நான் எந்த ஜாதி என்று
என் பக்கத்து வீட்டுக்காரர்
தெரிந்துக் கொண்டார்...
இதுவரை இருந்த விசாரிப்புகள்
தற்போது இல்லை...
இருவருக்குமான பண்டமாற்று முறை
முடிவுக்கு வந்து விட்டது..
அவர்வீட்டுக்கு அடையாளம் சொல்ல
என் வீட்டு முகவரியை பயன்படுத்துவதில்லை...
அவர் மனைவிக்கு உத்தரவுகள் இல்லை
என் மனைவியோடு பேச...
அவரது பிள்ளைகளுக்கு
வார்த்தையால் விளங்கு பூட்டிவிட்டார்
என் பிள்ளைகளோடு விளையாடக்கூடாது என்று...
எனக்காக சிறு புன்னகையைக்கூட
பூக்க மறுக்கிற அவரது உதடுகள்..
பார்ப்பது கூட பாவம் என்று
உயர்த்திக்கொண்டார் மதில்சுவரை..
கடைசியாய்
என்ன செய்யப்போகிறார்...!
என்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
உங்கள் உணர்வுகளை வாக்காகவோ.. வார்த்தையாகவோ..
பதிந்து விட்டுச்செல்லுங்கள்... உயிர் பெறும் இந்த கவிதை...
(Re-Post)
முதல் ரசிகன்,, கவிதை நல்லாருக்கு, லேபிளில் சமுக அவலம், - சமூக அவலம், என மாற்றவும்
ReplyDeleteமறுக்கமுடியாத மனிதப் பிழைகளை மிக அழகாக
ReplyDeleteசிந்திக்கும் விதமாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா..
அருமை.
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்ன்னு அன்னிக்கே ஒரு புண்ணியவான் சொன்னதை மறந்துடறாங்க... மனதைத் தொட்டன கவிதையின் கடைசி இரண்டு வரிகள். அருமை சௌந்தர் சார்...
ReplyDeleteஅருமை சவுந்தர்....
ReplyDelete:)
நல்ல கேள்வி தான் ஆனா என்ன பண்றது பிடிவாதமா இருக்குறவங்களை?
ReplyDeleteரொம்ப யதார்த்தமான கவிதை சௌந்தர்....
ReplyDeleteஅழகா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்....
தோழா,
ReplyDeleteஉண்மைதான்
அவன் தன்னைத்தானே சிறையிட்டுக் கொண்டான். வருந்தாதே நீ சுதந்திரப் பறவை
இந்த கவிதைதான் உங்கள் தளத்தில் நான் வாசித்த முதல் கவிதை என்று நினைக்கிறேன். கருத்துக்கள் அருமை.
ReplyDeleteசூப்பர் மாப்ள...
ReplyDeleteவடித்த கவிதை நன்று
ReplyDeleteவழங்கிய முடிவும் அதைவிட
நன்று சகோ!
புலவர் சா இராமாநுசம்
அந்த படம் கவிதைக்கு இன்னும் பொருள் சேர்க்கிறது.
ReplyDeleteம்.என்ன செய்ய இது போன்ற மனிதர்(?)"களை"
நல்ல கேள்வி..
ReplyDeleteஒரு யதார்த்த கவிதை..
நன்றி..
அழகான கவிதை நண்பா... படம் பொருத்தம்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
இது தானேய்யா உலகம்!
ReplyDeleteஅருமையான கவிதைபாஸ் உங்கள் கவிதை ஓவ்வொன்றிலும் ஓரு தனித்துவம் தெரியும்...வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteநான் எந்த ஜாதி என்று
ReplyDeleteஎன் பக்கத்து வீட்டுக்காரர்
தெரிந்துக் கொண்டார்...
இதுவரை இருந்த விசாரிப்புகள்
தற்போது இல்லை...//
ச்சே என்னா மனுஷ பொழைப்புய்யா...!!!
என்நிலத்திலும்
ReplyDeleteவேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...//
அதையும் வெட்டி போட ஆளை அனுப்பினாலும் அனுப்புவான் மானங்கெட்ட இம்மாதிரி மனிதன்...!!!
தீண்டாமையை பற்றி மிக அழகாக கவிதை நடையில் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeletearumai.... vaazhuthukkal.....www.rishvan.com
ReplyDeleteகவிதை மிக அருமை...
ReplyDeleteவாழ்த்துகள்... நண்பா....
கடைசியாய்
ReplyDeleteஎன்ன செய்யப்போகிறார்...!
என்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி
வளர்ந்திருக்கும்
அவருடைய மாமரத்தை...
நிதர்சனம்..
சிறுமை குணம் கொண்ட மனிதனை உங்கள் கவிதை தோலுரித்து காடுகிறது . வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteத ம 11
ReplyDeleteவெட்டி விடுவாரோ?!
ReplyDeleteத.ம.12
எத்தனை பாரதி வந்தாலும் நம் நாட்டில் தீண்டாமை ஒழியாது போல... சின்னதனமான மனிதனை வாரி விட்டிருக்கிறது கவிதை கலக்கலாக...
ReplyDeleteபொருள் பொதிந்த ஒரு அருமையான கவிதை.;
ReplyDeleteநெத்தியடி கேள்வி ,குணத்தில் அவர்கள் தாழ்ந்தவர்கள் ,வேறு என்ன சொல்ல
ReplyDeleteஇதைவிட நம் குணங்களை எப்படிச் சொல்ல முடியும்.அருமை சௌந்தர் !
ReplyDeleteஅருமை..நெத்தியடி ....
ReplyDelete