அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வெளிவந்தன. அன்றைய ரசிகர்கள் திரைப்படங்களை பகுத்துப் பார்க்கத்தெரியாமல் அல்லது படத்தைப்பற்றிய போதிய தொழிற்நுட்பம் பற்றிய தகவலும் அதிகம் அறியாமல் இருந்தனர். அதனால் அன்றைய படங்களுககு அதிகமான விமர்சனங்கள் எழவில்லை..!
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சாதாரண ரசிகன் வரை படம் எப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அந்த கடைசி ரசிகனையும் திருப்பிப்படுத்துகிற திரைப்படங்கள் மட்டுமே இந்த தமிழ் சினிமாவை அலங்கரிக்கிறது.
பல்வேறு விமர்சகர்கள் வந்துவிட்டப்பிறகு (இணையம், செய்திதாள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சி, போன்றவை) படம் வந்த அன்றைய தினமே படங்களை பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள். ஒரு படம் சரியில்லையென்றால் அதை தூக்கிகுப்பையில் போடவும்.. ஒரு படம் சரியாக இருந்தால் அதை மகுடத்தில் வைத்து கொண்டாடவும் தயங்குவதில்லை.
முகமூடி படம் மூலம் மிகவும் விமர்சிக்கப்பட்ட மிஸ்கின்... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் மூலம் மீண்டும் கொண்டாடப்பட வேண்டியவராகிவிட்டார்.
படம் துவங்கியவுடன் டைட்டலில் படத்தின் பெயர் மற்றும் இசைக்காக இளையராஜா பெயர் மட்டுமே போடப்படுகிறது. (நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள்.. ஏன் மிஸ்கின் பெயர் கூட இடம்பெயரவில்லை)
சந்துரு... ஒரு மருத்துவகல்லூரி மாணவர் (சந்துருவாக ஸ்ரீ) இரவில் தான்வரும் வழியில் குண்டடிப்பட்டு விழுந்து கிடக்கும் ஒருவரை காப்பாற்ற பல்வேறு மருத்துவமனைகளை அனுகுகிறார்... ஆனால் அவர்கள் போலீஸ்... கேஸ்... என்று பயமுறுத்த மருத்துவ உபகரணங்களை வாங்கி தானே வீட்டில் அவருடைய HOD-யின் ஆலோசைனையின் பேரில் தானே ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றுகிறார். (முதல் 40 நிமிட படம் இதுதான்... சுவாரஸ்யமும் கூட)
காப்பாற்றிய நபர் விடிந்துப்பார்த்தால் காணவில்லை. அதன்பிறகுதான் தெரிகிறது அவர் 14 கொலைகள் செய்து... போலீஸ் என்கவுண்டருக்கு ஆளான “உல்ப்” என்று தெரியவருகிறது. உல்ப் கதாபாத்திரத்தில் மிஸ்கின்.
பின்பு ஸ்ரீ கைதுசெய்யப்பட்டு ஸ்ரீவை வைத்தே மிஸ்கினை சுட்டுத்தள்ள காவல்துறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீயை கூட வைத்துக்கொண்டு மிஸ்கின் எப்படி போலீஸ் படையை ஏமாற்றுகிறார் என்று படம் நீள்கிறது...
குருடாக இருக்கும் ஒருகுடும்பத்தை மூன்று நபர்களை காப்பாற்ற படம் முழுக்க அவர்செய்யும் அதிரடிகள்... யார் அந்த குருடர்கள் ஏன் காப்பாற்ற வேண்டும்... இறுதியாக ஸ்ரீ-யோ உல்ப்-க்கு எதனால் உதவுகிறான் என்று ஒரே இரவுக்குள் விவரிக்கப்பட்டிருக்கும் கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
படத்தைப்பற்றி இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல் இருக்கிறது. அப்படி மீதிக்கதையும் சொல்லிவிட்டால் படிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
படம் முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை வீதிகளை.. சாலைகளை.. சந்துபொந்து என அத்தனையையும் இரவில் எப்படியிருக்கும் என்று காட்டிவிட்டார்.
மிகநீளமான கதையாக இல்லாவிட்டாலும் மிகச்சிறியக்கதையை எங்கும் தோய்வில்லாமல் கொண்டுசென்ற விதம் மிரமிக்கவைக்கிறது. கேமரா ஆங்கிள்.. காட்சி அமைப்பு.. லைட்டிங் என எதையும் குறைசொல்ல முடியவில்லை... நிறைய காட்சிகள் ஒரே டேக்கில் படமாக்கியிருப்பது சிறப்பு.
