReplyDeleteஏறக்குறைய உங்கள் கருத்தே என்னுடையதும்.
அவரு வாய தொறந்தா அவருக்கு ஜாமீன் நீங்க வங்கிக் குடுப்பீங்களா என்ன?
ReplyDeleteஉள்ளபோனா அவ்வளவுதான் அம்மா லாடம் கட்டிடுவங்கன்னு தெரியும்,
புலி பதுங்கி இருக்குபா
நேரம் வந்தா பாயும் (ஆனா சரக்கடிச்சிருந்தா என்ன பண்றது?)
இருங்கப்பா, வெள்ளாமெல்லாம் வடியட்டும்..., கண்டிப்பா வருவார்
ReplyDeleteசேர்ந்த இடம் அப்படி...
ReplyDeleteமுதலில் அவர் அரசியல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. படித்த பலருக்கே அரசியலின் உயிர் எழுத்து மட்டுமே தெரியும் பொழுது இவர் தினறுவதில் சந்தேகம் என்ன இருக்கிறது..
ReplyDeleteபதிவு நல்லா இருக்கு
ReplyDelete