மிகப்பெரிய நடிகர் பட்டாளமோ.. ஆடல் பாடல்களோ நகைச்சுவையோ இந்த படத்தில் இல்லை அதற்காக படத்தை தரமற்றதாக உள்ளது என்று சொல்லிவிட முடியாது. இருக்கும் களத்தில் இருந்துக்கொண்டு போராடுவதில்தான் வெற்றி இருக்கிறது.
இரவு முழுவதும் போலீஸ்... ரவுடி கும்பல்... கூட இருக்கும் ஸ்ரீ என அனைவரும் மிஸ்கினை கொல்ல தீவிரமாக தேடுகிறார்கள். ஏன் அவரை கொலை செய்ய துடிக்கிறார்கள்... அவற்றில் இருந்து எப்படி அவர் தப்பிக்கிறார் என்பது சுவாரஸ்யம். (காட்சிக்கு காட்சி சுட்டுத்தள்ளுதல்... கழுத்தை அறுத்தல் என படம் செல்வதால் குழந்தைகள் இப்படத்தை தவிர்க்கவும்).
இடைவேளைக்கு பிறகு ஒரு பெரிய பிளாஸ்பேக் கதைவரும் என்று நினைத்து படம்பார்க்கையில்... எதற்காக இப்படி நடந்துக்கொள்கிறேன் என்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதுவும் ஒரே ஷாட்டில் கதையை சுருக்கமாக சொல்லி முடித்து கண்கலங்க வைக்கிறார் மிஸ்கின். (அந்த காட்சியை பார்க்க வில்லையென்றால்.. சரியாக புரிந்துக்கொள்ள வில்லையென்றால் படம் புரியாது)
இசை...! பட டைட்டலில் முன்னணி இசை இளையராஜா என போடுகிறார்கள்... உண்மையில் பின்னணி இசையில் தான்தான் முன்னணி இசையமைப்பாளர் என்று நிருபித்துவிட்டார். இசைதவிர்த்து படத்தை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.
படம்பார்த்துவிட்டு வெளியில் வரும்போதும்கூட இசை நம்மை பின்தொடர்கிற அளவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதுதான் உணரமுடிகிறது. (என்னை தூங்க விடாமல் செய்த அன்பே சிவம், எவனோ ஒருவன், நந்தலாலா, சேது போன்ற ஒருசில படவரிசையில் இந்த படத்தையும் இணைத்துக்கொள்கிறேன்.)
தயவு செய்து பொழுதுபோக்குவதற்காக இந்தபடத்தை காண செல்லாதீர்கள். சினிமாவை ரசிப்பவர்கள், வித்தியாசமான சினிமாவை காண விரும்புபவர்கள், விமர்சகர்கள், எதிர்கால சினிமா ஆசைஉள்ளவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்...
ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது அந்த ஈரத்தின் பிரிதிபலிப்புதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
விமர்சனம் ஓகே... பிழைகள் அதிகம் உள்ளது... கவனிக்கவும்...
ReplyDeleteஇரண்டு முறை படித்து திருத்தி விட்டேன்...
Deleteஇன்னும் இருக்கிறதா என்று எனக்கு புலப்படவில்லை...
நான் சொல்ல நினைத்ததை DD சொல்லிவிட்டார்.
ReplyDeleteஅதுவும் "குண்டடி பட்டு" என்பது "குண்டிப் பட்டு" என இருப்பதெல்லாம் ஓவர். ரெண்டு மூணு முறை proof பார்த்து விட்டு publish செய்யவும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
Deleteமூன்று முறை படித்தாகிவிட்டது...
பிழைகள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை..
படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதும் உணரமுடிகிறது.
Deleteஅருமையான விமர்சனம் . நாளையே பார்க்கின்றேன். நன்றி
ReplyDeletegood review
ReplyDeleteவேலூர் மாவட்ட்த்தில் உள்ள ஒரு சிறிய ஊரிலிருந்து எழுதுகிறேன். எங்கள் ஊரில் இரண்டு தியேட்டர்கள் மட்டுமே உள்ளன. இரண்டுமே ஒரே காம்ப்ளக்ஸில்தான் உள்ளன. அதில்தான் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 11.10.2013 –ல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரையிடப்பட்டது. மறு நாள் 12.10.2013 மாலைக் காட்சிக்காக 6 மணியளவில் அவசர அவசரமாய் (ஆயுத பூஜை விடுமுறை அன்று என்பதால்) டிக்கட் கிடைக்குமா? என்ற டென்ஷனோடு சென்ற போது தியேட்டர் முன் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. வண்டியை பார்க் செய்து விட்டு ‘படம் போட்டாச்சா?’ எனக் கேட்டதில் டோக்கன் கொடுப்பவன் “எந்த படம் ராஜா ராணியா? இல்லை ஓணானா?” என தப்புத் தப்பாய் பதிலைக் கேள்வியாய் கேட்டான். “ஓநாய்” என நான் சொல்ல “இன்னும் இல்லை” என்று சொல்லி காசை வாங்கிக் கொண்டான்.
ReplyDeleteகவுண்டரிலும் இதே கதைதான். டிக்கட்டைக் கொடுத்து விட்டு கூடவே உபரியாய் அங்கே ஒரு தகவல் சொல்லப்பட்டது. “இதுவரை ஓநாய் பட டிக்கட் எதுவும் விற்கவில்லை. ஒரு பத்து டிக்கட்டாவது போனால்தான் படம் போடப்படும்” என அதிர்ச்சி தகவல் சொல்லப்பட்ட போது மாலை மணி 6.12. அதன் பின் என் நண்பர்களுக்கு நான் போனில் தகவல் சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தேன்.
மணி 6.35க்கு முன்னால் நின்று கொண்டிருந்த என்னை படம் ஆரம்பிப்பதாக அழைத்தார்கள். தியேட்டருக்குள் இடைவேளையின் போது எண்ணி பார்த்த போது மொத்தம் 14 பேர்கள்தான் இருந்தார்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை ஓட்டம் .. ஓட்டம் என பரபரப்பாய் செல்லும் கதை. கடைசி வரை சற்றும் வேகம் குறையாத காட்சி அமைப்புக்கள்.
முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதையிலும் இருட்டிலேயே மிக நுட்பமான விஷயத்தைக் கூட விட்டு வைக்காத ஒளிப்பதிவு.
கதையின் விறுவிறுப்பான ஓட்டத்துக்கு ஏற்ப முன்னணி இசை என்று டைட்டிலில் சொல்லப்பட்ட இளையராஜாவின் பின்னணி இசை.
இடையிடையே தலைகாட்டும் மெல்லிய நகைச்சுவை.
தன் பாடி லேங்குவேஜ் மற்றும் ஆக்ஷனில் மிரட்டும் ஹீரோ.
இத்தனை நல்ல பல விஷயங்கள் இருந்தும் ஏன் மக்களை இந்த படம் ஏன் ரீச் ஆகவில்லை?
ஒரு நல்ல சினிமாவுக்கு ஏன் இப்படி ஒரு வரவேற்பு?
படத்தின் தலைப்பா?
படத்தில் சூர்யா, விஜய், கார்த்திக், தனுஷ் ... போன்ற நாயகர்கள் இல்லை என்பதாலா?
அழுகும் காட்சியிலும் கூட கவர்ச்சி காட்டும் கதாநாயகிகள் இல்லாததாலா”
மரத்தை சுற்றி ஒரு டூயட்டும், வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் இன்னொரு டூயட்டும் வைக்காததாலா?
விவேக்,சந்தானம், சூரி... காமெடிக்காய் தனி டிராக் இல்லாததாலா?
இவை எல்லாம் இல்லாததால்தான் படம் நம்மையும் இழுத்துக் கொண்டு போவதை புரிந்து கொள்ள மறுத்த வினியோகஸ்தர்களால்தான். இந்த படத்துக்கு இந்த கதி.
இந்த மாதிரி எல்லாம் சில சமயம் முயற்சித்த கமலஹாசன் கூட காம்ப்ரமைஸ் பண்ணித்தான் சினிமாவில் வாழ வேண்டியிருக்கிறது.
மிஷ்கின் இனி என்ன செய்வார் என்பது தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் அவருக்கென்று என்ன தோணுகிறதோ அதைத்தான் அவர் செய்வார்.
ஆனால் அவருக்குள் இருக்கும் நல்ல படைப்புத் திறனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். கூடவே படத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவது கூட நாம் அவருக்கு செய்யும் மரியாதை.